search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கராபுரம்"

    • மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார்.
    • கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார்

    இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருக்காலம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து, போலீசார், கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தப்பவிட்ட சங்கராபுரம் போலீசார் 3 பேரை உடனடியாக ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.

    • சங்கராபுரம் ஊராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு நடந்தது.
    • அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி மாங்குடி கடந்த மாதம் பொறுப்பேற்றார்.

    பின்னர் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவர் பாண்டியராஜன் கவுன்சிலர்கள் சங்கரிபாபு, லட்சுமி, நல்லம்மாள், செல்வராணி, பாபு, வள்ளி, ரஞ்சித்குமார், ஆனந்தம், ராமஜெயம், ரேவதி, பாண்டிச்செல்வம் ஆகியோர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முறைப்படி உறுப்பி னர்களுக்கு தெரியப்படு த்தவில்லை என்றும், இதில் சட்ட விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது என்றும், புதிய வீடுகளுக்கான வரை பட அனுமதியில் முறை கேடுகள் தொடருகிறது.

    சொக்கலிங்கபுரத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து பாதை அமைத்து கொடுத்தது தவறானதாகும். வைரவபுரத்தில் கோவில் அருகே இருந்த நாடக மேடையை கள ஆய்வு மேற்கொள்ளாமலும் மன்ற அனுமதி இல்லாமலும் இடிக்கப்பட்டது என்றும் பல்வேறு காரணங்களை கூறி வெளிநடப்பு செய்தனர்.

    அதை மனுவாக கலெக்டருக்கும் அனுப்பி வைத்தனர்.கலெக்டர் உத்தரவின் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், சங்கரா புரம் ஊராட்சி அலுவல கத்தில் ஆய்வு செய்தார்.

    அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோசப் அருள்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    உதவி இயக்குநர் குமார் கூறுகையில், கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்துள்ளேன். புகார் அளித்தவர்களிடம் அதற்கான ஆதாரங்களை கேட்டுள்ளேன்.

    வருவாய் கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. பொதுமக்களிடம் கருத்தை கேட்டபிறகு எனது அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிப்பேன் என்றார்.

    ஊராட்சி தலைவர் தேவி மாங்குடியின் ஆதரவு கவுன்சிலர்கள் கூறுகையில், பொதுமக்களின் வேண்டு கோளின் பேரிலேயே சொக்கலிங்கம் நகரில் பூங்கா இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.

    வைரவபுரம் நாடக மேடை பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து இருந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் ரேசன் கடைகட்டுவதற்காக அப்புறப்படுத்தப்பட்டது.

    கட்டிட வரைபட அனுமதி அவ்வப்போது மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அனுமதி வழங்குவது வழக்கம். துணை தலைவர் மீது கடந்த காலங்களில் உள்ள புகாரை உதவி இயக்குநரிடம் மனுவாக அளித்துள்ளோம் என்றனர்.

    ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி கூறுகையில், நான் பதவியேற்று சில நாட்கள்தான் ஆகிறது. இன்னும் 1½ வருடங்களே உள்ள நிலையில் துணை தலைவர் மற்றும் சில உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மக்கள் நல பணிகளை செய்ய முடியவில்லை.பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    • சங்கராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் முகமது நபி பற்றி அவதூறாக கருத்துகளை கூறிய நுபுல் சர்மா மற்றும் நவின் ஜிண்டால் ஆகியோரை கைது வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தொகுதி தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ்தீன், தொகுதி பொருளாளர் ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சையத் தாஹிர் அலி வரவேற்றார். மாவட்ட தலைவர் முகமத் ரபி, மாவட்ட செயலாளர் தர்பார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் நகர தலைவர் ஆசாத் அலி, கள்ளகுறிச்சி நகர செயலாளர் அத்னான், நிர்வாகிகள் அப்துல்லா, இஸ்மாயில் மற்றும் தேவபாண்டலம், மூங்கில்துறைப்பட்டு, வடசேமபாளையம் மற்றும் மூரார்பாளையத்தை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கராபுரம் பகுதியில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கெண்டனர்.அப்போது, பொது இடங்களில் புகை பிடித்த நபர்களுக்கு அபாரதம் விதித்து, பொது இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு கடைகளில் பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் பாலசேகரன், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×