என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூலாங்குளம்"
- நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் பழைய மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
- கல்வியை போதித்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டினர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் 1981-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை பயின்ற பள்ளி மாணவர்கள் சுமார் 75 பேர் 40 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
பூலாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் 75 பழைய மாணவர்களும் தங்களின் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது.
இதில் தங்களுக்கு பள்ளியில் கல்வியை போதித்த குருவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டி கவுரவித்து அவர்களுடன் சேர்ந்து குழுபுகைப் படத்தை ஆர்வமுடன் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொழுது தங்களின் பள்ளி படிப்பு காலத்தில் நண்பர்கள் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிய நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியப் படுத்தியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் குழு செய்திருந்தனர்.
- குளத்தின் நடுவே காற்றாலை மின்சாரம் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
- திடீரென 4-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பங்கள் தண்ணீருக்குள் சாய்ந்து விழுந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியகுளம் எனும் குளத்தின் நடுவே காற்றாலை மின்சாரம் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
அதில் ஒரு சில மின்கம்பங்கள் சாய்ந்து குளத்திற்குள் விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டும் இந்த குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பிய வேலையில் திடீரென 4-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பங்கள் தண்ணீருக்குள் சாய்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அப்போது குளத்திற்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தற்போது எஞ்சிய மின்கம்பங்களும் சாயும் தருவாயிலேயே உள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்த குளத்திற்கு தண்ணீர் வர இருப்பதால் அதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது பள்ளியின் கட்டிடங்கள் குலுங்குவதால் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.
- பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் கிராமம் முழுவதும் கரும்புகைகள் சூழ்வதாகவும் கூறுகின்றனர்.
தென்காசி:
ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் பூலாங்குளம் கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பூலாங்குளம் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருவதாகவும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது அப்பகுதியில் உள்ள பள்ளியின் கட்டிடங்கள் அதிகளவில் குலுங்குவதால் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.
பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் ஆண்டிபட்டி கிராமம் முழுவதும் கரும்புகைகள் சூழ்வதாகவும் இதனால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.
எனவே இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டு ஆண்டிபட்டி அருகே செயல்பட்டுவரும் கல்குவாரி நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஆண்டிபட்டி மற்றும் பூலாங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் மனு அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்