என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணை"

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    எடப்பாடி அருகே சலூன் கடைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி, காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ஜோதிகா (22), இவரது கணவர் சக்கரவர்த்தி, நூற்பாலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜோதிகா தனது மகனுக்கு முடி திருத்தம் செய்வதற்காக எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாற்காலியில் ஜோதிகாவின் குழந்தையை அமர வைத்த சலூன் கடைக்காரர் முடி திருத்தம் செய்து கொண்டிருந்த போது, குழந்தையின் தலையை ஜோதிகா ஆடாமல் பிடித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது எடப்பாடி அடுத்த தேவனா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஜோதிகாவின் அருகே அமர்ந்து, அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஜோதிகாவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து ஜோதிகா எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட சலூன் கடைக்காரரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

    ×