என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளாத்திகுளம்"
- நாட்டுப் படகுமூலம் மர்ம நபர்கள் கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகள் வழியாக இலங்கைக்கு அவ்வப்போது படகுமூலம் பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க மாவட்ட கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக படகுமூலம் பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ குமார், இசக்கிமுத்து, காவலர் பழனிபாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு வேம்பார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அக்கறை என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் நாட்டுப் படகுமூலம் மர்ம நபர்கள் கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர், பிடிபட்ட நபர்கள் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டை பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதாக முயன்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து எஸ் நிரோன் என்ற நாட்டுப் படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி, சுனாமி காலனியை சேர்ந்த கெனிஸ்டன்(வயது29), ராம்தாஸ்நகர் பொன்சிஸ் ராஜா(37), சிலுவைபட்டி பனிமயகார்வின்(19), கருப்பசாமிநகர் மாதவன்(21) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்மாந்தை, வடக்கு செவல், கே.குமரெட்டி யாபுரம், எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களில் சமு தாய நலக்கூடம், அங்கன் வாடி மையம் மற்றும் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்ட த்தின் கீழ் தலா ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்மாந்தை, கே. குமரெட்டி யாபுரம் கிரா மத்தில் பயணியர் நிழற்குடை, கீழ விளாத்தி குளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் 2021-22 திட்டத்தில் ரூ. 6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை மற்றும் எட்டயபுரம் பேரூ ராட்சி 3, 15-வது வார்டு பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மே ம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, மார்க் கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், தாசில் தார்கள் ராமகிருஷ்ணன், மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல், மாநில நெச வாளர் அணி செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், நவநீத கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா கண்ணு, விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமை ப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை தொடங்கி வைத்தார்.
- கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பெண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட 18-ம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த கைப்பந்து அணியினர் கலந்து கொண்டனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை தொடங்கி வைத்தார். கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பெண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் சக்கலா சுரேந்திர பாபு, மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ், நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் திருமாறன், தொழிலதிபர் ராஜங்கம் சீனிவாசன், தேசிய பிச் வாலிபால் தலைவர் சோலைராஜ், ஆல்ரின், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், கந்தவேல், கிராம நிர்வாக அலுவலர்கள், மகேஷ், ஜான்சி பேபி, படர்ந்த புளி மேலாளர், லியா கைப்பந்து கழக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
- வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள பொன் மாடசாமி கோவில் வைகாசி கொடை விழாவை முன்னிட்டு முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன.
போட்டியானது சிறிய மாடுகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்ப ட்டது. பின்னர் இப்போ ட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையா ளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது. திருவிழா வையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பொது மக்கள் கூடியிருந்து கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் விழா கமிட்டியினர் ராமர், மாடசாமி, காசி, செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள்,கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- முத்துப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
- விழாவில் கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 9.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் (கிழக்கு ), மும்மூர்த்தி (மேற்கு ), மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஊராட்சி தலைவர் மகாலட்சுமி கண்ணன், புதூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வெற்றிவேல், ஒன்றிய துணை செயலாளர் கொப்பையா, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ், கிளை செயலாளர்கள் பாண்டிய ராஜன், வடிவேல்ராஜ், கருப்பசாமி, செல்லபாண்டியன் ஒன்றிய பொறியாளர் தமிழ் செல்வன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்களுக்கு மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
விளாத்திகுளம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, கோடைகாலத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டில் நீர், மோர் பந்தலை விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செய லாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செய லாளர் அன்புராஜன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞான குருசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பஸ் நிலையம்
விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர், பழ ரசம், இளநீர், தண்ணீர் பழம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், பேரூராட்சி தலைவர் அயன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, சமூக வலைத்தள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராள மான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- அயன்பொம்மையாபுரம் கிராமத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கி வைக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வேலுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் அயன்பொம்மையாபுரம் கிராமத்திலும், விளாத்திகுளம் பேரூராட்சி 3- வது வார்டு பகுதியிலும் உறுப்பினர் சேர்க்கை பணியினை தொடங்கி வைத்தனர்.
