என் மலர்
நீங்கள் தேடியது "மழைநீர் சூழ்ந்து"
- திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்தது
- நகராட்சி தலைவர் வழங்கினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகு தியில் 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ள நீர் சூழ்ந்தது. தகவலறிந்த நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஆணையாளர் ஜெயராமராஜா மற்றும் அலுவலர்கள் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேலா நகர், அவ்வை நகர் பகுதிகளுக்கு நேரில் சென்று மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து தண்ணீர் வெளியேற கால்வாய்களை தூர்வார உத்தரவிட்ட னர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம்பேருக்கு காலை மற்றும் மதிய உணவுகளை நகராட் சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தனது சொந்த செலவில் வழங்கினார். அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் டி.டி.சி. சங்கர், கோபிநாத், செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.