search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ச்சி சதவீதம்"

    • அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    அரியலூர்:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தில் 8769 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 97.25 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு அதிவேகமாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    • பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது.
    • கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 465 மாணவர்களும், 11 ஆயிரத்து 843 மாணவிகளும் தேர்வெழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் 10 ஆயிரத்து 135 மாணவர்களும், 11 ஆயிரத்து 693 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.73 சதவீதம் ஆகும். மொத்த சதவீதம் 97.85 ஆகும்.

    மாநிலத்திலேயே மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று முதன்மை மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது.

    கடந்த 25 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்று வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக முதலிடத்தை இழந்த விருதுநகர் மாவட்டம் தற்போது மீண்டும் அதிகளில் தேர்ச்சி விகித்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    • இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி தேர்ச்சி சதவீதம் குறைந்த பாடங்கள், பள்ளிகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதுசார்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், அதற்கான காரணத்தை உரிய ஆசிரியரே குறிப்பிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தீர்வையும், அந்த ஆசிரியரே தெரிவிக்க வேண்டும். அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 84.67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேரும் தேர்வு எழுதினர்.  இந்நிலையில்தான் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9-ல் தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 27-ந்தேதி (இன்று) காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 189 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன இதில் அரசு பள்ளிகள் 130 தனியார் பள்ளிகள் 69 உள்ளனமொத்த தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 308 பேர் ஆகும் இதில் 19 ஆயிரத்து 517 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டை விட 8 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 795 பேர் தேர்வு எழுதினார்கள் இதில் 12 ஆயிரத்து 950 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 84.67 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.46 சதவீதமாகும்.
    • அடுத்த ஆண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 357 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 14,804 மாணவா்கள், 14, 827 மாணவிகள் என மொத்தம் 29,631 போ் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா்.

    இதில்12,459 மாணவா்கள், 13,753 மாணவிகள் என மொத்தம் 26,212 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.இதில், மாணவா்கள் 84.16 சதவீதம், மாணவிகள் 92.76 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.திருப்பூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.46 சதவீதமாகும்.

    மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 128 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. திருப்பூா் கல்வி மாவட்டமானது மாநில அளவில் 30 வது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் இருந்து 30 வது இடத்துக்கு சரிவடைந்தது. திருப்பூா் மாவட்டமானது கடந்த 2018 ம் ஆண்டு 10-ம்வகுப்பு பொதுத் தோ்வில் 97.18 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 7 -வது இடத்தைப் பிடித்திருந்தது. இதைத் தொடா்ந்து, 2019 ஆம் ஆண்டில் 98.53 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தது. இந்நிலையில் கொரோனா தொற்றால் 2020, 2021 ம் ஆண்டில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போதைய பொதுத்தோ்வில் 10-ம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி விகிதமானது கடந்த 2019 ம் ஆண்டைக்காட்டிலும் 10.07 சதவீதம் சரிவடைந்துள்ளதுடன் மாநில அளவில் 29 இடங்கள் பின்தங்கி 30-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

    இது குறித்து கலெக்டர் எஸ்.வினீத் கூறியதாவது :-

    10-ம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் 30 வது இடமும், பிளஸ்- 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் 7 -வது இடத்தையும் திருப்பூா் பிடித்துள்ளது. 10-ம்வகுப்பு பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது தொடா்பாக பள்ளிகள் வாரியாக ஆய்வுகள் நடத்தப்படும். இதன் பின்னா் அடுத்த ஆண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

    • பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும்.
    • கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி பேசியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்துவது அவசியம். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சனிக்கிழமைதோறும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் பாட வாரியாக வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். இதுதவிர தினமும் காலை, 8:30 மணிக்கும், மாலை 4:15 முதல், 5:30 மணிக்குள் சிறப்பு வகுப்புகள் நடத்தி கொள்ளலாம்.

    பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும். வகுப்பாசிரியர்கள் 'வாட்ஸ்அப்பில்' மட்டுமே தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு தகவல்கள், செய்திகள் அனுப்பப்படுவது தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தரப்பில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்களின் புகார் பெட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் வருகை சார்ந்த விவரம் ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்.ஆசிரியர் மானியம், பிற பணப்பயன்கள் உடனுக்குடன் பெற்று வழங்கப்பட வேண்டும். நிரந்தர அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு, சுகாதார சான்று ஆகியவை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மிதிவண்டி, லேப்டாப் சார்ந்த இருப்பு பதிவேடுகள், சிறப்பு நிலை, தேர்வுநிலை, தகுதிகாண் பருவம், பணிவரன்முறை சார்ந்த ஆசிரியர்களின் கருத்துருக்கள் முறையாக பராமரிக்க வேண்டும். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பிற அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, நிரந்தர சிகிச்சை பெறுவோருக்கு விபத்து காப்பீடு, உதவித்தொகை பெற ஆவண செய்தல் வேண்டும் என்றார்.

    மேலும் அவர் பேசுகையில், ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் பட்டியலை தயார்நிலையில் இருப்பது அவசியம். அடுத்த மாதாந்திர கூட்டத்தில் இதுசார்ந்த விவரங்கள் கேட்கப்படும். எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இவற்றை நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கலெக்டர், மற்றும் உயர்கல்வி அதிகாரிகள் பார்வையிட வரும்போது கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

    ×