search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 சதவீதம் தேர்ச்சி"

    • திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கபட்டது.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புஷ்பஸ்ரீ என்ற மாணவி 492 /500 மதிப்பெண்களை பெற்று முதலிடத்திலும் மகா என்ற மாணவி 488 மதிப்பெண்களைப் பெற்று 2-ம் இடத்திலும் தஷ்னி என்ற மாணவி 485 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மகேஸ்வரன் என்ற மாணவன் 539 /600மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்திலும் அருண்குமார் என்ற மாணவர் 525 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்திலும் ராம்குமார் என்ற மாணவர் 513 என்றும் மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இப்பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு போன்நேரு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் வாசுதேவன், பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வாசுதேவன் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    • 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி.மேல்நிலை பள்ளியில் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.3 சதவீத மாணவ மாணவிகளும்,10-ம் வகுப்பில் 100 சதவீத மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியில்12-ம் வகுப்பில் தேர்வு எழுதிய 140 பேரில் 139பேர் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் கண்மணி 579 மதிப்பெண்களும் மோகனா 575 மதிப்பெண்களும் மானசா ஸ்ரீ 574 மதிப்பெண்களும், ஆஷிகாபிலா 572 மதிப்பெண்களும் பெற்றனர். 36 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண்களும், மானசாஸ் ஸ்ரீ வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், குணசீலன் கணினி பயன்பாட்டில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 120 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதில் ஓவியா என்ற மாணவி 488 மதிப்பெண், பார்த்தசாரதி 487 மதிப்பெண்களும் ,ஹரிபிரசாத் 482 மதிப்பெண்களும் பெற்றனர். 44 மாணவ மாணவிகள் 400 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் 5 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் தமிழரசி, செயலாளர் சுஜாதா, பள்ளியின் முதல்வர் திருவேங்கடம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் பள்ளி 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
    • இந்த பள்ளியில் 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். தற்ேபாது வெளியான தேர்வு முடிவுகளில் 203 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி தொடர்ந்து 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை புரிந்துள்ளது. இந்த பள்ளி மாணவி பி.பூஜா 585 மதிப்பெண்ணுடன் முதலிடத்தையும், மாணவிகள் டி.நிரஞ்சனா, எஸ்.ஓவியா ஆகியோர் 582 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும் ஐஸ்வர்யா, ஏ.மணிபாலன், வி.ஆனிஜெர்லின் ஆகியோர் 575 மதிப்பெண்களுடன் 3-ம் டத்தையும் பிடித்தனர்.

    மேலும் வேதியியலில் 9 பேரும், கணினி அறிவியலில் 9 பேரும் உயிரியலில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஆர்.புனிதவள்ளி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் நிறுவனரும் தாளாளருமானஎம்.எஸ்.செங்கோல் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தேர்வு எழுதிய 203 மாணவர்களில், 95 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 24 பேர் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 6 பேர் 575 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×