என் மலர்
நீங்கள் தேடியது "அருகே"
- லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
- சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தினசரி நூற்றுக் கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலை களில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட ஒரு கனரக லாரியை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
- சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் குதிரால்விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தாசையன் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு பகுதியில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சிமெண்ட் கட்டையை தலையில் சுமந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தாசையனை மீட்டு குழித் துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள செருப்பங்கோடு கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், கல்குளம் தாசில்தார் மற்றும் குருந்தன் கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி, செருப்பங்கோடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே விவசாய தோட்டமான தென்னந் தோப்பில் தனியார் நிறுவனம் டவர் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. டவர் அமைக்கும் பணியை அரசு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம்.
- இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரையில் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து இந்த பகுதியில் கொட்டி வைத்து பிளாஸ்டிக் குப்பை, மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்து செல்கிறார்கள்.
தினமும் தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம். இந்த பகுதியில் வேறு கடைகள் எதுவும் இல்லை. இதனால் குப்பைகள் மட்டும் ஒரு பகுதியில் சேகரிக்கப்பட்டு வந்தனர். நேற்று இரவு அந்த பகுதியில் இருந்து திடீரென தீ மளமளவென எரிந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ் ஆகி யோர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இது குறித்து குலசேகரம் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்த்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கன்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
- கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு வாழ்க்கை நடத்தினர்.
- பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் காப்பிகாடு பகுதியை சேர்ந்த டயானா என்ற பெண்ணிடம், 16½ பவுன் தங்க சங்கிலியை கடந்த 4-ந் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த சாலையோரம் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் டயானாவிடம் நகை பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது அலிகான் (வயது 24), அப்துல் ராசிக்(29) ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவனாக சேக்ஜாமான் மைதீன் என்பவர் செயல்பட்டதும் இந்தக் கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சேக்ஜாமான் மைதீனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அதில் கிடைக்கும் பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சொகுசாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜன்னல் கம்பி வழியாக புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
- ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே இனயம் கடற்கரை கிராமம் நடுத்தெரு பகுதி 13-வது அன்பியத்தை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 47).
இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்ப வத்தன்று இரவில் வீட்டில் அனைவரும் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது ஜாண்சன் கையில் கிடந்த ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.
மேலும் அவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தையும் காணவில்லை. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டி னுள் நுழைந்து திருடி யிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டுபோன பொருட்க ளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கடன் தொல்லையால் தூக்கில் தொங்கினார்
- 12 வயதில் ஒரு மகனும் 7வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள மருந்துகோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கற்பகம் (வயது 33). இவர்கள் காதல் திருமணம் செய்துள்ளனர். 12 வயதில் ஒரு மகனும் 7வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இவர்கள் கொரோனா காலத்தில் சுய உதவி குழுக்க ளிடம் கடன் வாங்கியதால் கட்ட முடியாமல் தவித்துள்ளனர். இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டன் வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த கற்பகம், தனது குழந்தைகளை வீட்டிற்கு வெளியே அனுப்பி விட்டு மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்கினார். வெகுநேரம் ஆகியும் தாயார் வெளியே வராததால் இளைய மகள் அழ ஆரம்பி த்தாள். உடனே அருகில் உள்ளவர்கள் கற்பகத்தின் வீட்டுக்கு சென்று கதவை தட்டிய போது திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கற்பகம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கற்பகம் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து கற்பகம், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது சம்மந்தமாக மணிக ண்டன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
- 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையில மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை அதிரடியாக கல்லடி மாமூடு பகுதியை சேர்ந்த ராஜேஸ் (வயது 40) என்பவர் புகையில விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
உடனே போலீசார் அவரின் வீட்டை சோதனை செய்த போது 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
அவருக்கு எங்கியிருந்து புகையிலை பாக்கெட் வருகிறது எந்த பகுதியில் விற்பனை செய்து வந்தார் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தாரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
- இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- அரவிந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
கன்னியாகுமரி:
கொல்லங்கோடு அடுத்த சூழால் நெய்தவிளை பகுதியை சேர்ந்தவர் விசுவம்பரன். இவரது மகன் அரவிந்த் (வயது 26). இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அரவிந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக விசுவம்பரன் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
- தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே நான்காம் திட்டுவிளை செறுகோல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது (57). இவர்களுக்கு ஸ்டாலின் ஜோஸ் (23) என்ற மகனும், ஷைனி (28) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஸ்டாலின் ஜோஸ் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். வாரம்தோறும் வீட்டுக்கு வருவது வழக்கம்.
வீட்டில் செல்வராஜ் அவரது மனைவி செல்வி, மருமகள் பென்சிறோஸ் ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். சமீபகாலமாக செல்வி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன அழுத்ததில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று காலையில் வீட்டின் பின்புற தோட்டத்தில் செல்வி தன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பிடித்து உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் செல்வி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டனர்.
மேலும் தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. செல்வியின் கணவர் செல்வராஜ் திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வி தற்கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர்.
- கணவன்-மனைவி அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் கணேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (வயது 38). இவர்களுக்கு 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வகுமாரி அதிக மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார்.
உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயகுமாரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் பார்த்ததை தாயார் திட்டியதால் பரிதாபம்
- காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்.
கன்னியாகுமரி:
பூதப்பாண்டி அருகே உள்ள மேல ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவப்பிள்ளை. இவரது மகள் நிலா (வயது18).
இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் அவர் நள்ளிரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த அவரது தாயார் கண்டித்தார். இந்த நிலையில் இன்று காலை நிலா வீட்டின் பின்பகுதியில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், நிலா தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நிலாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.