search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட்டி போட்டி"

    • 188 சர்வதேச நாடுகளில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வர உள்ளனர்.
    • நீரின் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து ஆராய்ந்து இந்த திட்டம் அதிகாரிகளால் கைவிடப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி சூலேரிக்காடு பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு தினசரி 11கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அதன் அருகில் கூடுதலாக 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்திக்காக புதிய ஆலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல், ஆகஸ்ட் 10-ந்தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 188 சர்வதேச நாடுகளில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வர உள்ளனர். அவர்கள் தங்குவற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே வீரர்கள் தங்க உள்ள 38 ஓட்டல்களில் சமையல், குளியல் மற்றும் அன்றாட தேவைகளுக்கு கல்பாக்கம் அடுத்த வாயலூரில் உள்ள பாலாற்றில் இருந்து நீர் வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் நீரின் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து ஆராய்ந்து இந்த திட்டம் அதிகாரிகளால் கைவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தற்போது நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து நீர் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சுத்திகரிப்பு ஆலையில் உள்ள பழைய பர்னல்கள் மற்றும் துரு பிடித்த கடல்வழி நீர் குழாய்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது.

    மேலும் லாரிகளில் நீர் பிடிக்க வசதியாக உயரமான குழாய்களை கிழக்கு கடற்கரை சாலையோரம் சென்னை குடிநீர் வாரியம் புதிதாக அமைத்து வருகிறது.

    இதற்கிடையே வெளிநாட்டு வீரர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள 38 ஓட்டல்களில் பணிசெய்யும் சமையல் கலைஞர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பயிற்சி அளித்து உள்ளது. மேலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் "செஸ் ஒலிம்பியாட்" வீரர்கள் தங்கும் ஓட்டல்களின் முழு விபரம் அடங்கிய "கியூஆர் கோடு" சான்றிதழ்களை உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வினா வழங்கினார்.

    அப்போது அவர் கூறும்போது, உணவு வகைகளை குறிப்பிட்ட மணிநேரத்திற்கு மேல் பிரீசரில் வைத்து பின்னர் சமைத்து கொடுக்க கூடாது. காலை, மதியம், இரவு உணவுகளை உணவுத்துறை அதிகாரிகள் வந்து பரிசோதனை செய்த பின்னரே வழங்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, உணவு பாதுகாப்பு நலன் அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மகாபலிபுரத்தில் அடுத்த மாதம் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் பங்கேற்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
    • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ேமாடி இன்று ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைக்கிறார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை சுற்றுச்சூழல் மற்றும் இளை ஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ேமாடி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைக்கிறார்.

    அந்த ஜோதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 பெரும் நகரங்களுக்கு செனறு அதன் பின் வருகின்ற ஜூலை 28-ந்தேதி தமிழகம் கொண்டு வரப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இதுவரை இல்லத வகையில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் பங்கேற்பதாக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள், மற்றும் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து வகையான முன்னேற்பாடு பணிகளும் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வருகிற ஜூைல 15-ந்தேதிக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    ×