என் மலர்
நீங்கள் தேடியது "சாணிபவுடர்"
- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் அருந்தி அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர்
- போலீசார் கடை உரிமையாளரான மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.
சூலூர்:
சூலூர் அருகே சுல்தான்பேட்டையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் அருந்தி அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர் எனவும், இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் தங்குதடையின்றி சாணி பவுடர் கிடைப்பது தான் எனவும் புகார்கள் வந்தன.
இதனையடுத்து நேற்று சாணி பவுடர் விற்கும் கடைகளில் சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சுல்தான்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மளிகைக் கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் இருப்பது தெரியவந்தது.
அதனை கைப்பற்றிய போலீசார் கடை உரிமையாளரான மாரிமுத்து என்பவரை கைது செய்து கடையில் இருந்த 10 பாக்கெட் பவுடரை பறிமுதல் செய்தனர்.