search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230288"

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    சேலம் மேற்கு கோட்டம் சார்பில் அஞ்சல் முகவர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.

    சேலம்:

    சேலம் அஞ்சல் மேற்கு கோட்டத்தில் வருகிற 14-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை பி.எல்.ஐ., ஆர்.பி.எல்.ஐ. நேரடி முகவர் தேர்விற்கான நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் வருகிற 14-ந்தேதி சேலம் மேற்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    நேர்முக தேர்விற்கான அடிப்படை தகுதிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயது வரை மட்டும் உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய தொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் தகுதி உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

    ஆயுள் காப்பீடு திட்டத்தில் முன் அனுபவம் இருந்தால் வரவேற்கத்தக்கது. மேற்கண்ட தகுதியினை பூர்த்தி செய்தவர்கள் தங்களது வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ இவை அனைத்தையும் வருகிற 14-ந்தேதிக்குள் கோட்ட கண்காணிப்பாளர் சேலம் மேற்கு கோட்டம் சேலம் -636005 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

    முகவர் நியமனம் இலக்கா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளர் முடிவே இறுதியானது. இந்த தகவலை சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்து–உள்ளார்.

    ×