என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்ட பந்தயம்"
- இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- சென்னையில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் - தீபா தம்பதியரின் மகள் சீதளாதேவி. இவர் சென்னையில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்து தமிழகத்திற்கு பேருமை சேர்த்த மாணவி சீதளாதேவியை வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.