இதில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி தலைவர் சித்ரா முத்துராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, கலை இலக்கிய அணி சேதுராஜன், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, கிளை செயலாளர்கள் முருகன், கந்தவேல், ரத்தினசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தொ.மு.ச. சுப்பையா, சிந்தலக்கரை சாமி, சுப்புராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி கனகவேல், ஒன்றிய அவைத்தலைவர் தர்மராஜ், பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர் பாலம்மாள் தங்கராஜ் உட்பட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குரங்குகள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம்- கோவில்பட்டி செல்லும் சாலையில் 13-வது வார்டு பகுதி உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், அவற்றின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவை வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கி செல்கின்றன. அவைகளை விரட்ட முயற்சிப்பவர்களின் மீது பாய்ந்து கடித்து காயப்படுத்துகின்றன.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள தென்னை, மாதுளை, கொய்யா போன்ற மரங்களில் ஏறி, காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. மேலும் இந்த பகுதியில் ஒரு வருட காலமாக இந்த குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால் வீடுகளில் அச்சத்துடன் முடங்கி உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வா கத்திற்கும், வனத்துறை அலுவலகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடந்தது.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், நகர தி.மு.க செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் தமிழரசி, ஜெயராணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க நிதியுடன் விளாத்திகுளம் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி, கிராம மேம்பாட்டு திட்டம், மரங்கள் மக்கள் இயக்கம் மற்றும் ரம்யா தட்டச்சு பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்த கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், டாக்டர் அனிதா மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் நடைபெற்றது.
- ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் கட்டா பிரிவு, சண்டை பிரிவில் பங்கேற்றனர்.
விளாத்திகுளம்:
கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் கட்டா பிரிவு, சண்டை பிரிவில் பங்கேற்றனர். அதில் 8 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.போட்டிக்கு சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ-இந்திய நிறுவன தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் நடுவராக செயல்பட்டார்.
கராத்தே போட்டியில் வெற்றி பெற்று பதங்கங்களை வென்ற மாணவ, மாணவிகளை அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பள்ளி இயக்குனர் இந்திரா ராமராஜி, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
- இளம்புவனம் கிராமத்தில் நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
- எட்டயபுரத்தில் ரத்ததான முகாமையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் பேரூர் செயலாளர் பாரதி கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஊராட்சி தலைவர் முத்து குமார், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, கோவில்பட்டி முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர பாண்டியன், நடுவிற்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், தொழிலதிபர் முனியசாமி, வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள் சுந்தர், மயில்ராஜ் மகளிர் அணி முருகலட்சுமி, முத்துமாரி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் எட்டயபுரத்தில் நியூ ஷாலோம் மிஷன் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான முகாமையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
- 50-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
பொதுக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், ஒரு தொண்டன் கூட முதல்-அமைச்சராக முடியும் என ஒரு இயக்கம் உண்டு என்றால் அது அ.தி.மு.க.தான்.
ஈரோடு கிழக்குத் தொகுதி எடுத்துக் கொண்டால் முதல் முதலில் போட்டியிட போவதாக அறிவித்த கட்சி அ.தி.மு.க.தான். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. என்.கே.பெரு மாள், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் ஒன்றிய தலைவர் சுசிலா தனஞ்ஜெயன், ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் மகேஷ், கிழக்கு ஒன்றியம் பால்ராஜ், புதூர் மேற்கு ஒன்றியம் தனவதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி பேச்சாளர் இளங்கோ, மகளிர் அணி சாந்தி, வார்டு கவுன்சிலர் பிரியா, குளத்தூர் கிளைக் செயலாளர்கள் வேல் மயில், செல்லையா, சந்திரசேகரன், ஜோதிமணி உட்பட 300- க்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்