என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வள்ளியூர்"
- அங்கன்வாடி கட்டிடங்களை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ராஜா ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
- நிகழ்சியில் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் காவல்கிணறு ஊராட்சியில் காவல்கிணறு மற்றும் தெற்கு பெருங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.66 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பொது விநியோக கடையினை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ராஜா ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
நிகழ்சியில் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் கொசிஜின், தாய்செல்வி, காங்கிரஸ் வட்டார தலைவர் அருள்தாஸ், விடுதலை சிறுத்தைகள் தெற்கு ஒன்றிய செயலாளர் மதன், காவல்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சம்பு, மாவட்ட பிரதிநிதி மணிவர்ண பெருமாள், இசக்கியப்பன், தொண்டரணி மந்திரம், ஒன்றிய பிரதிநிதி சிவச்சந்திரன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், மாணவரணி இளங்கோ, பாலகிருஷ்ணன், பழனி நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- முகாமில் யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
- மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி தாவரவியல் துறை, அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜ் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி செயலர் வி.பி. ராமநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் து.ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பாளை யங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பேராசி ரியர் மனோகரன் மற்றும் காமராஜ் நடுநிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எம். ஜெபஸ்டின் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.
முகாமில் வர்ம மருத்து வத்துறை தலைவர் முனிஸ்வரன், புற மருத்துவ துறை மருத்துவர் சுஜாதா, விரிவுரை யாளர் பிச்சையாகுமார், மருத்துவ தாவரவியல் துறை ராஷேஸ், தாவரவியல் துறை தலைவர் விஜயா, காமராஜ் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் லியோன்ஸ் லெட்டிசியா தங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் கல்லூரி பேராசி ரியர் பாலமுருகன், அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் பாலச்சந்திரன், பயிற்சி பயிற்றுநர் இளங்கோ ஜெகதீஸ், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ முகாமில் தெற்கு கள்ளி குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் சளி காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுவலி, கழுத்து வலி மற்றும் வர்மம், புறமருத்துவம், யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயா ளிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி நிர்வாகம், தாவரவியல் துறை மற்றும் அகத் தர மதிப்பீட்டு குழு இணைந்து செய்திருந்தனர்.
- ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை தெற்கு மாவட்டம் ராதாபுரம் தெற்கு ஒன்றியம் பா.ஜனதா சார்பில் ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் பொறுப்பு வகித்தார். அரசு தொடர்பு பிரிவு தலைவர் வக்கீல் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000 வழங்கிட கோரியும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த கோரியும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும், மின்சார கட்டணத்தை குறைத்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சட்டமன்ற பார்வையாளர் சுந்தரம், கிளை தலைவர் சந்திரன், காரியாகுளம் முருகன், கணபதிநகர் தாசன், தவசிகுமார், சுப்பிரமனியபேரி ஈஸ்வரன், சுபாஸ், முருகன், மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது.
- இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. டி.எஸ்.பி. யோகேஷ் குமார் மற்றும் ஆர்.டி.ஓ. பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது. முன்னதாக சாலை பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலையில் செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் பள்ளியின் தாளாளர் துரைச்சாமி, தலைமை ஆசிரியை அனு மற்றும் பள்ளி நிர்வாக அலுவலர் மகாராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- விழாவுக்கு கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் டி. சாந்தி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் நிர்மலா தொடக்க உரையாற்றினார். முதல்வர் து. ராஜன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. முடிவில் சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறை தலைவர் எம். மனோகர் நன்றி கூறினார்.
- போட்டியில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி தருணுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
வள்ளியூர் :
குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சிறப்பு கோடைக்கால இறகுப்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக வள்ளியூர் எஸ்.டி.என். பேட்மிட்டன் கிளப்பில் நடைபெற்றது. போட்டிகளில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் எஸ்.டி.என். பயிற்சி அரங்க உரிமையாளர் எட்வின் பிரைட், நிஷா எட்வின் மற்றும் வள்ளியூர் வணிகர் நல சங்க தலைவரும், நிலா பேக்கரி உரிமையாளருமான தா.எட்வின் ஜோஸ், வணிகர் நல சங்க செயலாளர் முல்லை கவின் வேந்தன், மருத்துவர் சங்கர வெங்கடேசன், எஸ்.என். ஜுவல்லரி உரிமையாளர் மணிவண்ணன், டி.ஜே.ஆர். கட்டுமான நிறுவனத் தலைவர் தேவேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் புஷ்பராஜ், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி தருணுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் பிரியா கவின் வேந்தன் செய்திருந்தார்.
