search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் பரிசோதனை"

    • திருப்பூர் சரக விற்பனையாளர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.
    • முழு உடல் பரிசோதனை மற்றும் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறை, ரோட்டரி திருப்பூர் காந்திநகர் சங்கம், ரேவதி மெடிக்கல் சென்டர் - அறக்கட்டளை, லோட்டஸ் கண் மருத்துவமனை , பி.ஆர்.எஸ். பல் ஆஸ்பத்திரி சார்பில் திருப்பூர் சரக நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு உடற்பரிசோதனை மருத்துவ முகாம் திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கத்தில் நடைபெற்றது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் முகாமினை துவக்கி வைத்தார். திருப்பூர் சரக விற்பனையாளர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முகாமில் கொரோனா தடுப்பூசி ,பூஸ்டர் ஊசிகள் விற்பனையாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

    துணைப்பதிவாளர்கள் பழனிசாமி,முருகேசன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் ரேட்டரி சங்கத்தலைவர் நித்தியானந்தம், செயலாளர் வெங்கடேஸ், ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் மற்றும் டானிக் இலவசமாக வழங்கப்பட்டது.
    • இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கார்குழலி அறக்கட்டளை, ஜிடி பவுண்டேசன், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், ஆலத்தம்பாடி மேம்படு த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கார்குழலி நிறுவனத் தலைவர் சுடர்விழி வரவேற்புரையாற்றினார். குழந்தைகள் நல மருத்து வர் ராஜா தலைமை தாங்கினார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தலைவர் முனைவர் துரை ராயப்பன் மற்றும் நல்நூலகர் ஆசைத்தம்பி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியை காவ ல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம்தொடக்கி வைத்து சிறப்புரையா ற்றினார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் .அ.பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர், சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், பள்ளி தலைமை யாசிரியர் தங்கராசு, ஆசிரியர் யோகராஜன், ஆசிரியர் கலைச்செல்வன், ஆதிரங்கம் ஊராட்சிமன்ற தலைவர் வீரசேகரன்.

    நெடும்பலம் ஊராட்சிமன்ற துணை தலைவர் சதீஷ், பிவிசி.கீர்த்தி, கமல் கணேசன், ராய் டிரஸ்ட் கோவி.வேதகிருஷ்ணன் மற்றும் கார்குழலி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் டாக்டர். ராஜா, டாக்டர் சதாசிவம், டாக்டர் சவுந்தர்ய லெட்சுமி, டாக்டர் வர்ஷிகா ராஜா, டாக்டர் அபூர்வநிலா, டாக்டர் அரவிந்த் ஆகியோர்கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    அனைவருக்கும் ரத்த வகை, ஹீமோ குளோபின்,சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் ஆகியவை பரிசீலிக்க ப்பட்டு,அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் மற்றும் டானிக் இலவசமாக வழங்கப்பட்டது .இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற் றும் பொது மக்கள் கலந்துகொண்டு இலவச உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.கார்குழலி அறக்கட்டளை ராகேஷ் சர்மா நன்றி கூறினார்.

    ×