என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குமரி. போலீஸ் சூப்பிரண்டு"
- பார்சல்களை சோதனை செய்து எடுக்க வேண்டும்
- குமரி. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தலைமையிலான போலீசார் நெசவாளர் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த மேல ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (வயது 20), ராமன்புதூர் நாஞ்சில் நகரைச் சேர்ந்த தீபு(19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வீரமணி, தீபு இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல் ராஜா க்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் எறும்புகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அங்கு நின்று கொண்டி ருந்த ஆசாரி பள்ளத்தை சேர்ந்த ஜெனிஸ் (24), எறும்புகாட்டைச் சேர்ந்த வினோத்(28), மேலரா மன்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரிஜின் பிரகாஷ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செல்போன், 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்ய ப்பட்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தியபோது கூரியர் நிறுவனம் மூலமாக வெளியூர்களிலிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இவர்க ளுக்கு வந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் ஹைதராபாத்திலிருந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமை யிலான போலீசார் அந்த கூரியர் நிறுவனத்திற்குச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது கஞ்சா புழக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.
வெளியூர்களில் இருந்து பஸ்கள் மற்றும் ெரயில்களில் கொண்டுவரப்படும் கஞ்சாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூரியர் பார்சல் மூலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கூரியர் நிறுவனத்திற்கு வரும் பார்சல்களை அனுப்பு ம்போது அனுப்புனர், பெறுநர், முகவரி சான்று, செல்போன் எண் போன்றவை கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும்.
முறையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். முகவரி சான்று இல்லாமல் பார்சல்களை அனுப்பவோ, வினியோகம் செய்யவோ கூடாது.
பார்சல்கள் அனுப்பும் போது சந்தேகம் ஏற்பட்டால் பரிசோதனை செய்த பிறகே பார்சலை அனுப்ப வேண்டும்.
விதிமுறைகளை கடை பிடிக்காத கூரியர் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து அலுவலகங்களிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்ப ட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்