search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராவிட்"

    • ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.
    • சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 144 போட்டிகளில் விளையாடி 12131 ரன்கள் குவித்துள்ளார்.

    33 வயதான ஜோ ரூட் இன்னும் சில வருடங்கள் டெஸ்ட்ட் கிரிக்கெட் விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் 62 ரன்கள் அடித்து புதிய சாதனை ஒன்றை ஜோ ரூட் படைத்துள்ளார். இந்த அரைசதத்தோடு ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஆலன் பார்டரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார்.

    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் செப்டம்பர் 2-ந் தேதி மோதுகிறது.
    • நாங்கள் முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் மோத உள்ளோம்.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி தொடர் பாகிஸ்தான், இலங்கையில் வருகிற ஆகஸ்ட் 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங் களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    சூப்பர்-4 சுற்றில் தங்களுக்குள் மோதி அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் செப்டம்பர் 2-ந் தேதி மோதுகிறது.

    இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-4 சுற்று மற்றும் இறுதிப் போட்டி என இந் தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டி குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. நாங்ள் முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் மோத உள்ளோம். முதலில் அதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று, போட்டி எப்படி செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் மூன்று முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் அது அருமையானது.

    ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவோம். அதை பாகிஸ்தானும் செய்ய வேண்டும். இது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும். நாங்கள் நிச்சயமாக இறுதி வரை விளையாடி வெற்றிபெற விரும்புகிறோம். அதற்கான முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள்.
    • இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    மும்பை:

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களின் சராசரி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக கடந்து இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி சராசரி 32.13 என்ற அளவில் இருக்கிறது.

    புஜாராவின் சராசரி 32 என்ற அளவில் இருக்கிறது. இந்த பேட்டிங் சராசரியை முன்னேற்ற இந்திய அணி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

    இந்நிலையில் ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள் எனவும் இப்போதைய வீரர்கள் இகோ பார்க்கிறார்கள் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் அவர்களை அழைத்து இந்திய அணி நிர்வாகம் பேச வேண்டும். உன்னுடைய பேட்டிங் யுக்தி என்ன ஆனது? அதை முன்னேற்ற நீ என்ன செய்து வருகிறாய் என்று பேச வேண்டும்.

    சிறு சிறு மாற்றங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் வீரேந்திர சேவாக்கை அழைத்து நீ தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வருகிறாய். இதனால் பேட்டிங் போசிஷனை நீ ஆப் ஸ்டம்புக்கு மாற்று என்று நான் அறிவுரை கூறினேன்.இந்த அறிவுரையை அவர் பின்பற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த பணியை பயிற்சியாளர்கள் தான் செய்ய வேண்டும்.


    ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள். பேட்டிங்கில் எனக்கு இந்த குறை இருக்கிறது, அதனை நிவர்த்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எடுத்து சொல்வதில் எங்களுக்கும் ஈகோ கிடையாது. வந்து கேட்ட அவர்களுக்கும் ஈகோ கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் எந்த பேட்ஸ்மேன்களும் வந்து எங்களிடம் பேசுவதில்லை.

    இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நானும் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்று அவர்களை குழப்ப விரும்பவில்லை. இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார்.
    • தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.

    வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 12-ம் தேதி டொமினிகாவின் வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேர்ஃபீல்டு சோபர்ஸ் வருகை தந்தார். அவரை உற்சாகமாக வரவேற்ற இந்திய அணியின் வீரர்கள் பேசி மகிழ்ந்தனர். விராட் கோலி, ரோகித் தங்களை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.


    பின்னர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார். தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • சச்சின்- டிராவிட் இணைந்து பேட்டிங் செய்யும்போது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளார்.
    • நடந்த சம்பவத்திற்கு ராகுல் டிராவிட்டிடம் சென்று மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. வங்காளதேச அணியின் பயிற்சியாளராக டொனால்டு உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

    இருவரும் அவர்கள் விளையாடிய காலத்தில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக டொனால்டு திகழ்ந்தார். இவரது பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் நடுவாங்குவார்கள்.

    அதேபோல், எந்தவொரு வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசினாலும் எளிதாக தடுத்து விளையாடுவார் ராகுல் டிராவிட்.

    1997-ம் ஆண்டு இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. அப்போது இலக்கை நோக்கி இந்திய சென்றபோது ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இந்த ஜோடியை பந்து வீச்சால் விரைவில் பிரிக்க முடியாத தென்ஆப்பிரிக்கா வீரர்கள், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறியதாக தெரிகிறது.

    இது டொனால்டு மனதில் சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. தற்போது இருவரும் சந்தித்து பயிற்சியாளராக இருக்கும் நிலையில், அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் டொனால்டு, அத்துடன் ராகுல் டிராவிட்டை டின்னருக்கு அழைத்துள்ளார்.

    இதுகுறித்து டொனால்டு தெரிவிக்கும்போது ''டர்பனில் மோசமான நிகழ்வு ஒன்று நடந்தது. நான் அதைப் பற்றி இங்கு பேச விரும்பவில்லை. சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் அனைத்து வகையிலும் எங்களை சிதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் அதிகமாக எல்லை மீறி விட்டேன். ராகுல் டிராவிட் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை. அதைத்தவிர ஒன்றுமில்லை.

    நடந்த சம்பவத்திற்கு ராகுல் டிராவிட்டிடம் சென்று மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அவருடைய விக்கெட்டை வீழ்த்த நான் சற்று சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொண்டேன். அதற்காக இன்னும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அவர் சிறந்த மனிதன். சிறந்த வீரர். ஆகவே, நீங்கள் அதை புரிந்து கொண்டால், உங்களுடைய இரவில் உணவு சாப்பிட விரும்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

    இதற்கு ராகுல் டிராவிட், ''நிச்சயமாக, நான் அதை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, நீங்கள் பணம் செலுத்துவதாக இருந்தால்...'' எனப் பதில் அளித்துள்ளார்.

    • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.
    • இந்த போட்டியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    புது டெல்லி:

    இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

    இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை நடைபெறும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.

    இந்நிலையில் இந்த உலக சாதனை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நாங்கள் உலக சாதனை படைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை சாதனைகளையும், எண்களையும் பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விரும்புகிறோம். நாங்கள் களம் இறங்குவதற்கு முன் எங்களை தயார் செய்துகொண்டு, பயிற்சி செய்துகொண்டு அவற்றை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம்.

    வலுவான தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும்போது நம்முடைய பலமும் தெரியவரும். மேலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    நாங்கள் வெற்றி பெறுவது போல விளையாடினால் வெற்றி பெறுவோம், இல்லையென்றாலும் கற்றுக்கொண்டு அடுத்த விளையாட்டை விளையாடுவோம்.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார்.

    ×