search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி பாம்பு பண்ணை"

    • நாட்டின் பிற இடங்களில் இதே போன்ற முயற்சிகள் அமையவும் கிண்டி பாம்பு பண்ணை ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.
    • சென்னையின் புறநகரில் உள்ள சேலையூரில் முதலில் நிறுவப்பட்டது.

    சென்னை:

    கிண்டியில் உள்ள பாம்பு பூங்கா சிறப்பு பெற்றது. இது புகழ்பெற்ற ரோமுலஸ் விட்டேக்கர் என்பவரால் கடந்த 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    பாம்புகளை பராமரிக்கவும், காட்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பாம்பு பண்ணை தொடங்கப்பட்டது. இது லாப நோக்க மற்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பாம்புகள் மற்றும் பிற ஊர்வன விலங்குள் மீது பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்த தூண்டுகிறது.

    இது இந்தியாவின் முதல் ஊர்வன பூங்காவாகும். சென்னையின் புறநகரில் உள்ள சேலையூரில் முதலில் நிறுவப்பட்டது. பின்னர் ஒரு குழுவின் உதவியுடன் சென்னையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், 1972-ம் ஆண்டு கிண்டியில் பாம்பு பூங்கா அமைக்கப்பட்டது.

    தமிழக அரசின் வனத் துறையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட நிலத்தில் பாம்பு பண்ணை அமைந்துள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ஊர்வனவற்றை பாதுகாப்பதில் மட்டுமல்லாமல், ஊக்குவிப்பதிலும், நாட்டின் பிற இடங்களில் இதே போன்ற முயற்சிகள் அமையவும் கிண்டி பாம்பு பண்ணை ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

    கிண்டி பாம்பு பண்ணையில் தற்போதைய நிலவரப்படி 20 இந்திய பாம்புகளின் இனங்கள், இந்திய முதலைகளின் 3 இனங்கள். இரண்டு வகையான கவர்ச்சியான பாம்புகள், முதலைகள், மூன்று வகையான இந்திய ஆமைகள் மற்றும் ஆமைகள், 4 வகையான இந்திய பல்லிகள், பச்சை ஓணான்கள், ஸ்லைடர் ஆமை போன்ற சில வெளிநாட்டு ஊர்வன என மொத்தம், 34 இனங்களைச் சேர்ந்த 300 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மிகவும் சிறப்பு மிக்க கிண்டி பாம்புபண்ணை அதன் வெற்றிகரமான 50 ஆண்டுகளை நிறைவு செய்து, பொன்விழா விழாவைக் கொண்டாட தயாராகி வருகிறது.

    இந்த விழா நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஹோட்டல் ரமடா பிளாசாவில் நாளை(21-ந்தேதி) நடைபெறுகிறது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, வனத்துறை அதிகாரி சையத் முஸம்மில் அப்பாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற் கிறார்கள்.

    • பாம்பு பண்ணையில் பார்வைக்காக விடப்பட்டு உள்ள அரியவகை ஓணானை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓணான் 20 முட்டைகள் போட்டு இருந்தது. அதில் 13 முட்டைகள் குஞ்சு பொரித்தன.

    கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில் பல்வேறு வகை பாம்புகள், முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பாம்பு பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை நீல நிற ஓணான் சமீபத்தில் 20 முட்டைகள்போட்டு இருந்தது. இதில் 13 குட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தன. இவற்றில் 11 ஓணான்கள் அரியவகை நீல நிறத்திலும் மற்றவை பச்சை நிறத்திலும் உள்ளது.

    இந்த வகை ஓணான் தென் அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேமன் தீவுகளை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். அழிந்து வரும் இனமாக அவை உள்ளன.

    பாம்பு பண்ணையில் பார்வைக்காக விடப்பட்டு உள்ள அரியவகை ஓணானை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள். இதுகுறித்து பாம்பு பண்ணை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த வகை ஓணான்கள் தென் அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேமன் தீவுகளை பூர்வீகமாகக் கொண்டது. இது அழிந்து வரும் இனமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ஒரு ஜோடி நீலநிற ஓணானை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைப்பற்றி இங்கு பராமரிப்பில் விட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓணான் 20 முட்டைகள் போட்டு இருந்தது. அதில் 13 முட்டைகள் குஞ்சு பொரித்தன. இதில் 11 நீல நிறத்தில் உள்ளது.

    ஓணான் வகைகளில் நீல நிறம் மிகவும் அரிதானது. பச்சை, பழுப்பு நிறத்தில் உள்ளவை மிகவும் பொதுவானவை. இதில் நீல நிற ஓணான்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை இனப்பெருக்க காலத்தில் மட்டுமே துணையை தேடும்.

    அவற்றின் தோலில் மஞ்சள் நிறமி கிடையாது. சாம்பல், கருப்பு மற்றும் பழுப்பு நிறமிகளை மட்டுமே உருவாக்கி நிறம் மாற முடியும்.

    இவை பொதுவாக 20 முதல் 30 அங்குலம் அளவு வரை வளரும். சுமார் 30 பவுண்டுகள் எடை இருக்கும். சிறிய நீலநிற ஓணான்கள் 10 முதல் 14 அங்குலம் அளவில் இருக்கும்.

    நீல நிற ஓணான் சிறந்த செல்லப்பிராணிகளாகவும் உள்ளன. வெளிச்சந்தையில் இதற்கு அதிக மவுசு உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.78 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    இவற்றை பராமரிக்க அதிக கவனம்தேவை. நமது பராமரிப்பில் அவைகள் 60 ஆண்டுகள் வரை வாழ முடியும். காடுகளில் அவற்றின் ஆயுட்காலம் சுமார் 25 முதல் 40 ஆண்டுகள் ஆகும். அவை மரத்தின் குழிகளிலும், பாறை இடுக்குகளிலும் தூங்குவதற்கு அதிகம் விரும்பும். கிண்டி பாம்பு பண்ணையில் இப்போது மொத்தம் 56 அரிய வகை ஓணான்கள் உள்ளது.

    ஏற்கனவே வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் ஒரு ஜோடி பச்சை நிற ஓணான்களை பூங்கா நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து உள்ளனர். அவை இதுவரை 2 முறை இனப்பெருக்கம் செய்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×