search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜாஜ் ஆட்டோ"

    • ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் 276 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
    • பஜாஜ் பிரீடம் 125 விநியோகம் கடந்த ஜூலை மாதம் துவங்கியது.

    பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை கடந்த ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பிரீடம் 125 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிஎன்ஜி பைக் விற்பனையில் 5 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.

    செப்டம்பர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த பைக் 5 ஆயிரத்து 018 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் 276 யூனிட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 4 ஆயிரத்து 019 யூனிட்களும், செப்டம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 637 யூனிட்களும் விற்பனையாகி இருக்கிறது.

    இந்த பைக்கின் விநியோகம் கடந்த ஜூலை 18 ஆம் தேதி துவங்கியது. முதற்கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பிரீடம் 125 விநியோகம் செய்யப்பட்டது. நாடு முழுக்க இந்த பைக்கை வாங்க சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரணை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பஜாஜ் நிறுவனம் நாடு முழுக்க சிஎன்ஜி மையங்களை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நாடு முழுக்க 7 ஆயிரம் மையங்களில் சிஎன்ஜி நிரப்பும் வசதியை பஜாஜ் ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கையை 13 ஆயிரம் வரை அதிகப்படுத்த அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    • புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
    • மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகின் முதல் CNG மோட்டார்சைக்கிள் - பஜாஜ் பிரீடம் CNG-ஐ கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. பஜாஜ் பிரீடம் CNG மாடலின் விலை ரூ. 94 ஆயிரத்து 995, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் என்ட் மாடல் விலை இதுவிட அதிகம் ஆகும்.

    இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் தனது பிரீடம் CNG மோட்டார்சைக்கிளின் குறைந்த விலையில் கிடைக்கும் புது வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த பைக் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

    புதிய வெர்ஷனில் விலை குறைப்புக்கு ஏற்ற மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறைந்த விலை CNG பைக் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

     


    பஜாஜ் பிரீடம் CNG பைக்கின் புது வெர்ஷனில் எல்இடி யூனிட்-க்கு மாற்றாக ஹாலோஜன் லைட், புதிய ஹெட்லைட் பிராகெட் வழங்கப்படலாம். இதே போன்று டெலிஸ்கோபிக் ஃபோர்க்கை சுற்றி இருந்த கவருக்கு பதிலாக பிளாஸ்டிக்-ஆல் ஆன ஃபோர்க் கெயிட்டர்கள் வழங்கப்படுகின்றன.

    பாடி பேனல்கள் மறைக்கப்பட்டு இருப்பதால், இந்த பைக் சிங்கில் டோன் பெயின்டிங் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஃபென்டர்கள் மற்றும் ஸ்பிலாட்டர் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

    இந்த பைக்கிலும் 125சிசி எஞ்சின் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த யூனிட் 9.3 ஹெச்பி பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும்.

    • பஜாஜ் CNG பைக் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக்கின் விலை ரூ. 95000 முதல் துவங்குகிறது.

    பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CNG பைக்- பஜாஜ் பிரீடம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் துவக்க விலை ரூ. 95 ஆயிரம் ஆகும். இந்த பைக்- பிரீடம் 125 டிஸ்க் எல்இடி, பிரீடம் 125 டிரம் எல்இடி மற்றும் பிரீடம் 125 டிரம் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இதில் முதல் இரு வேரிண்ட்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    பஜாஜ் பிரீடம் பைக்கில் 2 கிலோ CNG டேன்க் உள்ளது. இது பைக்கின் மத்தியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கின் எடையை சமமாக வைத்துக் கொள்கிறது. இதன் மேல் 2 லிட்டர் பெட்ரோல் டேன்க் உள்ளது.

    அந்த வகையில், இந்த பைக்கின் CNG மற்றும் பெட்ரோல் டேன்க்-ஐ நிரப்பினால் 330 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த பைக்கை ஓட்டுபவர் ஸ்விட்ச் மூலம் பெட்ரோல் மற்றும் CNG என எரிபொருள் தேர்வை மேற்கொள்ளலாம்.

