என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக உயர்கல்வித்துறை"

    • முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது.
    • வகுப்புகள் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கும்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்.சி. பி.காம். பி.ஏ என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.

    இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள்.

    இந்த சூழலில், கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களை பெற்றார்கள்.

    இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டுக்கான பொதுத் பிரிவு கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாரகள். 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
    • தமிழக ஆளுநர் அவருடைய ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க கூடாது என்றார்.

    உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை, சீர்குலைக்க ஆளுநர் தொடர்ந்து குறுக்கீடு செய்கிறார் என

    உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர்.

    இந்நிலையில், நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.

    மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன ? எதில் தலையிட வேண்டும் ? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல.

    இதுவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அளவிற்கு மாநில உரிமைகளை கட்டிக்காப்பதில் மத்திய அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, பல்வேறு மாநில வளர்ச்சிக்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    உயர்கல்வியை பொறுத்தவரையில் பல்கலைக்கழங்களுடைய செயல்பாடு தமிழக அரசை விரும்பி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் அதில் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள்.

    அப்படி தொடர்ந்து திமுக அரசு அமையும்போதெல்லாம் உயர்கல்வியில் அக்கறை காட்டிய காரணத்தால் தான் கலைஞர் காலத்தில் இருந்து இன்று வரை உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையை எட்டி இருக்கிறோம்.

    இதை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வித்துறையின் பணிகளையும், அரசின் பணிகளையும் குறிக்கிட்டு இடர்பாடுகளை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்.

    எனவே தான், நேற்று ஆளுநர் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க வேண்டாம் என்ற நிலையில் கருத்து தெரிவித்திருந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 608 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அமைச்சர் பொன்முடி அவர்களால் வழங்கப்பட்டது.
    • வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகம் முன்பு நடந்தது. கல்லூரியின் முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார்.சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்.சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன்,

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன்..ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமநாதன்.புவனகிரி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர்டாக்டர் மனோகர்ஆ கியோர்முன்னிலை வகித்தனர்.

    வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்.இந்த பட்டமளிப்பு விழாவில்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு 608 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

    பட்டமளிப்பு விழாவில் முன்னாள் துணைவேந்தர் சபாபதி முருகன், பரங்கிபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்.பினர் கிள்ளைரவீந்திரன், ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி உள்பட கல்லூரி பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவ மாணவிகள்பெற்றோர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.முடிவில் உதவி முதல்வர்மீனா நன்றி கூறினார்.

    ×