என் மலர்
நீங்கள் தேடியது "துண்டறிக்கை"
- கொரடாச்சேரி வட்டாரத்தில் பெருந்தரகாகுடி, எண்கண் இலவன்கார்குடி, முசிறியம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் சுகாதார நடைப்பயணம் நடைபெற்றது
- ஊராட்சி முழுவதும் ஊர்வலமாக சென்று மக்களுக்கு சுகாதார திட்டத்தின் கீழ் திட்ட அறிக்கையை தயாரிக்க உதவுவது குறித்த துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
திருவாரூர்:
தூய்மை பாரத இயக்கம் முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை தேர்வு செய்ய, மக்களுடன் நடைபயணம் மேற்கொண்டு பட்டியல் தயாரிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி கொரடாச்சேரி வட்டாரத்தில் பெருந்தரகாகுடி, எண்கண் இலவன்கார்குடி, முசிறியம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் சுகாதார நடைப்பயணம் நடைபெற்றது. முசிறியம் ஊராட்சியில் நடைபெற்ற சுகாதார நடை பயணத்திற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் ஊராட்சி முழுவதும் ஊர்வலமாக சென்று மக்களுக்கு சுகாதார திட்டத்தின் கீழ் திட்ட அறிக்கையை தயாரிக்க உதவுவது குறித்த துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இத்திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தேர்வு செய்ய மக்கள் அரசுக்கு உதவ வேண்டுமென ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார். இப்பேரணியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.