என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்க்கிங்"

    • நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படம் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு', 'எல்.ஜி.எம்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஹரிஷ் கல்யாண் பதிவு

    இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்நிலையில், பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமாருக்கு அப்படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் அணிவதில் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி. மேலும் என்னை ஸ்பெஷலாக உணரவைக்கும் அபாரமான அன்பு... என கூறியுள்ளார்.

    இதற்கு ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் பல வெற்றிகள் மற்றும் அன்புகளை நீங்கள் பெறப்போகிறீர்கள் என கூறியுள்ளார்.

    • ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

    இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'.திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.


    பார்க்கிங் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • புகைப்படம் மற்றும் வீடியோக்களை புகைப்பட கலைஞரான நிஷாந்த் ரத்னாகர் என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
    • பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கு தனியாக நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை புகைப்பட கலைஞரான நிஷாந்த் ரத்னாகர் என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக பெங்களூருவில் கோரமங்களாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

    பெரிய மல்டி லெவல் பார்க்கிங் இருக்கும் போது அவர்கள் மின்சார வாகனங்களை சூரிய ஒளியில் நிறுத்துமாறு செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.
    • கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

    இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.இருவருக்கு இடையில் வெடிக்கும் ஈகோ கிளாசை திரில்லிங் டிராமாவாக 'பார்க்கிங்' திரைப்படம் உருவாகியிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான அளவில் வசூலைக் குவித்தது.

    கர்ப்பிணி மனைவிக்காக கார் ஒன்றை வாங்கும் ஈஸ்வர் (ஹரிஸ் கல்யாண்). வீட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு இருக்கும் இடத்தில் காரை பார்க் செய்வதால் இளம்பரிதிக்கு (எம்.எஸ்.பாஸ்கருக்கு) பைக்கை நிறுத்துவதில் சிரமமாகிறது. இதனால் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஈகோ மோதலாக வெடிக்கிறது.

     

    வம்புக்கு இளம்பரிதியும் ஒரு காரை வாங்க மோதல் இன்னும் தீவிரமடைகிறது. இதனால் அவர்களின் குடும்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதே பார்க்கிங் படத்தின் 2 மணி நேர கதை. காமெடி ரோல்களில் மட்டுமின்றி சமீப காலங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்திலும் ஈகோ கொண்ட சராசரி நபர் கதாப்பாத்திரதத்தில் மிரட்டியிருப்பார்.

    கோடி கோடியாக செலவு செய்து வில்லன்களை டெரராக காட்ட முன்னணி இயக்குநர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேலையில், கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

     

    இந்நிலையில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமம் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5 மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச மொழி ஒன்றிலும் பார்க்கிங் படம் ரீமேக்காக உள்ளது தமிழ் சினிமாவுக்கு பெருமையான தருணமாக பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண்
    • இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் கடந்த ஆண்டு வெளியாகிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய 'பார்க்கிங்' படத்தில் நடித்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கியது பார்க்கிங் திரைப்படம்.

    திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்தார்.

    ஒரு ஐடி இளைஞனும், அரசாங்க ஊழியரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் இருப்பது ஒரே ஒரு பார்க்கிங் ஸ்லாட் மட்டும் தான். அதில் யார் காரை நிறுத்துவது என்பதை மையமாக வைத்து இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். ஒரு தனிமனித ஈகோ எந்த எல்லை வரைக்கும் செல்லும் என இப்படம் தெளிவாக காட்சி படுத்தி இருக்கும், படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார் ராம்குமார்.

    சமீபத்தில் படித்தின் ரீமேக் ரைட்ஸை 5 மொழிகளில் வாங்கினர். இந்நிலையில் படத்தின் திரைக்கதையை ஆஸ்கர் லைப்ரரி கோர் கல்க்ஷனில் இணைக்க படத்தின் தயாரிப்பாளரை கேட்டு அகாடமியில் இருந்து மெயிலை அனுப்பியுள்ளது, இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து பதிவை பதிவிட்டுள்ளார்.

    அதில் ஒரு நல்ல கதை அதுக்கான இடத்த தானே தேடி போகும் என்று நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நிறுத்தம் செய்ய முடிவு.
    • மெட்ரோ ரெயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனங்களுக்கு அனுமதி.

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் 01.02.2025 முதல் நிறுத்தம்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக்கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும். பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஜனவரி 2025-ல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை ( Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி முதற்கட்டனாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் நிறுத்தம்.

    மெட்ரோ ரெயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    01.04.2025 முதல் SBI வழங்கிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, OTA - நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய்நகர் ஆகிய 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனை / ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

    அதன்படி, மேற்கூறிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு அல்லது மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்திவிட்டு, மேலும் பயன்பாட்டிற்காக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னைஅட்டை) பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கலையரங்கத்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 8.30மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் இந்த கோவிலில் தரிசனத்துக்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நுழைவு வாசலில் எந்த நேரமும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    பகவதிஅம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமய சொற்பொழிவு நடத்துவதற்காக கோவிலின் நுழைவு வாசல் முன்பு மிக பிரம்மாண்டமான கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கலையரங்க த்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களை காலையில் இந்த கலையரங்கம் முன்பு வைத்து விட்டு இரவு தான் திரும்பி வந்து எடுத்துச் செல்கிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்க பகுதி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் "பார்க்கிங்" இடமாக மாறிவிட்டது. தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதால் இந்த பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

    இதற்கிடையில் ஆட்டோ, கார், வேன், டிரக்கர், ஜீப், மினி பஸ் போன்ற பெரிய கனரகவாகனங்களும் இந்த சன்னதி தெரு பகுதியில் உள்ள லாட்ஜுகள் முன்பு ஆங்காங்கேபோக்குவரத்துக்குஇடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவிலில்வைகாசிவிசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் 10 நாட்களும் இந்த சன்னதி தெரு வழியாகத் தான் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்துகொண்டிருக்கிறது.

    மேலும் இந்த 10 நாட்களும் இந்த கோவிலின் முன்புஉள்ள கலையரங்கத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. இதனால் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் கோவிலுக்குள் எளிதாக சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வர முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள்.

    எனவே கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் கலையரங்கம்முன்பு இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு போக்கு வரத்து போலீசார் தடை விதிக்கவேண்டும் என்றும் அதற்கு பதிலாக இந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இட வசதி செய்து தர வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×