    இந்த பைக்கில் 125சிசி, ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9.5 ஹெச்.பி. பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • சிவப்பு, நீலம் உள்ளிட்ட 4 வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
    • இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் முதல் சி.என்.ஜி. பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை-05) அறிமுகம் செய்கிறது

    பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. ஆட்டோக்கள் அமோகமாக விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த பைக்கை சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம். சிவப்பு, நீலம் உள்ளிட்ட 4 வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

    இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கியர்களை கொண்ட இந்த பைக், சந்தையில் விற்பனையாகும் இதே போன்ற பெட்ரோல் பைக்குகளை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஷோ ரூம் விலையாக இந்த பைக் 90,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
    • இந்த சி.என்.ஜி. பைக்கை பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. ஆட்டோக்கள் அமோகமாக விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த சி.என்.ஜி. பைக்கை பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.

    இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கியர்களை கொண்ட இந்த பைக், சந்தையில் விற்பனையாகும் இதே போன்ற பெட்ரோல் பைக்குகளை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஷோ ரூம் விலையாக இந்த பைக் 85,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • இந்த பைக் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் (ஜூலை 17) வெளியாகும் என்று பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    புதிய பைக் குறித்து பேசிய ராகேஷ் ஷர்மா "பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்துவோரை குறிவைத்து பஜாஜ் சி.என்.ஜி. பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக் என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலைநிறுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 100 முதல் 150 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    • 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.
    • ரைடர், எக்ஸ்டிரீம் 125 மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் 125சிசி பிரிவில் கடுமையான போட்டி உருவாகி உள்ளது. டி.வி.எஸ். மற்றும் ஹீரோ நிறுவனங்கள் முறையே ரைடர் மற்றும் எக்ஸ்டிரீம் 125R போன்ற மாடல்களை 125சிசி பிரிவில் விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பஜாஜ் பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய பைக்கில் சற்றே மெல்லிய டயர்கள், பின்புறம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதை கொண்டு இந்த பைக் வழக்கமான 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.

     


    இந்த பைக் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் எல்.இ.டி. ஹெட்லைட் வித்தியாசமான வடிவம், தடிமனான டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இருக்கைகள் ஸ்ப்லிட்-சீட் வடிவில் உள்ளன. இவற்றைக் கொண்டு பார்க்கும் போது, இந்த பைக் 125சிசி பிரிவில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    அந்த வரிசையில், இந்த பைக் 125 சிசி பிரிவில் டி.வி.எஸ். ரைடர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், புதிய பைக் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படலாம்.

    • இந்த பைக் மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
    • சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது 2024 பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பல்சர் F250 விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த பைக் பல்சர் NS400Z மாடலின் சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த பைக்கின் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தோற்றத்தில் இந்த பைக் அதன் 2023 வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த பைக் முற்றிலும் புதிய பிளாக் நிறம் பூசப்பட்டு ரெட் மற்றும் வைட் நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 2023 மற்றும் 2024 மாடல்களை வித்தியாசப்படுத்தும் வகையில் உள்ளது.

    இதுதவிர புதிய 2024 பைக்கில் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய F250 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பைக்கிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படுகிறது. இந்த பைக்- ரெயின், ரோட் மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    2024 பல்சர் F250 மாடலில் 259.07சிசி, ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • புளூ ப்ரின்ட் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • மோட்டார்சைக்கிளின் மத்தியில் இருக்கையின் கீழ் வழங்கப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்த மாதம் தனது முதல் சி.என்.ஜி. பைக்கை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய சி.என்.ஜி. பைக் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக்கின் புளூ ப்ரின்ட் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    இதில் புதிய பைக்கின் சேசிஸ், சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் டேன்க் மற்றும் ஒட்டுமொத்த தோற்றம் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி பஜாஜ் சி.என்.ஜி. பைக் டபுள் கிராடில் ஃபிரேம் கொண்டிருக்கும் என்றும் சி.என்.ஜி. சிலிண்டரை பிடித்துக் கொள்ளும் பிடிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த யூனிட் மோட்டார்சைக்கிளின் மத்தியில் இருக்கையின் கீழ் வழங்கப்படுகிறது.

     


    சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் டேன்க் என இரண்டையும் வைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பஜாஜ் சி.என்.ஜி. பைக்கில் ஸ்லோப்பர் என்ஜின் வழங்கப்படுகிறது. என்ஜினின் தலைப்பகுதி கீழ்புறமாக வைக்கப்பட்டு இருப்பதால், சி.என்.ஜி. டேன்க் வைக்க இடம் கிடைக்கிறது.

