search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர்கள்"

    • நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இறந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என தெரியவந்தது.

    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என்பதும், அவர்களில் 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதும் தெரிய வந்தது.

    ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக தேசிய போலீஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இப்படி உயிரிழந்தவர்களில் 65 வயது முதல் 70 வயது தாண்டியவர்கள் அதிகம். வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர். 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியே கண்டுபிடிக்க முடிந்தது. 130 பேர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • சென்னை மாநகர காவல் துறையில் முதியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கடந்த ஜனவரி மாதம் பந்தம் என்கிற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
    • பந்தம் திட்டத்தின் மூலமாக முதியவர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் அதற்காக தனித்தனி காவலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள்.

    வயசான காலத்துல என்னால வெளியில போய் காய்கறி வாங்க முடியல. எனக்கு தினமும் இரண்டு கீரை கட்டு வேணும். உங்களால வாங்கித் தர முடியுமா? என்று கேட்டதும் ஓடோடி சென்று உதவி செய்திருக்கிறார்கள் சென்னை போலீசார்.

    என்னது... சென்னை போலீஸ் கீரை வாங்குவதற்கெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்களா? என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இதனை நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும். சென்னை போலீசார் முதியோர்களுக்காக அவர்களைத் தேடித் தேடி உதவி செய்து வருகிறார்கள். கரடு முரடான காக்கி சட்டைக்குள் இத்தனை கருணை உள்ளமா? என்று கண்களை ஆச்சரியத்துடன் விரிய வைக்கிறது சென்னை போலீசாருக்கும் முதியோர்களுக்கும் இடையேயான இந்த பந்த பாசப் பிணைப்பு.

    கீரைக்கட்டு மட்டுமின்றி மருந்து மாத்திரைகளையும் கூட முதியவர்களுக்காக வாங்கி கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகர போலீசார். இப்படி முதியவர்களுக்காக அவர்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை தேடி தேடி கண்டறிந்து தனியாக இருக்கும் முதியவர்களின் குடும்பத்தில் ஒருவர் போல தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகர காவல் துறையினர்.

    சென்னை மாநகர காவல் துறையில் முதியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கடந்த ஜனவரி மாதம் பந்தம் என்கிற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. பரபரப்பான சென்னை மாநகரில் சென்னை வாசிகள் பலர் பெற்றோர்களை தனியாகவே தவிக்க விட்டு இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆசை ஆசையாய் வளர்த்து அவர்களை பார்த்து பார்த்து கவனித்த தாய் தந்தையர் பலரை பிள்ளைகள் தவிக்க விட்டு விட்டு தனியாகவே பிரிந்து வாழ்வதை பார்க்க முடிகிறது.

    இது போன்ற நேரங்களில் முதியோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு யாரும் இருப்பதில்லை. இதனால் பல்வேறு சிரமங்களை வயதானவர்கள் சந்தித்து வருகிறார்கள். தங்களுக்கு தேவையானதை யாராவது தினமும் வாங்கிக் கொடுக்கமாட்டார்களா? என்கிற ஏக்கம் தனியாக வசிக்கும் ஒவ்வொரு முதியவர்களின் மனதிலுமே மேலோங்கி காணப்படுகிறது. பெற்ற பிள்ளைகளே தவிக்க விட்டு விட்டு சென்று விடும் நிலையில் பக்கத்தில் இருப்பவர்களா ஓடோடி சென்று உதவி செய்துவிடப் போகிறார்கள்?



    இப்படிப்பட்ட சூழலில் தான் முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பந்தம் என்கிற பெயரில் சென்னையில் வசிக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்காக புதிய திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும் கலந்து கொண்டார்.

