என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெட்பிளிக்ஸ்"

    • கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம்
    • கர்மா டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தென்கொரிய படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக தென்கொரிய திரில்லர் திரைப்படங்களுக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    அவ்வகையில் கர்மா என்ற புதிய தென்கொரிய வெப் சீரிஸ் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம். அதாவது கடந்த பிறவி அல்லது இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களின் விளைவு ஆகும்.

    • கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
    • வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் நடித்திருக்கின்றனர்.

    அவர் போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    இந்நிலையில் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை நீரஜ் பாண்டே இயக்கும் 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிகராக அறிமுகமாகிறார். இந்த தொடர் வரும் 20-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

    • நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.
    • இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில், இனி பயனர்களின் கணக்கை அவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். குடும்பத்திற்கு வெளியே யாரேனும் தங்கள் கணக்கை பயன்படுத்தினால் அவர்கள் தங்கள் புரொபைலை புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும்.

    அதன் பின்னர் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, பாஸ்வேர்டு பகிர முடியாத தொழில்நுட்பத்தை ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த மே மாதமே கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பான தங்கள் கருத்துக்களை நெட்பிளிக்ஸ் பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
    • படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. 'விடாமுயற்சி' திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

    • நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது.
    • இந்நிறுவனம் கடந்த ஆண்டு ‘லியோ’ உள்ளிட்ட மிகப்பெரிய படங்களை வெளியிட்டது.

    சினிமா துறையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள ஓடிடி தளம் நெட்பிளிக்ஸ். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு 'லியோ' உள்ளிட்ட மிகப்பெரிய படங்களை வெளியிட்டது.


    இந்நிலையில், நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டு எந்தெந்த படங்களை வெளியிடவுள்ளது என்ற பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2'. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்'. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் 'சொர்க்க வாசல்'.



    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்.கே.21'. இயக்குனர் கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'ரிவால்வர் ரீட்டா'. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து அரும் 'மகாராஜா'. இயக்குனர் கணேஷ் ராஜா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' போன்ற படங்களை வெளியிடவுள்ளது. இது தொடர்பான போஸ்டர்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.


     


    • உலகளவில் ஓடிடி தளங்களில் முதன்மையாக விளங்குவது நெட்பிளிக்ஸ் ஆகும்.
    • இந்தியாவிலிருந்து வரும் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் 2023 ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும்1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன

    உலகளவில் ஓடிடி தளங்களில் முதன்மையாக விளங்குவது நெட்பிளிக்ஸ் ஆகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முக்கியமாக இளைஞர்களை அதிகமாகக் கொண்ட இந்தியாவில் நெட்பிளிஸ் தளத்துக்கு கணிசமான சாப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர். பல்வேறு ஜானர்களில் எடுக்கப்படும் சீரிஸ்களுக்கும், படங்களுக்கும் பெயர் பெற்றது நெட்பிளிக்ஸ்.


     



    பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் ஊர்களின் இருப்பிடமான இந்தியாவில் கதைகளுக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் இந்தியாவிலிருந்து வரும் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் 2023 ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும்1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2023 ஆம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் காலகட்டத்தில் இந்த புதிய மைல் கல்லை நெட்பிளிக்ஸ் எட்டியுள்ளது. சுஜோய் கோசின் "ஜானே ஜான்" 20.2 மில்லியன் பார்வைகளுடன் நெட்பிளிக்ஸ் இல் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக உள்ளது, ஷாருக்கானின் "ஜவான்" 16.2 மில்லியன் பார்வைகளுடனும் விஷால் பரத்வாஜின் "குஃபியா" 12.1 மில்லியன் பார்வைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


     



    "OMG 2" (11.5 மில்லியன் வியூஸ்), "லஸ்ட் ஸ்டோரீஸ் 2" (9.2 மில்லியன் வியூஸ்), "டிரீம் கேர்ள் 2" (8.2 மில்லியன் வியூஸ்) மற்றும் கேரள பெண் சீரியல் கில்லரைப் பற்றிய ஆவணப்படமான "கர்ரி அண்ட் சயனைட்" (8.2 மில்லியன் வியூஸ்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 




     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.
    • பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.

