search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர் விபத்து"

    • மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வாசனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(67). இவர் திருவள்ளூரில் உள்ள உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் வாசனாம்பேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    கண்ணூர் எடை மேடை அருகே மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிளில் மோதியது.
    • சம்பவ இடத்திலேயே முத்தரசனும், செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக பலியானார்கள்.

    செங்குன்றம்:

    தஞ்சை மாவட்டம் திருவுடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தரசன்(வயது34), செந்தில் குமார்(45). இருவரும் லாரி டிரைவர்கள். இவர்கள் சோழவரத்தில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் தங்கி வேலைபார்த்து வந்தனர்.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    சோழவரம், ஜி.என்.டி, சாலையில் செங்காலம்மன் கோவில் அருகே சென்ற போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிளில் மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே முத்தரசனும், செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக பலியானார்கள்.

    தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே மாணிக்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது75). இவரது மகன் பாபு, வண்டலூரில் உள்ள போலீஸ் அகாடமியில் டி.எஸ்.பி.ஆக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சோளிங்கர்-பள்ளிப்பட்டு சாலையில் எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிப்பட்டு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென மாணிக்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே மாணிக்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பிய மேலப்புடி காலனியை சேர்ந்த ஒருவரை தேடிவருகிறார்கள். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.
    • விபத்து குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். மாம்பழ வியாபாரி. இவரது மனைவி நிர்மலா (வயது 33). கேசவன் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து உள்ளார். நேற்று மாலை அவர் அங்கிருந்து மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். டிராக்டரை கேசவன் ஓட்டினார். அவரது மனைவி நிர்மலா அருகில் அமர்ந்து இருந்தார்.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.

    இதில் நிலை தடுமாறிய நிர்மலா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா இறந்தார்.

    இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வடமாநில வாலிபர் மீது மோதியது.
    • வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வடமாநில வாலிபர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின.
    • விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44) கட்டுமான தொழிலாளி. இவர் தனது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோருடன் திருத்தணி அடுத்த பந்திக்குப்பம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில் வந்தபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின. அந்த நேரத்தில் பின்னால் சுரேஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கூரியர் வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் மனைவி கண்முன்பே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் கூரியர் வேன் டிரைவர் பண்ருட்டி, மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்மரியதாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம்அடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது37). இவர் மோட்டார் சைக்கிளில் உறவினர் குமார் என்பவருடன் பேரம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    இருளஞ்சேரி அருகே வந்த போது எதிரே பேரம்பாக்கத்தில் இருந்து தக்கோலம் நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சக்கரபாணி, குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் சக்கரபாணி பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஷகிலா நிறைமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஷகிலா நிறைமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஷகீலா நிறைமதி (59). இவர் திருவள்ளூர் அடுத்த ராம தண்டலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கணவரிடம் விவாகரத்து பெற்று மகன் நவீனுடன் (29) தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஷகீலா நிறைமதி, தனது மகன் நவீனுடன் மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் வெங்கத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெங்கத்தூர் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் வேகத்தடையின் மீது ஏறி இறங்கியது. அப்போது பின்னால் அமர்ந்து இருந்த ஷகிலா நிறைமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ஷகிலா நிறைமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷகிலா நிறைமதி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சிறுவனூர் அருகே ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய தேவி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • பலத்த காயமடைந்த தேவியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், நேதாஜி சாலையை சேர்ந்தவர் தேவி (வயது44). இவர் அ.தி.மு.க.வில் திருவள்ளூர் நகர இணை செயலாளராக இருந்தார். கடந்த 8-ந்தேதி தேவி, உறவினரான அறிவு செல்வன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பூண்டியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    சிறுவனூர் அருகே ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய தேவி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தேவியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மகனை கல்லூரியில் படிக்க வைக்க சென்றபோது பரிதாபமாக தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விபத்து குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    ஆரணி அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவரது மகன் தனசேகரன். இருவரும் இருசக்கர வாகனத்தில் பொன்னேரி எல்.என்.ஜி. கல்லூரிக்கு சென்று தனசேகரனை கல்லூரியில் சேர்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குன்னமஞ்சேரி அருகில் வரும்போது ஏலியம்பேட்டில் இருந்து பொன்னேரி வந்து கொண்டிருந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் பாஸ்கர் தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். லேசான காயத்துடன் தனசேகரன் தப்பினார். அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதித்தபோது வரும் வழியில் பாஸ்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகனை கல்லூரியில் படிக்க வைக்க சென்றபோது பரிதாபமாக தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஹரிபாபு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பலத்த காயம் அடைந்த ஹரிபாபுவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கம்மார்பாளையத்தை சேர்ந்தவர் ஹரி பாபு. வக்கீலான இவர், அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக இருந்தார். இவர் பொன்னேரி அடுத்த மனோபுரம் கோயில் திருவிழாவில் கூத்து பார்ப்பதற்காக கம்மார்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஹரிபாபு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹரிபாபுவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஹரிபாபு இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). கூலித்தொழிலாளி. இவர் மகன் தனசேகரனை பொன்னேரியில் உள்ள கல்லூரியில் சேர்க்க சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குன்னமஞ்சேரி அருகில் வந்தபோது, ஏலியம்பேட்டில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள்மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருப்பாச்சூர் அருகே திடீரென முன்னாள் சென்ற வேன் திரும்பியது. இதில் சாந்தகுமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பலமாக மோதியது.
    • தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 30). இவர் கடம்பத்தூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

    திருப்பாச்சூர் அருகே திடீரென முன்னாள் சென்ற வேன் திரும்பியது. இதில் சாந்தகுமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×