search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவலஞ்சுழி"

    • திரு வலம்- வலம் வந்த விநாயகர் திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்
    • மதுரை-முக்குறுணி பிள்ளையார் திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    விநாயக பெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று துளசி பல்லாண்டு காலம் தவம் இருந்தாள். எப்போது என்னை மணம் முடிப்பீர்கள் என்று விநாயகரை கேட்டுக்கொண்டே இருந்தாள்.

    இதனால் கோபம் அடைந்த விநாயக பெருமான் துளசியை பார்த்து நீ ஒரு செடியாக மாறக் கடவது என்று கூறினார். இதை கேட்ட துளசி மனம் வருந்தினாள். விநாயகரை பார்த்து என்னை இப்படி சபித்து விட்டீர்களே, ஒரு நாளேனும் உங்கள் திரு மேனியை நான் தாங்கியிருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

    அவளது வேண்டுகோளை விநாயகர் ஏற்றுக்கொண்டார். விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் என் திரு மேனியில் நீ தங்கி இருக்கலாம் என்று வரம் கொடுத்தார். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜையின்போது விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    பிள்ளையார் சிறப்பு பெற்ற தலங்கள்

    எல்லா ஆலயங்களிலும் விநாயகருக்கு தனி இடம் உண்டு. ஆனாலும் பிள்ளையார் சிறப்பாக வீற்றிருக்கும் தலங்கள் பல உள்ளன. அவை வருமாறு:-

    திருவாவடு துறை-அழகிய விநாயகர்

    திருவையாறு-ஓலமிட்ட விநாயகர்

    விருத்தாசலம் ஆழத்து பிள்ளையார்

    திருச்சி - உச்சி பிள்ளையார்

    திருக்கடவூர்-கள்ள வாரண பிள்ளையார்

    திரு முருகன் பூண்டி -கூப்பிடு பிள்ளையார்

    வேதாரண்யம்-சிந்தாமணி கணபதி

    கீழ்வேளூர்-சுந்தர கணபதி

    அன்பிலாத்துறை -செவி சாய்த்த பிள்ளையார்

    திரு நள்ளாறு-சொர்ண விநாயகர்

    செங்காட்டாங்குடி-கணபதீஸ்வரர்

    திரு வலம்- வலம் வந்த விநாயகர்

    திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்.

    பாண்டிச்சேரி- மணக்குள விநாயகர்

    திரு விடை மருதூர்-படித்துறை விநாயகர்

    திருநாரையூர்-பொல்லா பிள்ளையார்

    திருவெண்ணைநல்லூர்- பொள்ளா பிள்ளையார்

    திருவாரூர்- மாற்றுரைத்த பிள்ளையார்.

    மதுரை-முக்குறுணி பிள்ளையார்

    திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையார் பட்டி-கற்பக விநாயகர்

    விநாகர் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி?

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகரின் அவதார தினமாக அவரது பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவர் பூலோகத்திற்கு வந்து தனது பக்தர்களை நேரடியாக காண்பார் என்பது ஐதீகம்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிலைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி முதல் நாள் மாலையோ அல்லது விநாயகர் சதுர்த்தி அன்றோ வாங்கி வர வேண்டு ம். சுடாத களி மண்ணால் ஆன விநாயகர் பொம்மைகளை வாங்கி வருவது சிறப்பு.

    ஒரு பலகையை சுத்தப்படுத்தி அதில் கோலமிட்டு அதில் பிள்ளையாரை அமர வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் காலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.

    பஞ்சினால் செய்த மாலையை இடையிடையே சிவப்பு நிறம் இருக்குமாறு குங்குமம் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

    அருகம்புல். எருக்க மாலை போன்றவற்றை வாங்கி வைத்து கொள்ளவேண்டும். பூக்கள், அட்சதை, குங்குமம், ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் தேங்காயும் மிக முக்கியம். எனவே கொழுக்கட்டை தயார் செய்து வைத்து கொள்ளவேண்டும். கொழுக்கட்டை குறைந்த பட்சம் 21 இருக்க வேண்டும். உப்பு கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் ஆகியவைகளை தயார் செய்து வைத்துக்கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கும் முன் விநாயகர் சிலையில் குண்டு மணியை பதித்து கண் திறந்து சந்தனம், குங்குமம், திருநீறு பொட்டு இடவேண்டும். பின்னர் பூப்போட்டு எருக்கு மாலை அணிவிக்க வேண்டும். ஒரு தாம்பளத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் வைக்க வேண்டும்.

    அதோடு விளாம் பழத்தை வெல்லத்தோடு கலந்து பழ பச்சடியும் வைக்க வேண்டும்.கணேச பஞ்ச ரத்தினம், விநாயகர் அகவல் சொல்ல வேண்டும்.பின்னர் ஓம் சித்தி விநாயக நம, ஓம் ஸ்ரீமகா ஹணபதியே நம என்று சொல்லி தூப தீபங்கள் காட்டி அனைவரும் வணங்க வேண்டும்.

    எல்வோரும் வணங்கியதும் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளையும் இதர பலகாரங்களையும் நிவேதனம் செய்யவேண்டும் நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை முதலில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதையடுத்து பெரியவர்கள் உண்ண வேண்டும். இரவு சந்திர தரிசனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று இரவு சந்திரனை தரிசித்தால்தான் பூஜை முழுமை பெறும்.

    இதையடுத்து மறு நாளான பஞ்சமி அன்றோ அல்லது 2 நாட்களுக்கு பிறகோ சஸ்டி அன்று புனர் பூஜை செய்யலாம். தூப தீபம் காட்டி மந்திரம் சொல்லி வணங்கி சிறிது பால் அல்லது பாயாசம் நிவேதனம் செய்து விநாயகர் சிலையை வடக்கு பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் சிலையை எடுத்து சென்று கடலிலோ அல்லது நதியிலோ குளத்திலோ கரைக்க வேண்டும்.

    • ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஒரமாக நிறுத்துமாறு கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இந்த தாக்குதலில் விக்னேஷ், ஜெயலட்சுமி. முகேஷ் ஆகியோர் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி டாஸ்மார்க் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பிரவீன் இருவரும் மதுபான வாங்க சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த, முருகேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளை சாலையின் குறுக்கே நிறுத்தி நின்று கொண்டிருந்தார்.

    இதையடுத்து, ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஒரமாக நிறுத்துமாறு கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி முருகேஷ் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ராஜ்குமாரின் தலையில் அடித்துள்ளார். அதில் ராஜ்குமாருக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.

    இந்த தகவலை அறிந்த சுவாமிமலை கலைஞர் காலனியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 22), பிரவீன் (23), விஜயகுமார் (24) உள்பட 7 பேர் திருவலஞ்சுழி அம்மன் திடலில் உள்ள முருகேஷ் வீட்டிற்கு சென்று தகராறு செய்து முருகேசனின் உறவினரான விக்னேஷ் (20), தினேஷ் ராமச்சந்திரன் மற்றும் சண்டையை தடுக்க வந்த ஜெயலட்சுமி ஆகிய 3 பேரை தாக்கினர். இது இரு தரப்பு மோதலாக மாறியது.

    இந்த தாக்குதலில் விக்னேஷ், ஜெயலட்சுமி. முகேஷ் ஆகியோர் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) பேபி வழக்குபதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

    ×