என் மலர்
முகப்பு » மறவன்குடியிருப்பு
நீங்கள் தேடியது "மறவன்குடியிருப்பு"
- மறவன் குடியிருப்பில் 1750-ம் ஆண்டு முதல் தஸ்நேவிஸ் மாதா ஆலயம் செயல்பட்டு வருகிறது.
- மறவன்குடியிருப்பு மக்கள் 1920-ம் ஆண்டு முதல் 30 குடும்பங்கள் 30 நாட்கள் சிறப்பிக்கும் முறையை இந்தியாவில் முதன் முறையாக தொடங்கினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் மறவன் குடியிருப்பில் 1750-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தஸ்நேவிஸ் மாதா ஆலயத்தில் 1815-ம் ஆண்டு முதல் மாதா வணக்க மாதம் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. போர்ச்சுக்கல் நாட்டில் 1900 களில் மே மாதத்தில் 30 நாட்கள் 30 குடும்பங்கள் சிறப்பிப்பதை பார்த்த மறவன்குடியிருப்பு மக்கள் 1920-ம் ஆண்டு முதல் 30 குடும்பங்கள் 30 நாட்கள் சிறப்பிக்கும் முறையை இந்தியாவில் முதன் முறை யாக தொடங்கினர்.
அவ்வாறு 1920-ல் தொடங்கி இன்று வரை ஒரு நூற்றாண்டாக மே மாதத்தை மிகவும் சிறப்பாக சிறப்பித்து வருவதை கொண்டாடும் வகையில் மாதாவுக்கு அழகான விழா தூண் அமைக்கப்பட்டுள்ளது. விழா துணை பாளையங் கோட்டை ஆயர் ஜூடு பால்ராஜ் அர்ச்சித்து திறந்து வைத்தார்.
×
X