என் மலர்
நீங்கள் தேடியது "ஐம்போ"
- ஐம்போ சர்க்கஸ் கடந்த 1977ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இந்த சர்க்கஸ் 30 நாட்கள் நாகர்கோவிலில் நடக்கிறது. மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் இடம் பெறுகிறது.
நாகர்கோவில்:
இந்தியாவின் புகழ்பெற்ற ஜம்போ சர்க்கஸ் நாகர் கோவில் பொருட்காட்சி திடலில் நேற்று மாலை தொடங்கியது. இதனை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யில் ஆணையர் ஆனந்த் மோகன், கோட்ட தலைவர்கள் அகஸ்டினா கோகில வாணி, ஜவகர். முத்து ராமன், செல்வகுமார், கவுன்சிலர்கள் ரமேஷ் பியாஷா ஹஜிபாபு உள் படபலர் கலந்து கொண்டனர்.
இந்த சர்க்கஸ் குறித்து மேலாளர் ராஜீவ் கூறிய தாவது:- ஐம்போ சர்க்கஸ் கடந்த 1977ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நாகர்கோவிலில் 5-வது முறையாக எங்களது சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த சர்க்கஸ் 30 நாட்கள் நாகர்கோவிலில் நடக்கிறது. மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் இடம் பெறுகிறது.
இதில் உலக உருளையில் 4 பேர் பைக்கில் சுற்றும் சாகச நிகழ்ச்சி குல்லா குரூப் டான்ஸ், பார் விளையாட்டு, குதிரை, நாய், ஓட்டகம், பறவைகள் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்தியாவில் முதல்முறையாக ஆப்பி ரிக்க நாட்டை சேர்ந்தவ ரின் ஜிம்னாஸ்டிக் வெயிட் லிப்டிங் இடம் பெற்றுள்ளது. இதுபோல் குள்ள மனிதர்களின் நகைச்சுவை சிறுவர்களை மகிழ்விக்கும் சர்க்கஸ் கட்டணம் ரூ.250, ரூ.150, ரூ.100 என வசூல் செய்யப்படுகிறது என்றார்.