    சி.என்.ஜி. டேன்க்-ஐ வைத்து கொள்ள ஏதுவாக சேசிஸ்-இன் மெயின் ஃபிரேம் மற்றும் சப்-ஃபிரேம் இடையில் வட்ட வடிவம் கொண்ட பிடிப்புகள் வெல்டிங் செய்யப்படுகின்றன. என்ஜின், சி.என்.ஜி. சிலிண்டர் மற்றும் ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவைகளை பஜாஜ் நிறுவனம் எப்படி ஒருங்கிணைக்கும், பைக்கின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    புதிய சி.என்.ஜி. பைக்கில் பஜாஜ் நிறுவனம் 125சிசி என்ஜின் வழங்கும் என்று தெரிகிறது. இந்தியாவின் முதல் சி.என்.ஜி. பைக் என்ற பெருமையை பெறுகிறது. அந்த வகையில், இந்த பைக் அதிக மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    • இதுவரை அறிமுகம் செய்ததில் சக்திவாய்ந்த பல்சர் மோட்டார்சைக்கிள்.
    • டெயில் லைட் NS200 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பல்சர் NS400Z மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பல்சர் NS400Z விலை ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக் பஜாஜ் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்ததிலேயே சக்திவாய்ந்த பல்சர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

    தோற்றத்தில் பல்சர் NS400Z மோட்டார்சைக்கிள் NS200 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் ஹெட்லைட் அளவில் பெரியதாகவும், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட் மற்றும் டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டெயில் லைட் NS200 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை பல்சர் NS400Z மாடலில் எல்.இ.டி. லைட்கள், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், நான்கு ரைட் மோட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.சி.டி. யூனிட் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பல்சர் NS400Z மாடலில் டாமினர் 400 மாடலில் உள்ளதை போன்றே 373சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.4 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

    • புதிய NS200 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என்று தெரிகிறது.
    • டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படலாம்.

    பஜாஜ் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்ததில் சக்திவாய்ந்த பல்சர் மோட்டார்சைக்கிளை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது. பஜாஜ் பல்சர் NS400 பெயரில் அறிமுகமாகும் இந்த பைக் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொண்டிருக்கும் என்றும் இது முற்றிலும் புதிய NS200 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என்று தெரிகிறது.

    இந்த யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். அலர்ட், நேவிகேஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் ஏ.பி.எஸ். மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    புதிய பஜாஜ் பல்சர் NS400 மாடலில் டாமினர் 400 மாடலில் உள்ளதை போன்ற 373சிசி என்ஜின் வழங்கப்படலாம். இது 39.42 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய பல்சர் NS400 மாடலில் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், பிரேக்கிங்கிற்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. டிசைனை பொருத்தவரை இந்த மாடலில் ஸ்ப்லிட் சீட், டெயில் பகுதியில் கிராப் ரெயில் வழங்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் NS200 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதும், இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் NS400 மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், பி.எம்.டபிள்யூ. G 310 R மற்றும் டி.வி.எஸ். அபாச்சி RTR 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் போட்டியை பலப்படுத்த முடியும்.
    • புதிய வேரியண்டில் வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. யூனிட் வழங்கப்படலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் ஸ்கூட்டரின் புது வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மேலும் அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்க முடியும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நம்புகிறது.

    இதோடு, புதிய வேரியண்ட் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் போட்டியை பலப்படுத்த முடியும் என பஜாஜ் ஆட்டோ நினைக்கிறது. தரம் மற்றும் செயல்திறனில் எவ்வித சமரசமும் இன்றி குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் புதிய வேரியண்ட் உருவாக்கப்படுகிறது.

    அதன்படி புதிய வேரியண்ட் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு புதிய நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்களுக்கு மாற்றாக அழகிய டிசைன் கொண்ட வீல்கள், டிரம் பிரேக்குகளை கொண்டிருக்கும் என ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது.

    தற்போது விற்பனை செய்யப்படும் செட்டாக் வேரியண்டில் உள்ள டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரீனுக்கு மாற்றாக புதிய வேரியண்டில் வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. யூனிட் வழங்கப்படலாம். புதிய வேரியண்டில் மிட்-டிரைவ் மோட்டார் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த வேரியண்டிலும் 2.9 கிலோவாட் ஹவர் யூனிட் வழங்கப்படலாம். இது முழு சார்ஜ் செய்தால் 113 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய வேரியண்ட் ஓலா S1 X பிளஸ், ஏத்தர் ரிஸ்டா, டி.வி.எஸ். ஐகியூப் மற்றும் சிம்பில் டாட் ஒன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    ×