என் மலர்
நீங்கள் தேடியது "நேஷனல் ஹெரால்டு வழக்கு"
- காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
- இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் ஏதோ பிரச்சனை உள்ளது என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நளின் கோலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமை யங் இந்தியன்ஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறது. ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆதரவாக அறிக்கைகளை வெளியிடுவது காங்கிரஸ் பீதியில் இருப்பதைக் காட்டுகிறது.
தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடத்துதல் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு வழக்கிலிருந்து விலகிச் செல்கிறது என்பதையும், அவர்கள் வழக்கிலிருந்து மக்களின் கவனத்தை நிறுவனங்களைத் தாக்கும் வகையில் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்பதையும் நிரூபிக்கிறது.
தேர்தல் ஆணையம் சிறந்த சாதனைப் பதிவைக் கொண்டிருப்பதால் இது ஒரு தீவிரமான விஷயம். தேர்தல்களில் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைத்துள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இதுபோன்ற பல தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று இப்போது எம்.பி.க்களாக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தையை நீங்கள் எவ்வாறு கேள்வி கேட்கிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
- நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும்.
- போராட்டங்கள் நடத்துவது பற்றி முடிவு.
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி விவாதிக்க காங்கிரஸ் கட்சி தனது பொதுச்செயலாளர்கள், துணை அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்துக்கு நாளை (சனிக்கிழமை) ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கட்சி தலைமையை குறிவைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது பற்றி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
- அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
- இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இதை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சித் தலைவர் உத்தித் ராஜ், "பொதுமக்களை விட யாரும் பெரியவர்கள் அல்ல என்பதால் நாங்கள் பொதுமக்களிடம் செல்ல விரும்புகிறோம்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது போலியான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
- சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
- முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
- ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
- வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜதந்திர பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ள அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவித்து இருந்தது.
ராகுல் காந்தியின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்று கோர்ட்டு தெரிவித்தது.
- நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடியிலான அசையா சொத்துகளை முடக்குவதற்கான அறிவிக்கையை அமலாக்கத்துறை நேற்று வெளியிட்டது.
- அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வின் கூட்டாளியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று விமா்சித்துள்ளது.
புதுடெல்லி:
1937-ல் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல் நிறுவனம் (ஏ.ஜே.எல்) சாா்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது.
1947-ல் சுதந்திரத்துக்கு பிறகு முதல் பிரதமராக நேரு பதவியேற்றதால் இயக்குனர் பதவியில் இருந்து நேரு விலகினாா்.
காங்கிரஸ் கட்சி செய்திகளை பிரதானமாக தாங்கி வந்த அந்தப் பத்திரிகை 2008-ல் மூடப்பட்டபோது, அந்த நிறுவனத்துக்கு (ஏ.ஜே.எல்.) ரூ.90.21 கோடிக்கு கடன் இருந்தது. ஏ.ஜே.எல். நிறுவனத்தை 2012-ல் தலா 38 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் வாங்கியது.
காங்கிரஸ் கட்சியின் பணத்தைப் பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தாா்.
இதையடுத்து, அமலாக்கத்துறை கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்து, காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடியிலான அசையா சொத்துகளை முடக்குவதற்கான அறிவிக்கையை அமலாக்கத்துறை நேற்று வெளியிட்டது.
அதில் டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள ரூ.661.69 கோடியிலான அசையா சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் பங்குகள் மூலமாக கையகப்படுத்தியதில் குற்றம் நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தி இரண்டாவது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வின் கூட்டாளியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று விமா்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், '5 மாநிலத் தோ்தல் தோல்வி பயத்தால் இந்த நடவடிக்கையை பா.ஜ.க. மேற்கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் பெட்டி நடவடிக்கைக்கு காங்கிரஸ் அஞ்சாது.
பணப் பரிவா்த்தனையே நடைபெறாத இந்த விவகாரத்தில் சொத்துகள் முடக்கப்படுவதற்கு, இந்த நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடா்பு உள்ளதே காரணம்' என்று அவா் தெரிவித்தாா்.
- உண்மையில், ஏமாற்றப்பட்டதாகக் கூறும் புகார்தாரர் ஒருவர் கூட இல்லை.
- தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் திசை திருப்ப, வஞ்சகம், பொய்களால் முன்கூட்டியே திட்டமிட்டு, ஜோடிக்கப்பட்ட நடவடிக்கை இது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களின் குரலாக பண்டித ஜவஹர்லால் நேருவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இன்றைய ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றி கண்ட நேஷனல் ஹெரால்டு இன்றைய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் போக்கு நிச்சயம் முறியடித்து காட்டும்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்து 2004-ல் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றி, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதை எவரும் மறுக்க முடியாது.
