என் மலர்
நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்"
- நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பணிகள் தொடங்கியது
- நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு ஆயத்தம்
நத்தம் :
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். சுமார் 400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஏற்கனவே 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடந்தது.
தற்போது இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது. அதன்படி கோவில் வளாகத்தில் பாலாலயம் மற்றும் பூமி பூஜைகள் நடந்தது. இதில் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேளதாளங்கள் இசை முழங்க யாகசாலையில் பூஜைகள் நடந்தது.
தொடர்ந்துமூலவர் மாரியம்ம–னுக்கு அபிஷே கங்கள், தீபாராதனைகள், வண்ணப்பூ அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தொடங்கியது.
இதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, முன்னாள் பேரூ ராட்சி தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகளும், திருக்கோவில் பூசாரிகளும் செய்திருந்தனர்.