என் மலர்
நீங்கள் தேடியது "கரித்தூள்"
- கரித்தூள் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
- தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போக்குவரத்து நகரில் பாண்டியராஜ் என்பவருக்கு சொந்தமான கரித்தூள் நிறுவனம் உள்ளது.
இங்கு மரத்துகள்களை துண்டுகளாக மாற்றும் பணி நடைபெறுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றியது.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் காப்பாற்றப்பட்டது. சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.