என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 233906"
- கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
- குடியரசு தினவிழா நிகழ்ச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெறவுள்ளது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கலெக்டர் அரவிந்த் தலைமையில், 74-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-
கன்னியாகுமரி மாவட் டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெற வுள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களுக்கு போதிய அளவு இருக்கைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாகர்கோவில் மாநக ராட்சி மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழாவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில், தீய ணைப்புத்துறை மூலம் தீயணைப்புக்கருவிகளை தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையினர் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆபத்துக்கால வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வருவாய்த்துறை, சுகா தாரத்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறப்பாக பணி யாற்றிய அலுவலர்கள், பணி யாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
குடியரசு தினவிழா விற்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து அலுவ லர்களையும் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும், இவ்விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறைகளை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
- தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
- புதுவையில் புயலை எதிர்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசென்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தென்பகுதிக்கு வரும் போது தாய் வீட்டிற்கு வருவது போன்று உற்சாகத்துடன் வருவேன். நான் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னராக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியில் என்னுடைய கவனம் இருக்கும்.
தமிழகத்தில் எவ்வாறு சிறப்பாக புயலை எதிர் கொண்டோமோ அது போல் புதுவையிலும் புயலை எதிர்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டிருந்தது.
தி.மு.க.வில் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா என்பது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. சமீபத்தில் சென்னை மேயர் காரில் தொங்கிக் கொண்டு சென்றதை பார்த்திருப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுவதாக தமிழிசை சவுந்திரராஜனிடம் கேட்ட போது, எந்த துறை சிறப்பாக செயல்பட்டாலும் அதனை பாராட்ட வேண்டியது கடமை தான். அதே நேரத்தில் குறைகளை சுட்டிக் காட்ட வும் வேண்டும் என்றார்.
- பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி:
பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
- இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:
இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.
உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்