என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாதனைகளை"
- கனிமொழி எம்.பி. பேச்சு
- ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் பிறந்தநாள் நிகழ்வுகளை ஓராண்டுக்கு தி.மு.க. மற்றும் அரசு சார்பில் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டி ருக்கிறார். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசும்போது வரும் நாடாளு மன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளார். யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தேர்தல் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவதுதான் கலைஞருக்கு நாம் தரும் நூற்றாண்டு பரிசாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
சிலர் இந்த பகுதி எல்லாம் வெற்றி பெற்று விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அக்கனவு பலிக்காது. இங்கு மீண்டும் தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை தவிர யாரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு ஆய்வு நடத்தி இருக்கி றோம். தி.மு.க. மகளிர் அணியில் இன்னும் அதிகமான பெண்களை இணைக்க வேண்டும். அவர்களை செயல்பட கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு தர வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தி.மு.க.வில் அரசியலை தொடங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா வழியில் வந்த தி.மு.க. அரசு தமிழ கத்தின் சுயமரியாதையை என்றும் காக்கும். தமிழகத்தின் உரிமை மற்றும் அதன் அடையாளத்தை பாதுகாப்பதில் தி.மு.க. அரசுக்கு நிகர் யாருமில்லை என்பது மக்களுக்கு தெரி யும். தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்ல கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மூலம் வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது. எதிர் அணியினர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பு கிறார்கள். அதை முறிய டிக்கும் வகையில் நாம் நேரடியாக மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்துக்கூற வேண்டும். கட்சிப்பிரதிநிதிகள், தொண்டர்கள் தேர்த லுக்கான பணிகளை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதி யில் உள்ள கலைஞர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநக ராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் ஜோசப் ஸ்டாலின், நசரேத் பசலி யான், தில்லை செல்வம், பாபு வினி பிரட், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வந்த கனிமொழி எம்.பி.க்கு நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்கள் மற்றும் ஏழை களுக்கு தி.மு.க.பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழ்நாடு வளர்ச்சி பணியில் ஒரு முன் உதாரணமாக விளங்கி வரு கிறது. தமிழக கவர்னர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வரு கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் கருத்துக் களை தெரிவித்து வருகிறார். இதனை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தும் கவர்னர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்