search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்கும்"

    • சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை, ரூ.941 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் 2008-ல் தொடங்கி 2013-ல் முடிவடைந்தது.
    • வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி பகுதியில், நான்கு வழிச்சாலை மற்றும் இணைப்புச் சாலையில் வழிந்தோடி வரும் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தப்படவில்லை.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் 136 கி.மீ நீளம் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை, ரூ.941 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் 2008-ல் தொடங்கி 2013-ல் முடிவடைந்தது. இதில், உடையாபட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 38 கி.மீ. இரு வழி புறவழிச்சாலைச் சாலையாகவே உள்ளது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி பகுதியில், நான்கு வழிச்சாலை மற்றும் இணைப்புச் சாலையில் வழிந்தோடி வரும் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தப்படவில்லை. இணைப்புச்சாலைக்கும், நான்கு வழிச் சாலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள குறுகிய வாய்க்கால்களும் தூர்வாரி சீரமைக்கப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், மழை பெய்யும் நேரத்தில் ஒட்டுமொத்த மழை நீரும் வெளியேற வழியின்றி சாலையிலேயே ஏரி போல தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சேசன்சாவடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழை நீர்.

    சேசன்சாவடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழை நீர்.

    எனவே, சேசன்சாவடியில் நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து கிடக்கும் வாய்க்கால்களை சீரமைக்கவும், மழைநீர் வழிந்தோடும் அளவிற்கு விசாலமான புதிய வாய்க்கால்களை அமைக்கவும், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சேசன்சா வடியை சேர்ந்த ஜெய வேல் கூறுகையில், சேசன்சா வடியில் நான்கு வழி சாலை மற்றும் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை பகுதியிலும், மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதிகள் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே உள்ள குறுகலான வாய்க்காலையும் தொடர்ந்து பராமரிக்காததால் தூர்ந்து போய்விட்டது. எனவே, வாய்க்கால்களை தூர்வாரி புதுப்பிக்கவும் , விசாலமான புதிய வாய்க்கால் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சேலம் சூரமங்கலம் மீன்மார்க்கெட் அருகே தேங்கும் குப்பைகளால், அங்கு குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் தர்மம் நகர் முதல் தெருவில் சூரமங்கலம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் ஏராளமான பொது–மக்கள் மீன் வாங்கிச் செல்கின்றனர்.

    இந்த மீன் மார்க்கெட் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது, மேலும் இதன் அருகே குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்வே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×