என் மலர்
நீங்கள் தேடியது "ஜாமீனில்"
- அன்னதானப்பட்டி போலீஸ் நிலை–யத்தில் வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
- வழிப்பறியில் ஈடுபட்ட மணிகண்டனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்த–னர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலையை சேர்ந்த–வர் மணிகண்டன் (வயது 30). இவர் மீது அன்னதானப்பட்டி போலீஸ் நிலை–யத்தில் வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதனால் அன்னதா னப்பட்டி போலீசார், அவரை கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி கைது செய்தனர். அப்போது ஓராண்டுக்கு எந்த குற்றங்களிலும் ஈடுபட மாட்டேன் என அவர் உறுதிமொழி பத்திரம் வழங்கினார். இதனால் கைது நடவடிக்கையை போலீசார் கைவிட்டனர்.
இந்த நிலை–யில் கடந்த வாரம் தாதகாப்பட்டி–யில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட மணிகண்டனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்த–னர். உறுதி–மொழியை மீறி குற்றத்தில் ஈடுபட்ட–தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார், துணை கமிஷனரிடம் பரிந்துரைத்தனர்.
அதை ஏற்று, மணிகண்டனை அடுத்த வருடம் ஜூலை மாதம் 12-ந்தேதி வரை ஜாமீனில் வர தடைவிதித்து துணை கமிஷனர் லாவண்யா உத்தரவிட்டார். அந்த உத்தரவு சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வனிடம் வழங்கப்பட்டது.