என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தங்கபாண்டியன் எம்.எல்.ஏ."
- கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- துணை சேர்மன் துரைகற்பகராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தனது 3 மாத ஊதியத்தில் இருந்து 500 கர்ப்பிணிகளுக்கு 19 வகையான சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-
கருணாநிதி ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம், அரசு பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் வசதி, குடும்ப தலைவி களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை என பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.
இவ்வாறு அவர் பேசி னார்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தங்கலட்சுமி, பங்கஜம், ராஜபாளையம் மருத்துவ அலுவலர்கள் வரலட்சுமி, ரம்யா, உமாமகேஸ்வரி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கள் சுமதி ராமமூர்த்தி, கல்பனா குழந்தை வேலு, சேகர், நவமணி, சொர்ணம், துணை சேர்மன் துரைகற்பக ராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ராஜபாளையம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அம் மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற் றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டி யன் குத்து விளக்கேற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காக் கும் திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீடு திட் டத்தின் மூலம் பொதுமக்கள் உயிரை காக்கும் ஒரே முதல் வர் நமது முதல்வர் தான். இந்தியாவில் மருத்துவத் துறையில் பல்வேறு சாத னைகளை செய்துவரும் தமிழ்நாடு முதல்வருக்கு நாம் எப்போதும் உறுதுணை யாக இருக்க வேண்டும்.
ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை யை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அனைத்து பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் மருத்து வமனை திறக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் தலை மை மருத்துவர்கள் கருணாகரபிரபு சுரேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொது மக்கள், கிளை செயலாளர் தங்க மணி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.
- புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி 15-வது வார்டு வண்ணார் புதுத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், சேத்தூர் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை வசதி செய்து தரப்படும். முக்கிய இடங்க ளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க நீர்தேக்க தொட்டி கட்டப்படும் என்றார்.
மேலும் சேத்தூர் பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ. கூறினார்.
ெதாடர்ந்து அன்னதா னத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பால சுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா,தி.மு.க செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர் மன் காளீஸ்வரி மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கவுன் சிலர் ராஜசோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் பயணிகள் நிழற்குடையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை அருகில் பொதுமக்களின் நலன்கருதி ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.
அதேபோல் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி பஸ் பராமரிப்பு மைதா னத்திற்கு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழா நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை யையும், பேவர் பிளாக் தளத்தையும் திறந்து வைத்தார்.
அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறை மூலம் பெண்களுக்கு கட்டண மில்லா பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்து சிறப்பான சேவை செய்துள்ளார். இந்த சேவையை பெண்கள் போற்றி வருகின்றனர். அதுபோல் ராஜபா ளையம் தொகுதியில் அரசின் வழிகாட்டுதலின்படி 2 டிப்போ மேலாளர்களும் பஸ் சேவையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்' என்றார்.
இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் மாரியப்பன், பொது மேலாளர் சிவலிங்கம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், துறை மேலாளார் மாரி முத்து, ஜீவா, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கமல கண்ணன், தவம், கவுன்சிலர் ஜான்கென்னடி, வார்டு செயலாளர் குருசாமி, முனியராஜ், நாகேசுவரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- தேங்கிய மழைநீரை அகற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.
- தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.
மழைநீர் அகற்றும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ெரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
மழையால் ெரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலா ளர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனை கேள்விப்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ராட்சத மின்மோட்டார்களை வர வழைத்து தேங்கிய மழைநீரை துரிதமாக வெளியேற்றி பாதையை ஒழுங்குபடுத்தினர்.
நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி மழைநீர் வெளியேறி செல்லும் நீரோடையின் அடைப்பை நீக்கி மழைநீர் தங்குதடையின்றி செல்ல உரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. வும், நகரசபை தலைவரும் கூறுகையில், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை மழை காலங்களில் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள ப்படும்.
மாணவர்கள், மில் தொழிலாளர்கள் இனி அச்சமின்றி கணபதியாபுரம் தரைபாலத்தை கடந்து செல்ல வழிவகை செய்து தரப்படும் என்றனர்.
- ரூ.5.45 கோடியில் சாலை பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தளவாய்புரம் முதல் இனாம்கோவில்பட்டி சாலையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களுடன் சேர்த்து 4 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.
இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.
இதில் பொறியாளர் முத்துமுனிகுமாரி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே உள்ள முகவூரில் கருணாநிதி படத்திற்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.
- ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் தி.மு.க நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள முகவூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
முகவூர் ஊராட்சி, காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி பேரூராட்சி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் தி.மு.க நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் கருணாநிதி படத்திற்கும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தி.மு.க நிர்வாகிகளுடன் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, ஒன்றிய, நகர, துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனாகுழந்தைவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி கடிதத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- பசுமை வீடு திட்டம் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் (2021-22) கீழ் 68 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் அனுமதி கடிதம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், எழை-எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு மற்றும் குடிசை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது தான் குடிசை மாற்று வாரியம். இந்த வாரியத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர், அவர் வழியில் ''முதல்வரின் அனைவருக்கும் வீடுகள் திட்டம்'' மற்றும் பசுமை வீடு திட்டம் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது என்றார்.
அதனைத்தொடர்ந்து சேத்தூர் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மூலதன மானிய நிதித்திட்டம் (2021-22) மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாழவந்தான் கண்மாயில் திறந்தவெளி கிணறு மற்றும் பிரதான குழாய் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையை எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்.
இதில் சேர்மன் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் வெங்கடபாபு, பேரூர் தி.மு.க. செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, ஒன்றிய துணை செயலாளர் குமார், இளைஞரணி சீனிவாசன், செல்வக்குமார், பட்டுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி கருங்குளம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 6-வது நெல் கொள்முதல் நிலையத்தை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகை யில், தொகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் அரசிடமே நெற்களை விற்க விரும்புகின்றனர். அந்தளவிற்கு நமது தமிழக வேளாண்மைத்துறை விவசாயிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டடு வருகிறது. விரைவில் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
இதில் வேளாண்மை துறை அலுவலர் தனலட்சுமி கருங்குளம், அப்பநேரி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரவிச்சந்திரராஜா, உறுப்பினர்கள் பலராம ராஜா, ராமராஜா, கண்ணன் உட்பட ஏராளமான விவ சாயிகள் கலந்து கொண்ட னர்.
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது.
- அப்போது அந்த வழியாக வந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விபத்து நடந்ததை அறிந்ததும் தனது காரை விட்டு இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார்.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு ஒரு அரசு பஸ், 42 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது.
இதில் பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்து சக்கரங்கள் கழன்று ஓடியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 16 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதே வேளையில் பழங்கள் ஏற்றி வந்த ஒரு சரக்கு வேன் மோதி பஸ்சின் பின்புறம் புகுந்தது.
அப்போது அந்த வழியாக வந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விபத்து நடந்ததை அறிந்ததும் தனது காரை விட்டு இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார். அவருடன் நகரசெயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஆதரவாளர்கள் அவருக்கு உதவி புரிந்தனர்.
விபத்தில் காயமடைந்த வேன் டிரைவர் திருமலைக்குமார் (வயது 45), தென்காசி நைனாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (40) ஆகிய இருவரை ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.
மீட்கப்பட்ட இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த அரசு பஸ் டிரைவர் வேல்முருகன் (55) மற்றும் பயணிகள் 21 பேர் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்