    இந்த பந்தம் திட்டத்தின் மூலமாக முதியவர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் அதற்காக தனித்தனி காவலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள். கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் இணை கமிஷனர் கயல்விழி தலைமையில் பெண் போலீஸ் படையினர் 24 மணி நேரமும் 75 வயதை தாண்டிய முதியவர்களுக்கு உதவுவதற்காக தயாராக இருக்கிறார்கள். தங்களது தேவைகளுக்காக முதியவர்கள் 9499957575 என்ற கட்டணமில்லா இலவச செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தொலைபேசி எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு முதியவர்கள் எந்த நேரமும் அழைக்கலாம் என்று போலீசார் அறிவித்திருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே இந்த தொலைபேசி எண் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சென்னை மாநகரிலுள்ள வயதான தாத்தா பாட்டிகளில் தனியாக வசிப்பவர்கள் தினமும் சென்னை போலீசை அழைத்து உதவி கேட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 28 பேர் தொடர்பு கொண்டு பேசி உள்ள நிலையில் இதுவரை

    150-க்கும் மேற்பட்டோர் உதவி கேட்டு நாடி இருக்கிறார்கள். இப்படி உதவி கேட்டு பேசும் முதியவர்களில் பலர் தங்களது உணவு தேவைகளை பூர்த்தி செய்யவும் மருந்து மாத்திரைகள் வாங்கி தரவும் போலீசாரின் உதவியை நாடி உள்ளனர்.

    வயதான மூதாட்டி ஒருவர் எனக்கு தினமும் கீரை வேண்டும். வெளியில் சென்று என்னால் வாங்க முடிவதில்லை அது கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? என்று குழந்தைகள் தின்பண்டங்களை கேட்பது போல கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பந்தம் பிரிவு போலீசார் அதற்கென்னம்மா... ஏற்பாடு செய்து விட்டால் போச்சு எனக் கூறி தினமும் கீரை கட்டு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கீரை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவரிடம் சொல்லி மூதாட்டியின் வீட்டுக்கு தினமும் இரண்டு கட்டு கீரையை கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதேபோன்று மேலும் சிலர் தங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் ஆனால் அதற்கான மருந்து மாத்திரைகளை வெளியில் சென்று வாங்குவதற்கு சிரமமாக உள்ளது என்றும் அதனை யாராவது வீடு தேடி வந்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதற்கும் போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    அதே நேரத்தில் இட பிரச்சினை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு உதவி செய்ய முடியுமா? என்றும் முதியவர்கள் பலர் உதவி கேட்டுள்ளனர். இது போன்ற பிரச்சினைகளுக்கும் போலீ சார் சட்ட ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இதுபோன்று தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ள சென்னை மாநகர காவல் துறையினர் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பந்தம் திட்டம் காவல்துறைக்கும் மூத்த குடிமக்களுக்கும் இடையேயான பாச பந்தம் என்று கூறி பெருமிதப்பட்டார் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர். ஆனால் சென்னை மாநகர காவல் துறையினர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதியவர்களை பாதுகாக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கியுள்ள இந்த பந்தம் சிறப்பு திட்டம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியதாகவே மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. முதியோருக்கும் போலீசுக்கும் இடையேயான இந்த பாச பந்தம் காவலர்களை உணர்வுப் பூர்வமான மகன்களாக... மகள்களாகவும் மாற்றி இருக்கிறது என்றே கூறலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அது 100 சதவீதம் உண்மைதான் என்பதையும் சென்னை போலீசாரின் செயல்பாடுகள் உணர்த்தியுள்ளன.

    • புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன்.
    • 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும்.

    பெங்களூரு:

    இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் உருமாறிய ஜே.என்-1 வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாநில அரசு புதிய வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதால் கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இதில் கொரோனாவை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சில ஆலோசனைகளை அந்த குழு வழங்கியுள்ளது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. இன்னும் 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும். தற்போதைக்கு கர்நாடகம் சகஜ நிலையில் உள்ளது. பாதிப்பு அதிகரித்தால் மட்டும் பல்வேறு தடைகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது அத்தகைய சூழ்நிலை எழவில்லை. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 முதியவர்கள் இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்த வர் அழகர்சாமி (வயது70). இவரது மனைவி ராம லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராமலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

    இதனால் அழகர்சாமி மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கள்ளிக்குடியை அடுத்து ள்ள சோளம்பட்டியை சேர்ந்த வர் ராஜூ (62). இவரது மனைவி பாண்டி யம்மாள்.

    இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனமுடைந்த ராஜூ விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலியாகினர்.
    • சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது60). இவர் கப்பலூரில் உள்ள மில்லில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு பணி முடிந்து 4 வழிச்சா லையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜெயபாண்டியின் மகன் பாண்டி கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் பேரை யூர் அருகேயுள்ள துள்ளுக் குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் மருதமுத்து(60). இவர் ஏ.கிருஷ்ணாபுரத்தில் நடந்த கோவில் திருவிழா விற்கு உறவினர் சமயகருப்பு வுடன் இருசக்கர வாக னத்தில் சென்றார். சமய கருப்பு வாகனத்தை ஓட்டி னார். அதிகாரிப்பட்டி-சின்ன கட்டளை சாலையில் சென்றபோது பின்னால் அமர்ந்திருந்த மருதமுத்து நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருத முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 14 வட்டாரங்களில் 1,082 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் பள்ளி கல்வித்துறை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத, கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி (77), தாராபுரம் (108),குடிமங்கலம் (59),காங்கயம் (69),குண்டடம் (90), மடத்துக்குளம் (56),மூலனுார் (80),பல்லடம் (89), பொங்கலுார் (67),திருப்பூர் வடக்கு (78),தெற்கு (59), உடுமலை (105),ஊத்துக்குளி (65),வெள்ளகோவில் (80) உள்ளிட்ட 14 வட்டாரங்களில், 1,082 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இம்மையங்களில் கல்வி பயிலும், 19 ஆயிரத்து, 957 பேருக்கு நேற்று, அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது.

    15 வயதுக்கு மேற்பட்டோர் என குறிப்பிட்டு இருந்தாலும், பெரும்பாலான மையங்களில், 40 முதல் 50 வயதை கடந்தவர்களே மாணவ,மாணவியராக மாறி வகுப்பறையில் அமர்ந்து தேர்வெழுதி அசத்தினர்.அனுப்பர்பாளையம் புதுார், பத்மாவதிபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தேர்வு பணிகளை ஒருங்கிணைத்தார்.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அப்புறப்பட்டது.
    • முதியவர்கள் பலர் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த கருவேப்பஞ்சேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தினமும் வேலை நிமித்தமாக அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், இ.சி.ஆர். சாலையில் உள்ள பஸ் நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்பட்டது.

    ஆனால், இது நாள் வரை அங்கு பஸ் நிலையம் கட்டவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பலர் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையில் நனைந்தபடியும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    எனவே, பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தை சேர்ந்தவர் சோலை(வயது 82). இவர் உடல் நலக்கு றைவால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் சோலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதியவரின் மகள் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம் அருகே உள்ள கட்டதேவன் பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா(வயது72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    முத்தையா, அவரது மனைவி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முத்தையா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதியவர் முத்தையாவின் மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து முதியவர்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என புகார் மனு
    • 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரிசையில் நிற்காமல் சேவை வழங்கும் நடைமுறையை கண்டிப்புடன் தபால் நிலையங்கள் பின்பற்ற வேண்டும்;

    திருப்பூர்

    தபால்நிலையங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள், அனைத்து வகையான பரிவர்த்தனையையும், வரிசையில் நிற்காமல் பெறலாம். இதற்கு தங்கள் வயது சான்றிதழை சமர்ப்பித்தால் போதும் என தபால்துறை தெரிவித்திருந்தது.

    ஆனால் பெரும்பாலான தபால்நிலையங்கள், இந்த நடைமுறையை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால் முதியவர்களுக்கு இப்படி ஒருநடைமுறை இருப்பதேதெரியவில்லை. இந்நிலையில் குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து முதியவர்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என புகார் மனுக்கள்தபால்துறைக்கு அதிகம் வருகின்றன.

    இதைத்தொடர்ந்து 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரிசையில் நிற்காமல் சேவை வழங்கும் நடைமுறையை கண்டிப்புடன் தபால் நிலையங்கள் பின்பற்ற வேண்டும்; இதுகுறித்து பொதுமக்கள் அறியும் வகையில், அனைத்து தபால்நிலையங்களிலும் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்று தமிழக தபால் வட்டம் அறிவுறுத்தியுள்ளது.

    • மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும், ஏனெனில் நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.
    • மூத்த குடிமக்களிடம் அதிகம் பேசினால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.

