search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-2 தேர்வு முடிவு"

    • புதுவை, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    • 526 மாண வர்கள் 100-க்கு 100 மதிப் பெண் பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி, மே.6-

    புதுவை, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    இதில் புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 526 மாணவர்கள் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியல் 9, வேதியியல் 3, உயிரியல் 4, கணிப்பொறி அறிவியல் 165, கணிதம் 20, விலங்கியல் 1, பொருளியல் 22, வணிகவியல் 81, கணக்கு பதிவியல் 15, வணிக கணிதம் 1, கணிப்பொறி பயன்பாடு 69, மனையியல் 1, பிரெஞ்சு 135 என மொத்தம் 526 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் கணிப்பொறி அறிவியல் 9, கணிதம் 1, பொருளியல் 1, வணிகவியல் 3, கணிப்பொறி பயன்பாடு 3, மனையியல் 1, பிரெஞ்சு 2 என மொத்தம் 20 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    • திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை பாராட்டு.
    • திருப்பூர் மாவட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 10,810 மாணவர்கள், 13,039 மாணவிகள் என மொத்தம் 23,849 பேர் எழுதினர். இந்தநிலையில் இன்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 10,440 மாணவர்கள், 12,802 மாணவிகள் என 23,242 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.45  சதவீத தேர்ச்சி ஆகும்.

    இதன் மூலம் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருப்பூர் மாவட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறந்த கல்வி அளித்த ஆசிரி யர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள்-மாணவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இதேப்போல் அரசு பள்ளிகள் அளவிலும் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 77 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 4,548 மாணவர்கள், 5,935 மாணவிகள் என மொத்தம் 10,483 பேர் எழுதினர்.

    இதில் 4,274 மாணவர்கள் ,5,763 மாணவிகள் என மொத்தம் 10,037 மாண வர்கள் தேர்ச்சி பெற்று ள்ளனர். இதன் மூலம் 97.75 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த 2021 - 2022 ம் கல்வியாண்டில் மாநிலத்தில் 5-ம் இடம் பெற்ற திருப்பூர் மாவட்டம் கடந்த 2022 - 2023-ம் கல்வியாண்டில் 3 இடங்கள் முன்னேறி 2-ம் இடம் பெற்றது.

    24 ஆயிரத்து 732 பேர் தேர்வு எழுதி 24 ஆயிரத்து 185 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய வர்களில் 547 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. 97.79 தேர்ச்சி சதவீதம் பெற்று திருப்பூர் மாநிலத்தில் 2-ம் இடம் பெற்று பாராட்டுக்களை பெற்றது.

    100 சதவீத தேர்ச்சி பெற வைத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முக்கிய பாடங்களில் சென்டம் பெற உதவிய வகுப்பாசிரியர் உட்பட ஆசிரிய, ஆசிரியை களுக்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை சார்பில் காங்கயத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு 2-ம் இடம் பெற்றாலும் 2019, 2020 ஆண்டுகளில் முதலிடம் பெற்று பாராட்டுகளை அள்ளிய திருப்பூர் நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் 97.45 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளதாக திருப்பூர் மாவட்ட கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

    • அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    அரியலூர்:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தில் 8769 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 97.25 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு அதிவேகமாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    • பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் மாதம் 3-ந் தேதி முடிவடைந்தது.
    • சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் 2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் மாதம் 3-ந் தேதி முடிவடைந்தது.

    155 தேர்வு மையங்கள்

    சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காக வும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டது.

    இத்தேர்வு மையங்களில் மாணவிகள் 19 ஆயிரத்து 528 பேரும், மாணவர்கள் 17 ஆயிரத்து 733 பேரும் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதினார்கள். பின்னர் 10-ந்தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி 24 -ந்தேதி நிறைவடைந்தது.

    பிளஸ்-2 பொது தேர்வு முடிவு வெளியீடு

    இதனை தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவை வெளியிட்டது.

    இதில் சேலம் மாவட்டத்தில் மாணவிகள் 18 ஆயிரத்து 809 பேர், மாணவர்கள் 16,300 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 37 ஆயிரத்து 261 ேபர் தேர்வு எழுதியதில் 35109 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 94.22 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும்.

    மாவட்டத்தில் 2 ஆயிரத்து 152 ேபர் தேர்ச்சி பெறவில்லை. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் ேபர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.

    மகிழ்ச்சி

    தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒவ்வொரு படத்திலும் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளோம் போன்ற மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டனர். பலர் செல்போன், கனினி வழியாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் தங்களது மதிப்பெண் பட்டியலை பார்த்தனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தும், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.

    • சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார்.
    • பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ- மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

    இவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை என்று சொல்லப்பட்டது. அதன்படி பார்க்கையில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதி இருக்கின்றனர்.

    தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை 79 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்றன.

    கடந்த 5ம்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார்.

    தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

    மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

    இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

    • 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • அ.கோ.சுதர்ஷிகா 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்றார்.

    அனுப்பர்பாளையம் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அ.கோ.சுதர்ஷிகா 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றார்.

    மேலும் அந்த மாணவி கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி சுதர்ஷிகாவுக்கு பள்ளி தாளாளரும், கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி முதல்வர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் ஆகியோர் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் பாராட்டினார்கள்.

    ×