search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டப்பிடாரம்"

    • மேலலட்சுமிபுரம் கிராமத்தில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலலட்சுமிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    சண்முகையா எம்.எல்.ஏ.

    இதனை தொடர்ந்து மேலலட்சுமிபுரம் புதிய துணை மின் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் யூனியன் தலைவர் ரமேஷ், துணை தலைவர் காசிவிஸ்வநாதன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர்கள் குருவம்மாள் (தூத்துக்குடி), பிரேமலதா (மதுரை)

    செயற்பொறியாளர்கள் கணேசன், சாமுவேல் சுந்தராஜ், ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெகதீசன், அருணாச்சலம் ராஜ்குமார், சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீத கிருஷ்ணன், கனக ரத்தினம் சுகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் இளைய ராஜா, அருண்குமார், முத்து மகாலட்சுமி உட்பட மின்சார வாரிய உதவி பொறியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.

    ஓட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒட்டநத்தம் கிராம் விநாயகர் கோவில் திடலில் முன்பு நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தார். மாவட்ட பிரதிநிதி சோசுப மோகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    மாதம் ரூ. 1000

    தி.மு.க அரசின் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.

    தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில்கள் கடன் வழங்குவது மூலம் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் சிவராஜ், தமிழக அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்தும், மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூரமணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், யூனியன் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் சிவா நன்றி கூறினார்.

    • 11-ந் தேதி வ.உ.சி. விளையாட்டு கழகத்தின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெறுகிறது.
    • மாணவ- மாணவிகள் வரும் 7-ந் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் வ.உ.சி. விளையாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டி நடத்தப்படும். அதன்படி 11-ந் தேதி வ.உ.சி. விளையாட்டு கழகத்தின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் தங்கள் பயிலும் பள்ளியின் ஒப்புதலோடு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வ.உ.சி. விளையாட்டு கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் 7-ந் தேதிக்குள் வ.உ.சி. விளையாட்டு கழக இணைச் செயலாளரிடம் மாணவர்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

    • சிறப்பு மருத்துவ முகாமிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
    • மருத்துவ முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்து கிராமத்தில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி யில் நடந்தது.

    யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவ லர் டாக்டர் தங்கமணி முன்னிலை வகித்தார். எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீவராஜ் பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்மு கையா எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக் கியத்தை பேணும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பிட்டு அட்டைகளை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

    மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவு முறை களை பார்வையிட்டனர். மருத்துவ முகாமில் நூற் றுக்கணக்கான பொது மக்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.

    நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகவதி, மாவட்ட தலைமை அலுவலர் ஐஷ்வர்யா, குலசேகரநல் லூர் பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி, யூனியன் கவுன்சிலர் மொட்டையச் சாமி, மருத்துவ அலுவலர்கள் ஜெய பிரபா, இலக்கியா, ஜீவிதா, சுப்ரமணியன், சித்த மருத்துவர் மல்லிகா, கண் மருத்துவர் வேல்குமார்,

    வட்டார மருத்துவ மேற் பார்வையாளர் முருக ராஜ், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர்கள் காளி முத்து, பாபு, தினேஷ், மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதியம்புத்தூர் அருகே உள்ள குறுக்கு சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு நடந்தது.
    • பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதியம்புத்தூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு புதியம்புத்தூர் அருகே உள்ள குறுக்கு சாலையில் நடந்தது. ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் லெனின் பழ மாணிக்கம் ஆகியோர் பேசினர். இதில் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டு உளுந்து, பாசிப்பயறு ஆகிய பயிர்கள் மஞ்சள் நோய் தாக்கியதால் போதிய விளைச்சல் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே மத்திய -மாநில அரசுகள் உடனடியாக இப்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி சந்தனம் நன்றி கூறினார்.

    • வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் பொது சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்தும் பழுதடைந்த கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் எம்.எல்.ஏ. ஏறியும் ஆய்வு செய்தார். அப்போது யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் மேற்பார்வையாளர் பரமசிவன், வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்திஸ்வரன், மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை இமாக்குலேட், தெற்குவீரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள் சுப்பையா, துணைத் தலைவர் சண்முகராஜ் உட்பட அரசு அலுவலர்கள், கிராமமக்கள் உடன் இருந்தனர்.