    இங்கிலாந்தில் 1919 முதலாம் உலகப்போர் உலகப் போர் முடிந்த சமயத்தில் பீக்கி பிளைன்டர்ஸ் என்ற  கிரைம் கேங் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இங்கிலாந்து நிழலுலகில் ஆதிக்கம் செலுத்தியது. பிரிம்மிங்கம் நகரில் குடும்பமாக இயங்கிய இந்த கேங் இங்கிலாந்து முழுவதும் புகழ்பெற்று விளங்கியது. இவர்களின் கதையை மையமாக வைத்து பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.

     

    பீக்கி பிளைன்டர்ஸின் தலைவராக விளங்கிய டாமி செல்பி கதாபாத்திரத்தில் பிரிட்டிஷ் நடிகர் சிலியின் மர்பி கதாபாத்திரத்தோடு ஒன்றும் வகையில் தத்ரூபமாக நடித்திருந்தார். பீக்கி பிளைன்டர்ஸ் வெப் சீரிஸ் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தியே உருவாக்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படப்பாக தயாராக உள்ளதகாக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.

     சீரிஸை இயக்கிய டாம் ஹார்ப்பரும், ஸ்டீவன் கிநைட்டும் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளனர். 6 சீசன்களாக உள்ள கதை ஒரே படத்தில் எப்படி கூறப்பட உள்ளது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

     

    இதற்கிடையில் உலகப் புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படத்தில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய மக்கள் கொத்துக்கொத்தாக சாக காரணமான அணுகுண்டைக் கண்டுபித்த ஓப்பன்ஹைமரின் கதாபாத்திரத்தினுடைய அறச் சிக்கலை நேர்த்தியாக திரையில் வரித்துக்காட்டி சிலியன் மர்பி ஆஸ்கார் வென்றது குறிப்பிடத்தக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • . கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
    • படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது.

    மகாராஜா திரைப்படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வார அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் வார பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது மகாராஜா திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்
    • ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய மகாராஜா திரைப்படம் அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான மகாராஜா 100 கோடி வசூலைத் தாண்டியது.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது. நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.

    முன்னதாக கரீனா கபூர், கீர்த்தி சானோன்,தபு ஆகியோர் நடித்த Crew திரைப்படம் 17.9 மில்லியன் பார்வைகளுடனும், லாப்பாட்டா லேடீஸ் படம் 17.1 மில்லியன் பார்வைகளுடனும் முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    • உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.
    • வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.

    ஐசி 814 - The Kandahar Hijack' வெப் தொடருக்கு எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் உள்ளடக்க தலைவருக்கு (CONTENT HEAD) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

    1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.

    அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.

    இப்படத்தில் பயங்கரவாதிகளுக்கு 'சங்கர்' மற்றும் 'போலா' என்ற இந்து பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி நெட்ப்ளிக்ஸை தடை செய்யுங்கள் என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
    • வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

    தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு ஸ்குவிட் கேம். கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் பெயரும் அதுவே. முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.

    இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகி வருகிறது.

    வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 2 வது சீசனின் சிறப்பு டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த இரண்டு வருடங்களாக அந்த வீடியோ வெளியாவது குறித்து நெட்பிளிக்ஸ் தரப்பில் தகவல் வெளியாகவில்லை.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடைகளைத் தாய் மூலம் பெற்ற, உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தலற்றிக்கு விற்றார்கள் என்று செய்திகள் பரவின.

     

    கடந்த இரண்டு வருடங்களாக அந்த வீடியோ வெளியாவது குறித்து எந்த தகவலும் நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து வராத நிலையில் தற்போது அந்த வீடியோ விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.நெட

     

    'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் 1.21 மணி நேரம் கால அளவு கொண்ட படமாக இது இருக்கும் என்று நெட்பிளிக்ஸ் பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1.21 மணி நேரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நயன்தாராவின் பேட்டி, திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×