என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்லேட்"

    • 5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார்.
    • இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.

    இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற 106 வயது மூதாட்டி தனது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

    1919-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளாராம். இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.

    5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார். இவர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார். நிறைய சாக்லேட் சாப்பிடுவது, விருந்துகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தான் எனது நீண்ட ஆயுளுக்கு பங்களிப்பதாக கூறியுள்ள எடித் ஹில், தான் ஒருபோதும் புகைபிடித்ததில்லை, அதிக அளவு மது அருந்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    சாக்லேட் மட்டுமல்லாது, ஈஸ்டர் பண்டிகையின் போது இனிப்பு வகைகளை விரும்பி ருசிப்பதாகவும் கூறுகிறார்.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • வீட்டிலேயே சாக்லேட் பர்ஃபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.

    தேவையான பொருட்கள்:

    பால் பவுடர் - 1/4 கப்

    கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி

    சர்க்கரை - 1/3 கப்

    தண்ணீர் - 1/4 கப்

    நெய் - 2 தேக்கரண்டி

    முந்திரி, பாதாம் - தேவையான அளவு

    செய்முறை :

    அச்சு தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.

    முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சக்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .

    ஒரு நூல் பதம் வந்ததும் முன்பே கலக்கி வைத்துள்ள பால் பவுடர் கலவையை சேர்த்து கலக்கவும். இதனை மிதமான சூட்டில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லையேல் அடிபிடித்து விடும்

    இதனுடன் நெய் சேர்த்து கிளறி ஓரங்களில் ஒட்டாமல் ஒன்று திரண்டு வரும் பொழுதுமுன்பு நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி நறுக்கிய பாதாம், முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும். பாதாம், முந்திரியை லேசாக தட்டி விடவும் அப்பொழுது தான் சாக்லேட் துண்டுகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். சிறிது ஆறியவுடன் கத்தி கொண்டு வில்லைகள் போடவும்.

    இப்போது சுவையான சாக்லேட் பர்ஃபி தயார்

    • கூடுமானவரை பிரிட்ஜ் பிரீசரில் சாக்லேட் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
    • வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் சாக்லேட்டை பாதுகாக்கக்கூடாது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பலகார பொருட்களுள் சாக்லேட்டுக்கு தனி இடமுண்டு. சாக்லேட்டை வாங்கி வந்த உடனேயே சாப்பிட்டுவிடுவார்கள். அதிக நேரம் வைத்திருந்தால் பிசுபிசு தன்மைக்கு மாறி விடுவதே அதற்கு காரணம்.

    அதனை தவிர்க்க நிறைய பேர் பிரிட்ஜில் உள்ள பிரீசரில் சேமித்து வைத்து ருசிப்பார்கள். அப்படி அதிக நேரம் சாக்லேட்டை குளிர்ச்சி நிலையில் வைத்திருந்து உடனே சாப்பிடுவது நல்லதல்ல. சாக்லேட்டுகள் விரைவில் கெட்டுப்போகாது. ஒருசில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சாக்லேட்டை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக வைத்திருந்து ருசிக்கலாம்.

    இருள் சூழ்ந்த இடத்தில் சாக்லேட்டை வைத்திருப்பது நல்லது. அந்த இடம் ஈரப்பதம் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால், சாக்லேட்டுக்குள் உள்ளடங்கி இருக்கும் கொக்கோ, சர்க்கரை இரண்டும் தனியாக பிரிந்து விடும். திறந்து மூடும் வகையிலான டிராயர்கள், அலமாரிகளில் சாக்லேட்டை வைக்கலாம். குளிர்ச்சியான இடமும் சாக்லேட்டுக்கு உகந்தது. பிரிட்ஜில் வைத்திருந்தால் அதனை வெளியே எடுத்து குளிர்த்தன்மை நீங்கிய பிறகு சாப்பிடுவது நல்லது.

    சாக்லேட்டை அதிக மணம் கொண்ட பொருளோடு சேர்த்து வைக்கக்கூடாது. ஏனென்றால் அந்த பொருட்களின் வாசனையை சாக்லேட் உறிஞ்சி விடும். குறிப்பாக பிரிட்ஜுக்குள் சாக்லேட்டையும், வாழைப்பழத்தையும் ஒன்றாக வைத்திருந்தால் சாக்லேட் சாப்பிடும்போது பழத்தின் வாசனை எட்டிப்பார்க்கும்.

    கூடுமானவரை பிரிட்ஜ் பிரீசரில் சாக்லேட் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு வைத்தால் சாக்லேட் கடினமாகிவிடும். அதன் சுவையும் குறைந்துவிடும். அதேபோல் வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் சாக்லேட்டை பாதுகாக்கக்கூடாது. அப்படி வைத்திருந்தால் விரைவாகவே கரைந்து போய்விடும்.

    கொக்கோவின் சுவையையும் இழக்க நேரிடும். கொக்கோ கரைய தொடங்கிவிட்டாலே அதன் மேல் வெண்மை நிறத்தில் அடுக்கு உண்டாகிவிடும். அதை சாப்பிடும்போது மென்மை தன்மையும் இல்லாமல் போய்விடும். சாக்லேட் கவரை பிரித்துவிட்டால் உடனே சாப்பிட்டுவிடுவதுதான் நல்லது. பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை சேமித்து வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    ×