என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு"
- தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது.
- கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.
சென்னை:
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐேகார்ட்டு உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே தற்போது ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று ஆகும்.
தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.
மேலும் கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, அதுவே பொதுக்குழுவிலும் பிரதிபலித்தது.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க அலுவலகத்தை சூறையாடி கட்சியின் விதிகளை மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே அவர் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர்.
மேலும் கட்சி பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது.
இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார்.
- தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டு பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது என்றும் எனவே பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி அளித்த தீர்ப்பில் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை மையமாக வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தேவையான கூடுதல் ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ். தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் அதனை வைத்து அ.தி.மு.க.வை கைப்பற்றி விடலாம் என்று ஓ.பி.எஸ். கணக்கு போட்டு வைத்து உள்ளார்.
அ.தி.மு.க.வில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ள ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது என்று தனது வக்கீல்கள் மூலம் வாதாடி வெற்றி பெற முயன்று வருவார். இதற்காக தனது வக்கீல்களுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.
இதற்கு முன்பு பொதுக்குழு கூட்டங்கள் எப்படி நடந்தன? எடப்பாடி கூட்டிய பொதுக்குழு கூட்டம் எப்படி நடந்தது என்பதை எல்லாம் ஒப்பிட்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதாட ஓ.பி.எஸ். வக்கீல்கள் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாக வியூகம் வகுத்து வருகிறார். ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தங்களுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பை சுட்டிக் காட்டி அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்பதை எடுத்துக் கூற உள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்காக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயாரித்து வைத்துள்ள எடப்பாடி ஆதரவு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையோடு காய் நகர்த்துகிறார்கள். டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்களும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து கோர்ட்டிலும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு நிர்வாகிகள் 6-ந் தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகம் தொடர்பான வழக்கில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது போல, பொதுக்குழு வழக்கிலும் நிச்சயம் எங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பது தமிழக அரசியல் அரங்கிலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
- உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார்.
- அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், " நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார்.
தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்" என்று கூடுதல் மனுவில் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறப்பட்டிருந்தது.
- ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
- கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை மாற்றியுள்ளதாக வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.
பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்றும் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார். ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார். அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும், தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.
அதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர் என வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நாளை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தனர். இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் நாளை இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப இரு தரப்புக்கும் நேரம் ஒதுக்கப்படும்.
- வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்தனர்.
- அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.
அப்போது வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தனது வாதத்தை தொடர்ந்தார். நேற்றும் வாதாடினார். அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விதிமுறைபடி நடைபெறவில்லை. அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால் இந்த பொதுக்குழு அவ்வாறு கூட்டப்படவில்லை.
அவைத் தலைவரை வைத்து பொதுக்குழுவை கூட்டினார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதாக கூறினார்கள். ஆனால் அப்படி நீக்குவதற்கு முறைப்படி நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கவில்லை. எனவே ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக் குழு செல்லாது என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து இதுவரை எந்த கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடரவில்லை. எனவே அந்த பிரச்சினையை இந்த வழக்கில் எழுப்ப முடியாது. 5-ல் ஒரு பகுதியினர் கடிதம் அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்று கட்சி விதிகளில் உள்ளதாக வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பேச முற்பட்டபோது அதற்கு நீதிபதிகள் உங்கள் முறை வரும்போது உங்கள் வாதத்தை தொடரலாம் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தொடர்ந்து வாதிட்டார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்து உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சி விதிகளில் எங்கெங்கு உள்ளதோ அதை பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளனர் என்று வாதிட்டார்.
நேற்று மாலை 4.30 மணி வரை வாதங்கள் நீடித்ததால் விசாரணையை இன்று மதியம் 12 மணிக்கு தள்ளி வைத்திருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணை மதியம் மீண்டும் தொடங்கியது. வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்தனர்.
தன்னிசையான முறையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிகாரம் இல்லை. பொதுக் குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து மட்டுமே கூட்ட முடியும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்படி செல்லாது. அவை சட்டத்துக்கு புறம்பானவை என்று அவர்கள் வாதிட்டனர்.
அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதாட உள்ளார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் இன்று நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறி உள்ளதால் அ.தி.மு.க. வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமா? அல்லது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சைக்கு தீர்ப்பில் விடை கிடைத்துவிடும்.
- அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
- கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று முதலில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 23-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உரிமையியல் வழக்கு தொடருவதற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், உரிமையியல் வழக்கை தொடரலாம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தனர். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
எனவே அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே உள்ளது என்று கூறி எடப்பாடி பழனிசாமி அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக வர்ணித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களையும் ஒட்டினார்கள்.
இப்படி அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு வந்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.
இதன் காரணமாக ஐகோர்ட்டு விசாரணையின் போது எந்த மாதிரியான உத்தரவை ஐகோர்ட்டு வழங்க போகிறது என்பது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
- நாளை மறுநாள் நடைபெற உள்ள வழக்கு விசாரணையை இரு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.
சென்னை:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பினர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முதலில் தீர்ப்பளித்த நிலையில் 2-வதாக வந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக அமைந்திருந்தது.
இதை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் 29-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே இதுபற்றி முடி வெடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடைபெற்றது.
மனுதாரரான மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் குருகிருஷ்ணகுமார், ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
பொதுக்குழு முடிவுகள் அ.தி.மு.க. நிறுவனரான எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், எனவே கட்சி விதிகளுக்கு மாறாக தங்களை நீக்கிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்தரப்பினரின் கருத்தை கேட்காமலேயே இதனை செய்ய வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் விஜய் நாராயணன், வைத்திய நாதன் ஆகியோர் கடந்த 9 மாதங்களாக ஓ.பி.எஸ். தரப்பினர் இதே வாதங்களை முன்வைத்து வருவதாக தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தங்கள் தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எதிர்மனுதாரர்களின் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) விளக்கத்தை கேட்காமல் எப்படி தடைவிதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 17-ந்தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் பதில் மனுவை தயாரித்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளனர்.
எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிசாமியின் பதில் மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றோ, நாளையோ அல்லது வழக்கு விசாரணை நடைபெறும் நாளான 17-ந் தேதியோ பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
அ.தி.மு.க. சட்ட விதிகளின்படியே பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது போன்ற விளக்கங்களுடன் பதில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு செல்லும் என்றால் தீர்மானங்களும் செல்லுபடியாகும் தானே என்கிற கேள்வியை எழுப்பும் எடப்பாடி ஆதரவாளர்கள் நாளை நடைபெற உள்ள விசாரணையிலும் தங்களுக்கு சாதகமாகவே நிச்சயம் தீர்ப்பு கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள வழக்கு விசாரணையை இரு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.
- சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்துள்ளது.
- ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.
சென்னை:
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மேலும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ந்தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமான அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட இருந்த நிலையில் இந்தத் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கனவே இது தொடர்பான வழக்கு மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று ஏப்ரல் 11-ந் தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்னர் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசியம் என்றும், ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவசர வழக்காக பதிவு செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம். ஆனால், முடிவை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மார்ச் 22-ந் தேதி இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அதேவேளையில் மார்ச் 24-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்து பூர்வமான வாதம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் வழக்குகளின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியாகும்.
அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதும் செல்லும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளும் செல்லும். இவற்றை எதிர்த்து தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை கேட்டதும் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே சமயத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் நடத்தும் குழுவினர் ஈடுபட்டனர்.
தீர்ப்பு வெளியான அரை மணிநேரத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழும் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று தொண்டர்கள் வெற்றிக்கோஷம் எழுப்பினார்கள்.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் நடத்தும் குழுவினர் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினார்கள். தீர்ப்புக்கு பின்னர் அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தலைமை கழகத்தில் திரண்ட கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள். இதனால் தலைமைக் கழகம் களை கட்டியது.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அப்பீல் செய்தார். நாளை அந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.
- அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
- தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.
- அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க நீதிபதி மறுப்பு.
- அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.
சென்னை:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தெரிய வந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார்
பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார்.
இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
- தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
- பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
- இருதரப்பு வக்கீல்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டனர்.
- இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது.
இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தும், அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்மானங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது.
இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது வக்கீல் வாதம் 7 நாட்கள் நடைபெற்றது.
இருதரப்பு வக்கீல்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், இந்த வழக்குகளில் எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எந்த நீதிமன்றமும் கூறாத நிலையில் நான் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது.
இடைக்கால தடை மூலம் இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், 8 மாதங்கள் மவுனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடை கோர உரிமையில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அந்த தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருவதால், காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.