search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேனிஷ் கனேரியா"

    • பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
    • யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோற்றது.

    இந்நிலையில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்படும் பாபர் அசாம் இந்திய வீரர் விராட் கோலியின் காலணிகளுக்கு கூட நெருங்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    பாபர் அசாம் சதமடித்ததும் அடுத்த நாள் அவரை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை உங்களால் பார்க்க முடியும். ஆனால் அவரால் விராட் கோலியின் காலணிகளை கூட நெருங்க முடியாது. அமெரிக்க பவுலர்கள் அவரை சிக்க வைத்தனர். அவர்களுக்கு எதிராக பாபர் அசாம் விளையாட முடியாமல் திணறினார். 40+ ரன்களில் அவுட்டான அவர் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அது பாகிஸ்தான் ஒரு தலைப்பட்சமாக வெல்ல வேண்டிய போட்டியாகும். இந்தியாவை தோற்கடிக்கும் திறமை அவர்களிடம் இல்லை.

    உலகக் கோப்பை வரும் போதெல்லாம் அவர்கள் தங்களுடைய பவுலிங் பற்றி பாராட்டுகின்றனர். ஆனால் அது தான் முதல் போட்டியில் அவர்களுடைய தோல்விக்கு காரணமாகும். அவர்களுடைய ஈகோ எப்போதும் முடிவடைவதில்லை. பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.

    இவ்வாறு கனேரியா கூறினார்.

    • பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா.
    • சுழற்பந்து வீச்சாளரான கனேரியா 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், டேனிஷ் கனேரியா தனது சக வீரரான ஷாகித் அப்ரிடி மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் நான் தான். கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டேன். இன்சமாம்-உல்-ஹக், சோயப் அக்தர் போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. ஒரு கேப்டனாக என்னை ஆதரித்த ஒரே நபர் இன்சமாம் தான்.

    ஆனால் ஷாகித் அப்ரிடி மற்றும் பிற வீரர்கள் என்னை மிகவும் பாகுபாடோடு நடத்தினார்கள். அவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு கூட உண்டதில்லை. மதமாற்றம் செய்வது குறித்து என்னிடம் ஷாகித் அப்ரிடி அதிகமாக பேசுவார். என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ஆனால் இன்சமாம் உல் ஹக் அப்படி ஒருபோதும் கூறியதில்லை.

    மேலும், கனேரியா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஷாகித் அப்ரிடி முன்பு பேசியிருந்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், ஷாகித் அப்ரிடியின் மகள் வீட்டிலிருக்கும் டி.வி.க்கு இந்து பூஜையான ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் இந்து பூஜை செய்ததற்காக டி.வி.யை உடைத்ததை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

    • ஷ்ரேயஸ் அய்யரின் உடற்தகுதி கவலை அளிக்கிறது.
    • இந்திய அணி சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளது. ஆனால், இன்னும் அவர்கள் தயாரா இல்லை.

    கராச்சி:

    இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்தது. இதையடுத்து இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐசிசி நடத்தும் ஒரு தொடரில் இந்திய அணி கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற தொடர்களில் இந்தியா கோப்பையை வென்றதில்லை.

    இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தயாரகவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது:- 

    விராட் கோலி தனது பழைய பார்முக்கு திரும்ப நிறைய காலம் எடுத்தார். அவர் கோலி என்பதால் அணியில் எந்த மாற்றமும் இல்லை. சூர்யகுமார் யாதவை ஏன் வீணடிக்க வேண்டும்? சஞ்சு சாம்சனை ஏன் வீணடிக்க வேண்டும்? ஷ்ரேயஸ் அய்யரின் உடற்தகுதி கவலை அளிக்கிறது. அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் உடற்தகுதியை எட்டுவாரா? இல்லையா?.

    இந்தியா என்ன செய்ய போகிறது? இந்திய அணி சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளது. ஆனால், அவர்கள் இன்னும் தயாரா இல்லை. இந்தியா மோசமாக கிரிக்கெட்டை ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணி சிறந்த அணியை போல் விளையாடியது.

    ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன்ஷிப் திறமைக்காக நிறைய பாராட்டுக்கு தகுதியானவர். அவர் கேப்டன் பதவிக்காக உருவாக்கப்பட்டவர். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்தது. ஆனால், அவர்கள் போராடிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. அவர்கள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தினர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார்.
    • பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது.

    அஷ்வினை சைன்டிஸ்ட் என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

    2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன் 54 ரன்களை எடுத்தார். குறிப்பாக 2-வது இன்னிங்சில் ஷ்ரேயாஸ் உடன் இணைந்து அஷ்வின் அமைத்த பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெற்றிக்கு 145 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன்பின்னர் இணைந்த அஷ்வின் - ஷ்ரேயாஸ் இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.

    2-வது டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என அனைத்து டிபார்ட்மென்ட்டிலும் அஷ்வின் ஜொலித்தார். இதனை பாராட்டியிருந்த முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சேவாக் அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அஷ்வினை பாராட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-


     



    அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களில் அஷ்வினும் ஒருவர் என்று கருதுகிறேன்.

    வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் அவர் எடுத்த 42 ரன்களை சதத்துடன் நாம் ஒப்பிட வேண்டும். இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் அனில் கும்ப்ளேவைப் போன்றவர் அஷ்வின். இந்திய அணியின் நெருக்கடியான நேரங்களில் மிகவும் கூலாக அஷ்வின் பலமுறை செயல்பட்டார்.

    பந்து வீச்சில் மட்டுமின்றி, சில ஆட்டங்களில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

    வங்கதேச அணியின் மோமினுல் ஹக் மிகச்சிறந்த ஆட்டக்காரர். துரதிருஷ்டவசமாக அஷ்வின் கொடுத்த கேட்ச்சை அவர் பிடிக்க தவறி விட்டார். இதற்கானபேரிழப்பை வங்கதேச அணி எதிர்கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி சராசரியை விட குறைவாக உள்ளது.
    • ஒரு விக்கெட் கீப்பராக பண்ட் தனது உடல் தகுதியை அதிகரிக்க வேண்டும்.

    இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. கீப்பிங்கில் சரியாக செயல்படுவதில்லை. பேட்டிங்கில் அவரது சாட் தேர்வு தவறாக உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் கவலை அளிக்கும் விதத்தில் இருந்தது. இவரையடுத்து ரோகித் சர்மாவும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ரோகித் சர்மா உடல்தகுதி குறித்து விமர்சித்துள்ளார்.

    இது குறித்து டேனிஷ் கனேரியா கூறியதாவது:-

    டேனிஷ் கனேரியா

    டேனிஷ் கனேரியா

     ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி சராசரியை விட குறைவாக உள்ளது. இது என்னோட கருத்து. கோலி கேப்டனாக பொறுப்பேற்றதும், அணியின் உடற்தகுதி தேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஆனால் மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது ரிஷப் பண்ட் பின்தங்கியே உள்ளார்.

    ரோகித் ஷர்மா பெரிய அளவில் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு பேட்ஸ்மேன் என்பதால் அவருக்குப் பரவாயில்லை. இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பராக பண்ட் தனது உடல் தகுதியை அதிகரிக்க வேண்டும்.

    இளம் வீரரான ரிஷப் பண்ட் சமீபகால ஆட்டங்களில் சரியாக குனிந்து நிமிர முடியவில்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவரது உடல் எடை பிரச்சினையே இதற்கு காரணமாகும். மன உறுதியையும் முதிர்ச்சியையும் வளர்ப்பதற்கான ஒரே வழி உடற்தகுதியாகும்.

    இவ்வாறு டேனிஷ் கனேரியா கூறினார்.

    • ரிஷப்பண்ட் அதிக எடையுடன் இருப்பதால் விரைவாக செயல்பட முடியவில்லை.
    • ரிஷப்பண்ட் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    கராச்சி:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 24 வயதான ரிஷப்பண்ட் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    முதல் 2 போட்டியிலும் தோற்றதால் இந்திய அணி தொடரை இழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 3-வது மற்றும் 4-வது போட்டியில் தொடர்ந்து இழப்பில் இருந்து தப்பியது.

    தொடரை இழக்காமல் ரிஷப்பண்ட் விமர்சனத்தில் இருந்து தப்பினார். அதே நேரத்தில் அவரது பேட்டிங் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் 5 ஆட்டத்தில் 58 ரன்களை எடுத்தார். அவரது சராசரி 14.50 ஆகும்.

    இந்த மோசமான பேட்டிங்கால் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப்பண்டின் இடம் குறிந்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிக உடல் எடையுடன் இருப்பதால் விக்கெட் கீப்பிங் செய்வது பிரச்சினையாக இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கால்பந்து வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



                                                                                                        டேனிஷ் கனேரியா

     ரிஷப்பண்டின் கீப்பிங் குறித்து பேச உள்ளேன். வேகப்பந்து வீரர்கள் பந்து வீசும் போது அவர் குனியாமல் நின்றுகொண்டே இருக்கிறார். அவர் அதிக எடையுடன் இருப்பதால் விரைவாக செயல்பட முடியவில்லை. அவரது உடல்நலத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். முதலில் அவர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா?

    ரிஷப்பண்ட் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் அல்லது விர்த்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ரிஷப்பண்டுக்கு ஓய்வு கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×