என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவமனையில் அனுமதி"
- முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
- போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுக் கொண்டிருந்தபோது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காரில் பயணம் செய்த முன்னாள் எம்எல்ஏ ராசு, கார் ஓட்டுநர் ரமணி மற்றும் மீன் வியாபரி படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- தயாளு அம்மாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தயாளு அம்மாளுக்கு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தயாளு அம்மாளுக்கு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் சிகிச்சைக்குப்பிறகு அவர் வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், தயாளு அம்மாளுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.
- வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல்.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல் வெளியானது.
சோதனைகள் முடிவடைந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது. அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேனீ கூட்டை மர்ம நபர்கள் கல்லால் அடித்ததால், அங்கிருந்த தேனீக்கள் பறந்து நீதிமன்றத்திற்குள் வந்து அனைவரையும் கொட்டியது தெரிய வந்தது.
- திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
- கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலம் கொச்சி அருகே மூவாட்டுப்புழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதில், சிறுவன், பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
9 பேரை கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.
மேலும், கோழிக்கோடு அருகே ராதாபுரத்தில் முதியவர்கள் இருவரை கடித்துவிட்டு தெருநாய் ஓடியுள்ளது.
- நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்.
- ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய முடியும்.
அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர். இது ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது.
சிகிச்சையை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.
இருப்பினும், ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சென்னையில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் அவரது மகள் செளந்தர்யா தனது கணவருடன் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.
- மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர்.
- ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது.
அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர்.
சிகிச்சையை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.
இந்நிலையில், "ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை வீடு திரும்ப இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்" என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும்.
வருக, வருக...
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை.
- சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம்.
- மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக புகார் வெளியாகியுள்ளது.
பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.
- காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
- தனியார் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் பவர் ஸ்டார் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர், சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மதியம் அவருக்கு திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கிண்டி அரசு மருத்துவமளையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.