என் மலர்
நீங்கள் தேடியது "ஜாகிர் உசேன்"
- 5 கிராமி விருதுகளைப் பெற்று இருக்கிறார்.
- உசேன் இசை உலகில் பெரும் புகழ்பெற்றவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
அமெரிக்கா:
பிரபல தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் (வயது 73). ரத்த அழுத்த பிரச்சனையால் உடல் நிலை குறைவு ஏற்பட்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்ட்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜாகிர் உசேன் மரணம் அடைந்தார்.
மும்பையில் மார்ச் 9, 1951-ல் பிறந்த ஜாகிர் உசேன் இசை உலகில் பெரும் புகழ்பெற்றவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
உஸ்தாத் ஜாகிர் உசேன் 1988-ல் பத்மஸ்ரீ, 2002-ல் பத்ம பூஷன் மற்றும் 2023ல் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றார். அவர் 2009-ல் தற்கால உலக இசை ஆல்பம் பிரிவில் கிராமி விருதையும் வென்றார்.
மேலும், இவர் 5 கிராமி விருதுகளைப் பெற்று இருக்கிறார். இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த 66-வது கிராமி விருதுகள் விழாவில் கூட 3 விருதுகளைப் பெற்றார்.
தி பீட்டில்ஸ் உட்பட பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஜாகிர் உசேன் ஒரு புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர், அவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா கான் அவரது காலத்தில் பிரபலமான தபேலா கலைஞர் ஆவார். தந்தையிடம் தபேலா வாசிக்கும் கலையை கற்றுக்கொண்டார்.
உஸ்தாத் ஜாகிர் உசேன் 7 வயதில் கச்சேரிகளில் தபேலா வாசிக்கத் தொடங்கினார்.
தனது ஆரம்பக் கல்வியை மாஹிமில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் முடித்த ஜாகிர் உசேன், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஜாகிர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் பெற்றார்.
சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஜாகிர் உசேன், வெறும் 11 வயதில் அமெரிக்காவில் தனது முதல் கச்சேரியை வெற்றிகரமாக நடத்தினார். தந்தையுடன் அவர் அந்த இசைக் கச்சேரியை நடத்தி இருந்தார்.
அதில் தனக்குச் சம்பளமாக 5 ரூபாய் வழங்கப்பட்டதாகப் பின்னர் ஒரு நேர்காணலில் நினைவு கூர்ந்தார். வாழ்க்கையில் தான் பெற்ற அந்த 5 ரூபாய்தான் மிக மதிப்புமிக்க சம்பாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அவர் 1991-ல் பிளானட் டிரம்மிற்காக டிரம்மர் மிக்கி ஹார்ட்டுடன் இணைந்து பணியாற்றினார். இது கிராமி விருதை வென்றது.
பிந்தைய ஆண்டுகளில், ஜாகிர் உசேன் பல படங்களின் ஒலிப்பதிவுகளில் பங்களித்தார். ஜாகீர் உசேன் 1991-ல் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். அட்லாண்டாவில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு இசையமைத்த குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.
2016-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கு அனைத்து நட்சத்திர உலகளாவிய கச்சேரியில் பங்கேற்க அழைக்கப்பட்ட முதல் இந்திய இசைக்கலைஞர் ஆவார்.
ஆரம்ப நாட்களில் ஜாகிர் உசேனுக்கு கடுமையான நிதி நெருக்கடிகள் இருந்தன. இதனால் வேறு வேலை செய்யச் சொல்லிக் கூட பலரும் அறிவுறுத்தினர். இருப்பினும், அதை எல்லாம் தாண்டி இசைத் துறைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
பொருளாதார சிக்கல் காரணமாக ஆரம்பக் காலத்தில் பல நாட்கள் அவர் ரயிலிலேயே பயணித்தார். அப்போது சில நேரம் அவருக்கு இருக்கை கூட கிடைக்காது. அப்போதெல்லாம் செய்தித்தாளை விரித்து தரையிலேயே கூட படுத்துத் தூங்குவாராம். ஆனால், அப்போதும் தனது தபேலாவின் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்து கொள்வாராம்.
அவரது முதல் ஆல்பமான 'லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட்' 1973ம் ஆண்டு வெளியானது. எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதில் இருந்து இசையை உருவாக்கும் வல்லமை கொண்டவர் ஜாகிர் உசேன். வீட்டின் சமையல் அறையில் உள்ள சாதாரண பொருட்களில் இருந்தும் கூட அட்டகாசமான இசையைக் கொண்டு வருவதில் கை தேர்ந்தவர்.
ஜாகிர் உசேன் மறைவுக்கு மத்திய அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"உஸ்தாத் ஜாகிர் உசேனின் அசாதாரணமான தபேலா தேர்ச்சி இசை உலகில் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. அவரது கலைத்திறன் மூலம் அவரது வாழ்க்கையைத் தொட்ட அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது தாளங்கள் என்றென்றும் நம் இதயங்களில் எதிரொலிக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
- 2024 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
- டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன்.
இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன். 1944-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் பிறந்த இவர் இந்திய விமானப் படையில் (IAF) இணைந்து, 1964 முதல் 1974 வரை பணியாற்றினார். இதன்பிறகு 'டௌரி கல்யாண வைபோகமே' என்ற நாடகத்தில் குசேலர் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் டெல்லி கணேஷூக்கு திருப்புமுனையாக அமைந்தது. குசேலராக கணேஷின் நடிப்பு இயக்குநர் கே. பாலச்சந்தரின் கவனத்தை ஈர்த்தது.
டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'டெல்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

பவதாரிணி
தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடர்களுள் முக்கியமானவராக இருந்தார். இவர் இசை ஞானியான இளையராஜாவின் மகளாவார். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட.இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இவர் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா , கார்த்திக் ராஜா, தேவா மற்றும் பல இசையமைப்பாளர் இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கயில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உயிரழந்தார்.
டேனியல் பாலாஜி
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்து வில்லத்தனத்திற்கு பெயர் போனவர் டேனியல் பாலாஜி. 'காக்க காக்க' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'பொல்லாதவன்', 'வடசென்னை', 'பிகில்' போன்ற படங்களில் நடித்து இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மாரடைப்பு காரணமாக கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் காலமானார். இறப்பிற்குப் பிறகு இவரது கண்கள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லொள்ளு சபா சேஷூ
'மண்ணெண்ண வேப்பென வெளக்கெண்ண, யார் ஜெயிச்சா எனக்கென்ன' போன்ற நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் சேஷூ. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் பிரபலமானவர். 'வேலாயுதம்', 'பாரிஸ் ஜெயராஜ்' போன்ற படங்களில் மூலம் தன் நடிப்பில் முத்திரை பதித்தவர். அதுவும் அச்சச்சோ இவரா பயங்கரமான ஆள் ஆச்சே போன்ற நகைச்சுவை வசங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானார்.
இலவச திருமணம்,கல்வி ,மருத்துவம் என தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தவர் சேஷூ. உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.
நடிகை சி.ஐ.டி சகுந்தலா
சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா.
'சிஐடி சங்கர்', 'படிக்காத மேதை', 'கை கொடுத்த தெய்வம்', 'வசந்த மாளிகை' உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த செப்.17 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜாகிர் உசேன்:
இந்திய இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். பிரபல தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன் பல்வேறு மொழி திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த தேநீர் விளம்பரம் wah taj மிகவும் பிரபலமடைந்தது.
தபேலா இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
ஷ்யாம் பெனகல்:
இந்திய சினிமாவில் சுயாதீன சினிமாவை உருவாக்கியதில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் ஷ்யாம் பெனகல் (90). ஷ்யாம் பெனகல் படங்கள் பல்வேறு ஜானர்களில் சமூக கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. தனது திரை வாழ்வில் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி துறையிலும் முத்திரை பதித்துள்ளார்.
இயக்குநர் ஷ்யாம் பெனகல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். அதேபோல் அவரது திரைப்படங்கள் 8 முறை தேசிய விருதுகள் வென்றுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக உயிரிழந்தார்.

எம்.டி.வாசுதேவன் நாயர்
கேரளாவின் பழம்பெரும் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், சிறு கதைகள், நாவல்கள், திரைக்கதை, இலக்கியம், பத்திரிகைத்துறை என மலையாள கலையுலகின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எம்.டி.வாசுதேவன். 91 வயதான இவர் கோழிக்கோடு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- குற்றச்சாட்டை மறுத்த ஜாகிர் உசேன், பரதநாட்டிய ஆசிரியை அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைகோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறேன் என கூறி இருந்தார்.
- இதையடுத்து இந்த குற்றச்சாட்டு மீது விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.
சென்னை:
பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக செயல்பட்டு வருகிறார்.
இவர், கடந்த மார்ச் மாதம் கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது அங்கே இருந்த பரதநாட்டிய ஆசிரியையிடம் அத்து மீறியதாக புகார் எழுந்தது. தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்வானின் பேத்தியான அந்த ஆசிரியை, பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள அரசு இசைப் பள்ளியில், 23 ஆண்டுகள் பரத நாட்டிய ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ஆசிரியையின் புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதி சென்னையில் உள்ள கலை – பண்பாட்டு துறை இயக்குநரகத்திற்கு நேரில் சென்று ஆசிரியை புகார் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர், கரூர் மாவட்ட ஆட்சியர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து, தப்பு செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றும் புகாரில் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜாகிர் உசேன், பரதநாட்டிய ஆசிரியை அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைகோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன். விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்திவந்த நிலையில், ஜாகிர் உசேன் மீதான பாலியல் புகார்கள் அனைத்தும் புனையப்பட்டது என தெரியவந்துள்ளது.