என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "உவரி"
- சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்
- இந்த ஆண்டு விசாகத் திருவிழா வருகிற 11மற்றும்12-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
திசையன்விளை:
தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கிய விழாவாகும்.
இந்த ஆண்டு விசாகத் திருவிழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை)தொடங்கி 12-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 2 நாட்கள் நடக்கிறது.
11 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறப்பு, மதியம் உச்சிகால பூஜை மாலையில் சமய சொற்பொழிவு, இரவு தேவார இன்னிசை, சமய சொற்பொழிவு, ராக்கால பூஜை நடைபெறுகிறது.
12-ந் தேதி விசாகத் திருநாள் காலை கலை மாமணி மணிகண்டன் குழுவினரின் மங்க இசை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சமய சொற்பொழிவு, இரவு செய்க தவம், பாரதம் காட்டும் வாழ்க்கை நெறி, கந்தபுராணம் காட்டும் பக்த நெறி,
பெரியபுராணம் காட்டும் பக்தியின் மகிமை, இந்துமதம் என்ற தலைப்புகளில் சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி முதலியவை நடக்கிறது. நள்ளிரவு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்துவருகிறார்.