என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிந்து"

    • திருமணமான 4-வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குட்டிமணியகாரனூரை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகன் சங்கர் (32). இவர் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு கடந்த 13.3.22 அன்று திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி (27) என்பருடன் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி திருமணம் முடிந்து பிரியதர்ஷினியின் வீட்டுக்கு திருச்சி சென்றனர். இதையடுத்து பிரிய தர்ஷினி மீண்டும் கணவ னுடன் கொடுமுடி வர மறுத்து விட்டார். திருமணமாகி 4 நாளில் மனைவி பிரிந்து சென்றதால் சங்கர் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சங்கரின் தந்தை செல்வராஜ் குடும்ப த்துடன் சென்று விட்டார். வீட்டில் சங்கர் தனியாக இருந்தார்.

    வெளியே சென்று இருந்த அவரது பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது சங்கர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சங்கரை வீடு முழுவதும் தேடி பார்த்தனர்.

    தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு சங்கர் பேனில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×