என் மலர்
நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிளில்"
சேலம்:
சேலம் மாவட்டம் மஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மோட்டார்சைக்கிளில் நேற்று ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி தேசிய நெடுஞ்சாலைைய கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் கிருஷ்ணன் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது வெளியூர் சென்றுவிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா அந்த வழியாக தனது வாகனத்தில் வந்தார். சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதையும், வாலிபர் ஒருவர் சாலையில் படுகாயத்துடன் இருப்ப தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக தனது பாதுகாவலரை அனுப்பி 108 ஆம்புலன்ஸ் வரவழைக்க செய்து ஆம்புலன்ஸில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
படுகாயம் அடைந்த கிருஷ்ணனுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய போலீஸ் கமிஷனருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.