    வயதானவர்கள் பொதுவாக தொண தொண என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அது நமக்கு சற்றே அசௌகரியம் உண்டாக்கும். ஆனால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா.?

    அந்த தொண தொண பேச்சு, அவர்களைக் காப்பாற்ற, அவர்களை அறியாமலேயே இயற்கை கையாளும் ஒரு வழி. ஆம்.. வயதாகும்போது அதிகம் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும், ஏனெனில் நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.

    மூத்த குடிமக்களிடம் அதிகம் பேசினால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன. முதலாவதாக பேசுவது மூளையை செயல்படுத்துகிறது மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைக்கிறது, ஏனெனில் மொழியும் சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன, பேசாத மூத்த குடிமக்களுக்கு நினைவாற்றல் குறையும் வாய்ப்புகள் அதிகம்.

    அடுத்து, பேசுவது மன அழுத்தத்தை நீக்குகிறது, மன நோய்களைத் தவிர்க்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அடிக்கடி ஒன்றும் சொல்லாமல் நெஞ்சில் புதைத்து நம்மையே திணறடித்துக் கொள்கிறோம். உண்மைதான்! அதனால் மூத்தவர்கள் அதிகம் பேச வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    மூன்றாவதாக, பேசுவது முகத் தசைகளுக்குப் பயிற்சியளிக்கும். தொண்டை மற்றும் நுரையீரலின் திறனை அதிகரிக்கும். அதே நேரத்தில், இது கண்கள் மற்றும் காதுகள் சிதைவடையும் அபாயத்தைக் குறைக்கிறது. மற்றும் தலைச்சுற்றலை குறைக்கிறது.

    சுருக்கமாகச் சொன்னால், ஓய்வுபெற்றவர்கள், அதாவது மூத்த குடிமக்கள் மறதி நோயைத் தடுக்க ஒரே வழி, முடிந்தவரை மக்களுடன் சுறுசுறுப்பாகப் பேசுவதும்தான். இதற்கு வேறு எந்த சிகிச்சையும் இல்லை.

    -தஞ்சை வராகி

    • முதியவர்கள் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 முதியவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மதுரை:

    கீரைத்துறை, காமராஜ புரம், குமரன் சாலையைச் சேர்ந்த மணி மகன் சீனிவாசன் (வயது 21), கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனிவாசன், நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    முதியவர்கள்

    ஹார்விப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவருக்கு உடல் நலக்குறைவு இருந்தது. சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

    மதுரை தேவிநகர் செக்கடி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. முதியவரான இவருக்கு உடல் நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் சம்பவத்தன்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 முதியவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    கூலித்தொழிலாளி

    பெத்தானியாபுரம், மேட்டு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (55). கூலித் தொழிலாளி. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்திய டைந்த சிவகுமார், நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வாலிபர்

    குலமங்கலத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ் (28). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, மன பதட்டத்தில் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் குலமங்கலம், ராணி மங்கம்மாள் சந்திப்பு பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். செல்லூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • பயணிகள் நலன் கருதி மீண்டும் காரைக்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியில் தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.
    • 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் கட்டண சலுகைகளை ரெயில்வே நிர்வாகம் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் மெய்ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பழனிவேல், அமைப்பாளர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பாரதி நடராஜன், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரும் 24ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள செகந்தராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரெயில் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கப்படுவதை பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த ரெயிலை தஞ்சாவூர் மார்க்கமாக திருப்பி விட வேண்டும் என தஞ்சை ரெயில் பயணிகள் சங்கம் முயற்சிப்பதை கண்டிக்கிறோம். செகந்திராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரெயில் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கப்பட இருக்கிற இந்த ரெயிலை பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும், இந்த வழித்தடத்தில் அகல ரெயில் பாதை மாற்றுவதற்கு முன் இயக்கப்பட்ட காரைக்குடி- சென்னை கம்பன் விரைவு ரெயிலை பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி மீண்டும் காரைக்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியில் தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் கட்டண சலுகைகளை ரெயில்வே நிர்வாகம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், கதிர்காமம், சேகர், பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×