- போலீசார் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
- விசாரணையில் அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
நெல்லை:
வள்ளியூர் கேசவநேரி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு வள்ளியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 50 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- 10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலயதிருவிழா கடந்த 21-ந் தேதி பங்குதந்தை லூர்துசாமி மற்றும் தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கே. மணி ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்ப்பவனி
திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை, திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் வழிபாடுகள் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று மாலை பாதிரியார் போஸ் தலைமையில் பாதிரியார்கள் சந்தியாகு, செல்வின், கோட்டார் ஷிபு ஆகியோர் முன்னிலையில் பெருவிழா மாலை ஆராதனை மற்றம் நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது வி.பி.எஸ். மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அசனவிருந்து வழங்கப்பட்டது. பின்னர் இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
10-ம் திருவிழா
10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் பல்வேறு ஊர் பங்குகளை சேர்ந்த பங்கு தந்தையர்கள், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தெற்குபுதூர் பங்குதந்தை லூர்துசாமி, சி.எம். அடிகளார், தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
- விழாவுக்கு கல்லூரியின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார்.
- சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் கலந்து கொண்டார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 52-வது விளையாட்டு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் பேசினார். முதல்வர் ராஜன் வரவேற்றார். கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் ஜே.ஜெய்சன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் இயக்குனர்கள், கல்லூரிக்குழு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காமராஜ், ரகுநாதன், லிங்க செல்வன், கோல்டன் செல்வராஜ், பண்ணை செல்வகுமார், நவ்வலடி பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை பேராசியர் மரிய கிரிஸ்டின் நிர்மலா நன்றி கூறினார்.
- விழாவிற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
- நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டுவிழா நடைபெற்றது. ரஞ்சிதம் வரவேற்று பேசினர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் ஓராண்டு கால கல்லூரி பணிகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கி பேசுகையில், தனது கனவு கல்லூரியான மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாகிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். ஆண்டுவிழா நிகழ்ச்சியை வடிவமைத்த முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளையும் பாராட்டினார் .
விழாவில் நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் தனது சிறப்புரையில், மாணவிகள் எதையும் மற்றவர்களைப் பார்த்து செய்யாமல் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் சிந்தனையுடன் இக்கல்லூரி மாணவிகளை போல செயல்பட வேண்டும் என்றார்.
பின்னர் கல்லூரியின் இணையதளத்தை (www.mascedu.org) நிறுவனத் தலைவர் லாரன்ஸ் மாணவி களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தமிழ்த்துறை உதவி பேராசிரியர் யா. லலிதா எழுதிய "கைக்கு எட்டும் தூரத்தில் மருத்துவம்" என்னும் நூலை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வெளியிட ,கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பெற்றுக் கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியார்கள் மற்றும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை எட்டயபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஒட்டி வந்தார்.
- விபத்தில் 2 லாரி டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வள்ளியூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை எட்டயபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஒட்டி வந்தார்.
அந்த லாரியின் பின்னால் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றொறு லாரி வந்துள்ளது. இதனை மேலசேவலை சேர்ந்த நீலகண்டன் என்பவர் ஓட்டி வந்தார்.
வள்ளியூர் கோவனேரி நான்கு வழி சாலை அருகே வந்த பொழுது முன்னால் சென்ற சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி மீது பின்னால் வந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி அதி வேகமாக மோதியது.
இதில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் சாலையில் விழுந்து சிதறியது. தகவல் அறிந்த வள்ளியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிதறிய சிலிண்டர்களை அப்புறப்படுத்தி லாரியையும் அங்கிருந்து அகற்றினர்.
இந்த விபத்தில் 2 லாரி டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
- மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
மத்திய அரசின் தொழி லாளர் கொள்கைகளை எதிர்த்தும், நான்கு சட்ட தொகுப்பை கைவிடக் கோரியும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல்
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சடையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் 240 நாட்கள் பணி புரிந்தால் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், எந்த பணி புரிந்தாலும் ரூ. 21 ஆயிரத்திற்கு குறையாமல் மாத சம்பளம் வழங்கிட வேண்டும், நல வாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு ரூ. 6 ஆயிரம் குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் நிர்வாகிகள் ரங்கன், பாலகிருஷ்ணன், உலகநாதன், கிருஷ்ணன், பாலு, செந்தில் முருகன், சுடலை கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்
இதேபோல் வள்ளியூர் பழைய பஸ் நிலையதில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மணியன் தலைமையில் சேதுராமலிங்கம், முருகன், பாலன், கலை முருகன், சுதாகர், பன்னீர்செல்வம் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்