    • அருண்குமார் என்ற மாணவர் 19 வயது பிரிவு போட்டியில் முதல் இடத்தை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
    • மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் பாலமுருகன், நிர்வாக இயக்குனர் நிர்மலா பாலமுருகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லான்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் அருண்குமார் என்ற மாணவர் 19 வயது பிரிவு போட்டியில் முதல் இடத்தை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் சஞ்சய் காந்த் என்ற மாணவன் 17 வயதிற்கான சைக்கிள் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தார். இதை அடுத்து பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் பாலமுருகன், நிர்வாக இயக்குனர் நிர்மலா பாலமுருகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
    • ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஓட்டப்பிடாரம்:

    கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை அரசு பஸ் வந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் வாஞ்சிமணியாச்சி ரெயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பொதுமக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பஸ் சேவை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி, கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ புதிய வழித்தடத்தில் பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவ மனைக்கு வரும் பொதுமக்க ளிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மருத்துவமனை நிர்வாகம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்காதவாறு அனைவரும் நடந்து கொள்ளும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி தொ.மு.ச செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் பிரேமா, அய்யாத்துரை மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஓட்டப்பிடாரம் மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    • குளம் நிரம்பியதால் இந்த பகுதி நிலத்தடி நீர் பெருகும்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பட்டி, ஐரவன்பட்டி, பரிவள்ளி கோட்டை ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை நீர் ஓடையின் வழியாக வந்து ஒட்டநத்தம் குளம் நிரம்பியது. ஒட்டநத்தம் குளத்தின் மறுகால் நீர் கொம்பாடி ஓடை வழியாக முரம்மன் குளத்திற்கு வந்து அந்த குளமும் நிரம்பி மறுகால் சென்றது. இக்குளம் நிரம்பியதால் இந்த பகுதி நிலத்தடி நீர் பெருகும். இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வழியும். இப்பகுதி கிணற்று பாசன விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இப்பகுதியில் உள்ள மானாவாரி விவசாயிகள் மழைக்கு முன்பாக உளுந்து, பாசிப்பயறு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர். தற்சமயம் பெய்த மழையால் பயிர்கள் நன்றாக முளைத்துள்ளன. இதனால் இப்பகுதி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வாசுதேவநல்லூர், செங்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் தங்கி உள்ளனர்.
    • காயமடைந்த 3 மாணவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி கிராமத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி உள்ளது.

    வாசுதேவநல்லூர், செங்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் தங்கி உள்ளனர்.அதுபோல் குப்பக் குறிச்சியை சேர்ந்த மாணவர்களும் இதே விடுதியில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் விடுதியில் மின்விளக்கை போடுவது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். விடுதி காப்பாளர் சம்பந்தப்பட்ட மாண வர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் வெளியிலிருந்து நண்பர்களை வரவழைத்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த 3 மாணவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன், தாசில்தார் சுப்புலட்சுமி, பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர்கள் சீதாராமன், மார்த்தாண்ட பூபதி கல்லூரி சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊரக உள்ளாட்சி ஆதிதிராவிடர் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடை பெற்றது.
    • ஆதிதிராவிடர் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்உரிமைகள் குறித்து பயிற்சி கையேடுகளின் மூலம் விளக்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சார்பில் ஊரக உள்ளாட்சி ஆதிதிராவிடர் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடை பெற்றது. யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், உரிமைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி கையேடுகளின் மூலம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், மாவட்ட அளவிலான பயிற்றுனர்கள் அழகு நாச்சியார்,அதிசயமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சோதனையில், 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது.
    • கார்களை ஓட்டி வந்த இசக்கிவேல், சவரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்தவழியாக வந்த 2 கார்களை மறித்து சோதனை செய்தனர். அதில் 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்களை ஓட்டி வந்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த இசக்கிவேல் (வயது47), மாப்பிள்ளையூரணி சவரிமுத்து ஆகியோரை கைது செய்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகளையும், கார்களையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ×