search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முழங்க"

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்ப டுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்ப ட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று கடை வீதிகளில் ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் விற்பனை அமோகமாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    ஈரோடு எஸ்.கே. சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்தும், கதர் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து இனிப்பும் வழங்கினர். இதேப்போல் பல்வேறு பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

    பவானி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக டிரம்ஸ் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மலர்தூவி நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். திருமண வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர். அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி பெருந்துறை மொடக்குறிச்சி சத்யமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வழங்கக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. இன்று பள்ளிகள் தொடங்கினாலும் ஒரு வாரத்திற்கு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த படாது என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    ×