ஆனால், அத்தகைய ஆட்சியை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் மீது ஏதாவது ஒரு வகையில் ஊழல் வழக்கில் சிக்க வைக்க மோடி அரசு பகீரத முயற்சிகளை மேற்கொண்டது.
அதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் 2014-ல் சுப்பிரமணியசாமி கொடுத்த புகாரை பயன்படுத்தி, பழிவாங்கும் நோக்குடன் நேஷனல் ஹெரால்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ரூபாய் 750 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய அசோசியேட் ஜர்னல் லிமிடெட் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அடையப்போகும் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் பா.ஜ.க.வின் அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. சில முன்னறிவிப்பு அல்லது முக்கிய குற்றத்தின் விளைவாக மட்டுமே பண மோசடி தடுப்பு நடவடிக்கை இருக்கும். அசையா சொத்தை மாற்றவில்லை. இந்த வழக்கில் பண பரிவர்த்தனை இல்லை. குற்ற நடவடிக்கை இல்லை. உண்மையில், ஏமாற்றப்பட்டதாகக் கூறும் புகார்தாரர் ஒருவர் கூட இல்லை. தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் திசை திருப்ப, வஞ்சகம், பொய்களால் முன்கூட்டியே திட்டமிட்டு, ஜோடிக்கப்பட்ட நடவடிக்கை இது.
சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற எந்தவொரு கூட்டணியினராலும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. அடையப்போகும் தோல்வியைத் தடுக்க முடியாது. அசையா சொத்துகளை அடமானம் வைத்தே கடன் பெறப்பட்ட நிலையிலும், பணப்பரிமாற்றத்தில் விதிமீறல் இல்லாத நிலையிலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளக் குரலாக, காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமாக திகழும் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துகளை முடக்குவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது ஒரு அப்பட்டமான சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய அற்பத்தனமான பழிவாங்கும் உத்தியை வைத்து எந்த வகையிலும் இந்திய தேசிய காங்கிரசை அச்சுறுத்த முடியாது. இதை சட்டரீதியாக காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவக்குமார் ஆஜரானார்.
- ராகுல்காந்தி தற்போது தனது யாத்திரையை கர்நாடகாவில் நடத்தி கொண்டிருக்கிறார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவக்குமார் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க சிவக்குமார் விடுத்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தி தற்போது தனது யாத்திரையை கர்நாடகாவில் நடத்தி கொண்டிருக்கிறார். இதில் சிவக்குமார் கலந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
- இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்தபோது நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.
- பாரம்பரியமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முடக்க நடக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.
புதுடெல்லி:
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகையை வெளியிட்டு வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனராக கொண்ட யங் இந்தியன் நிறுவனம் கைப்பற்றியது.
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை முடிந்ததும், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அமலாக்க துறையினர் நேஷனல் ஹெரால்டு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியன் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
அமலாக்க துறையின் அனுமதியின்றி இந்த அலுவலகத்தை யாரும் திறக்க கூடாது என எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீசும், அலுவலக வாயில் முன்பு ஒட்டப்பட்டது.
யங் இந்தியா அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று மாலை காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி பேசியதாவது:-
இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்தபோது நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். நாட்டு மக்களுக்கு சுதந்திர தீயை மூட்டவும், நாடு சுதந்திரம் பெறவும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை முக்கிய பங்காற்றியது.
இந்த பத்திரிகையை முடக்க ஆங்கிலேயர்கள் கூட இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது இல்லை. ஆனால் இப்போது ஆட்சியில் இருப்போர் இந்த பத்திரிகை மீது தேவையற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாரம்பரியமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முடக்க நடக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.
காங்கிரசாரின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் காட்ட வேண்டும். அதோடு பாராளுமன்றத்திலும் பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யங் இந்தியன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவத்திற்கும், காங்கிரஸ் அலுவலகம் மற்றும் சோனியா வீட்டிற்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்ட சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நடந்த பாராளுமன்ற கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வரும் யங் இந்தியன் அலுவலக பொறுப்பாளர்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியின் மேல் சபை தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை விசாரணைக்கு வருமாறு அமலாக்க துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அப்போது அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து அவருக்கு மீண்டும் அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.
- வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை சிமெட்ரி சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராயபுரம்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை சிமெட்ரி சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனை தடுத்த போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
- சோனியா காந்தி கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
- வரும் 26ம் தேதி சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதற்கிடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் புதிய சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அன்றைய தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், ஜூலை 26-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது.