search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவில்"

    • சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே இரவில் தனியாக சுற்றி திரிந்த 10-ம் வகுப்பு மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

    சேலம்:

    சேலம் பட்டர் பிளை மேம்பாலம் அருகே நேற்றிரவு 10 மணியளவில் 15 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர் தனியாக சுற்றி திரிந்தார்.

    இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அங்கு நின்ற லாரி டிரைவர்கள் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது தாய் இறந்து விட்டதாகவும், தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து மாணவியை மீட்ட ேபாலிசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

    எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கொடூர ஆயுதங்களுடன் இரவில் திரியும் முகமூடி கொள்ளையர்கள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கோண பைப் குடியிருப்பு, பூலாம்பட்டி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் முகமூடி அணிந்து இரவு நேரங்களில் சுற்றித் திரிவதாக புகார் எழுந்தது, இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் எடப்பாடி -பூலாம்பட்டி பிரதான சாலையில் உள்ள கோணபைப் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள குடியிருப்புகளில் அடையாளம் தெரியாத சில நபர்கள் முகமூடி அணிந்து சுற்றித் திரிந்தனர்.

    குடியிருப்புகளில் நுழைய முயன்ற அவர்களை அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்து விரட்டியதால், அவர்கள் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர்கள் கையில் வீச்சரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் நோக்கில் அப்பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளை சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர் மேலும் எடப்பாடி நகரம் முழுவதும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் எனவும், எடப்பாடி பூலாம்பட்டி சாலையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×