என் மலர்
நீங்கள் தேடியது "திருவள்ளுவர் சிலை"
- கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
- சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடலின் நடுவே நிறுவப்பட்டுள்ளதால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும்.
இதன் மூலம் சிலை உப்புக் காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக தற்போது சிலையை சுற்றிலும் காகிதகூழ் ஓட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிலையின் மீது ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். சிலையில் ஒட்டப்படும் காகிதகூழ் பி.எச். வேல்யூ 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதகூழ் மழையில் நனைந்து தண்ணீரில் கரைந்து சேதமடைந்து விட்டன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதகூழ் ஒட்டப்பட்டு அதன் பின்னர்தான் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கடந்த 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கிடையே கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளதால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.
- திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.
- திருவள்ளுவர் சிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவுபெறும் என்று கூறப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளன.
திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்ப தற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப்பணிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து உயர் மட்ட குழுவினர் திருவள்ளு வர் சிலையை சென்று பார்வையிட்டனர். பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயனக் கலவை பூசுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதையடுத்து ரசாயானக்கலவை பூசும்பணி கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக திருவள்ளுவர் சிலையில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டது. தொடர்ந்து தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு காகித கூழ் பூசும் பணி தொடங்கியது. இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்ததால் காகித கூழ் கரைந்து நாசமானது. இதைத் தொடர்ந்து மழையினால் காகித கூழ் பூசும்பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் மழை ஓய்ந்ததை தொடர்ந்து தற்போது சிலையின் தலைப்பாகத்தில் காகிதக்கூழ் பூசும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 நாட்கள் காகிதக்கூழ் பூசப்பட்டு மீண்டும் தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்படும்.
இதைத்தொடர்ந்து பாலி சிலிக்கான் என்னும் ரசாயனக்கலவை பூசும்பணி நடைபெறும். இங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் நேரில் பார்வையிட்டுச் செல்கின்றனர். திருவள்ளுவர் சிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவுபெறும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
- பொங்கல் பண்டிகை அன்று சுற்றுலாப் பயணிகள் சிலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுஉள்ளது.
இந்த சிலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது பராமரிப்புபணிகள் நடை பெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிலை முழுவதும் காகித கூழ் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் எப்பொழுதும் கருப்பு நிறத்தில் காணப்படும் சிலை தற்போது வெள்ளை நிறத்தில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளிக்கின்றனர்.
சிலையின் பராமரிப்பு பணி முடிவடைந்து வரு கின்ற பொங்கல் பண்டிகை அன்று சுற்றுலாப் பயணிகள் சிலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
- திருவள்ளுவர் சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
- திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்புத்தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
அதன்படி தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன்மாதம் முதல் 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய், சுண்ணாம்பு, பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், மத்திய மின் வேதியியல் ஆய்வக தலைமை விஞ்ஞானி டாக்டர் சரஸ்வதி, விஞ்ஞானி டாக்டர் அருண் சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக திட்ட பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி (பொறுப்பு) சதீஷ்குமார், ஒப்பந்தக்காரர் ராஜன் உள்பட தொல்லியல் துறை வல்லுனர்கள் மற்றும் காரைக்குடியை சேர்ந்த கெமிக்கல் நிறுவன வல்லுநர்கள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்புத்தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பிறகு சோதனை முறையில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
பின்னர் வல்லுனர் குழுவினர் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்னும் 15 நாட்களில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்து திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சாரம் பிரிக்கும் பணி தீவிரம்
- பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.
இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.தற்போது ரூ.1கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று உள்ளது.
இந்த பணி நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி ரசாயன கலவை பூசும் பணி முடிவடையும் வரை திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் இப்பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
முதல்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்த 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்த கட்டமாக ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருந்த கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய் சுண்ணாம்பு பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருவள்ளுவர்சிலையில் படிந்து உள்ள உப்பு தன்மையை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்ட காகித கூழ் பூசும்பணி நடைபெற்றது. அதற்கு அடுத்த கட்டமாக சிலையில் மீண்டும் நல்ல தண்ணீர் பாய்ச்சி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. இறதி கட்டமாகரசாயன கலவை பூசும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லுநர்கள் குழு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆய்வு செய்தனர். அப்போதுஅந்த குழுவினர் திருவள்ளூர் சிலையில் படிந்துள்ள உப்பு தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்று பரிசோதித்துப் பார்த்தனர். அதன் பிறகு திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும்பணி நடந்து வந்தது. திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசம் பணி தற்போது நிறைவடைந்து உள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது 145அடி உயரத் துக்கு அமைக்கப்பட்டு இருந்த சாரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த சாரம் பிரிக்கும்பணி நிறைவடைந்தும்பொங்கல் பண்டிகை முதல்திருவள்ளு வர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருவள்ளுவர் சிலை நிறுவிய ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
- கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் மாதிரி திருவள்ளுவர் சிலையை வைத்து அதற்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.
இந்த சிலையை கடந்த 2000 ஆண்டு ஜனவரி 1-ந்தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும்போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவிய 22-வது ஆண்டுவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருவள்ளுவர் சிலை நிறுவிய ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் மாதிரி திருவள்ளுவர் சிலையை வைத்து அதற்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்றம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.
- கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
- பாலத்தின் மீது நடந்து செல்லும் போது நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்ட பம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வை யிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேகண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துஉள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுஉள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது.இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி இன்றுகாலை தொடங்கியது.விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி. க்கு அனுப்பி பாறைகளின் சிறத்தன்மையை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகு விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப் பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கினார்.
- திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கியது.
- ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.
அதன்படி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கியது. அப்போது சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.
அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "வாக்கர்" எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது.
தற்போது ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது. இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு இன்னும் ஒரு சில நாட்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதையடுத்து மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திருவள்ளுவர் சிலை வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
- கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
- படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குடியரசு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப் பட்டு உள்ளது.கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகிறார்கள். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48கடற்கரை கிராமங்களி லும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கி றார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- உயர்நீதிமன்ற நீதிபதி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் கிராமத்தில் திருவள்ளுவர் உருவசிலை திறப்பு விழா அமைப்பு குழு தலைவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஏகாச்சாரம் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகச் செயலாளர் கண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் டி.கே.மூர்த்தி, சாம்பசிவன், அருனகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர். முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.
- வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.
- குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வி.ஜி.சந்தோஷம், மல்லைத் தமிழ் சங்கம் தலைவரும், மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
இதேபோல், குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக குஜராத் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.