என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் அறுவடை எந்திரம்"

    • நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.
    • 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த பெரியப்பட்டுபகுதியைச் சேர்ந்த அன்பரசன் (வயது 36). இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருக்கு பாணுப்பிரியா (29) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். பின்னர் 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இவரது மனைவி பாணுப்பிரியா நெல் அறுவடை இயந்திர உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் வேலைக்கு வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாணுப்பிரியா திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தலை துண்டாகி துடிதுடித்து இறந்தார்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையம் மேலகொட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சித்ரா (வயது 35). இவர் நெல் அறுவடை பணிக்கு சென்று வந்தார். 

    நேற்று மாலை மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவிமங்கலம் வயலில் நடைபெற்று வந்த அறுவடை பணியில் ஈடுபட்டார். அங்கு அறுவடை எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பணியில் ஈடுபட்டிருந்த சித்ராவின் சேலை திடீரென அறுவடை எந்திரத்தில் சிக்கிக் கொண்டது. அதனை எடுக்க முயல்வதற்குள் சித்ராவின் தலை எந்திரத்தில் சிக்கியதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். எந்திரத்தின் சத்தம் அதிகமாக இருந்ததால், சித்ரா சிக்கியதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த யாரும் கவனிக்க வில்லை. 

    இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    பின்னர் சித்ரா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அறுவடை எந்திரத்தின் டிரைவர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
    ×