என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யஷ்வந்த் சின்ஹா"
- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
- இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் (மக்களவை, மேல்சபை), எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளம் சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரி பிரிப்பதற்கு வசதியாக இரு நிறத்தில் வாக்கு சீட்டு அளிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாராளுமன்றத்தில் வரும் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் 61 சதவீத வாக்குகளை பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் திரவுபதி முர்மு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திரௌபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு
- ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பதாக கூறியது.
அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
திரௌபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு திறமையான, நாட்டை வழிநடத்தும் எண்ணம் கொண்ட ஜனாதிபதியே வேண்டும்.
- மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது முட்டாள்தனமான திட்டமாகும்.
திருவனந்தபுரம்:
இந்திய ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா கேரளாவில் ஆதரவு திரட்டினார்.
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசிய யஷ்வந்த் சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுக்கு ரப்பர் ஸ்டாம்பு ஜனாதிபதி தேவையில்லை. திறமையான, நாட்டை வழிநடத்தும் எண்ணம் கொண்ட ஜனாதிபதியே வேண்டும்.
பாரதிய ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர், பிரதமருக்கு பின்னால்தான் நின்று கொண்டிருந்தார். ஆனால் மன்மோகன்சிங் காலத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதிபா பாட்டீல் மனு தாக்கல் செய்தபோது மன்மோகன் சிங் வேட்பாளருக்கு பின்னால் நின்றிருந்தார்.
இந்த தேர்தலில் எனக்கு போதுமான வாக்குகள் கிடைக்காது என்று கூறுகிறார்கள். எப்போதும் எண்ணிக்கை கைகொடுக்காது. தேர்தலின்போது எனக்கு போதுமான ஆதரவு கிடைக்கும். என்னை ஆதரிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் இப்போதைய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குறிப்பிட்ட சிலரே பயன் அடைந்தனர். அவர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி விட்டனர்.
இந்த நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இது இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மோசடியாகும்.
மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது முட்டாள்தனமான திட்டமாகும். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடுகளுடன் விளையாடுவது ஆபத்தானது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க இதுபோன்ற திட்டங்கள் தீர்வாகாது.
எதிர்கட்சிகளை மிரட்ட மத்திய அரசு அலுவலகங்களை ஆளும் கட்சி பயன்படுத்துகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளே இதற்கு உதாரணமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திக்கிறார்.
- திமுகவின் ஆதரவை யஷ்வந்த் சின்ஹா கோருகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மனுதாக்கல் செய்துள்ள யஷ்வந்த் சின்கா நேற்று முதல் பல மாநிலங்களின் தலைநகரங்களுக்கு சென்று பிரசாரத்தை தொடங்கினார். பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கேட்கவுள்ளார். இதற்காக, நாளை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திக்கிறார்.
நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவை யஷ்வந்த் சின்ஹா கோருகிறார்.
- ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி ஆகியோரிடம் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
- எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதிய யஷ்வந்த் சின்கா, அவர்களின் ஆதரவை கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி :
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளை தொடங்கி விட்டார்.
அந்தவகையில் பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது ஆதரவை கேட்டுக்கொண்டார். அத்துடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜனதா மூத்த தலைவரும், தனது வழிகாட்டியுமான எல்.கே.அத்வானி ஆகியோரிடமும் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய யஷ்வந்த் சின்கா, தன்னை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்தபோது அவரது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அளித்த உறுதிமொழியை நினைவுபடுத்தினார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள யஷ்வந்த் சின்கா, அவர்களின் ஆதரவை முறைப்படி கேட்டுக்கொண்டார்.
- அடுத்த மாதம் 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.
- அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந்தேதி பதவி ஏற்க வேண்டும்.
புதுடெல்லி :
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடித்து வருகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 9-ந் தேதி வெளியிட்டது.
இதன்படி அடுத்த மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4,033 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க தீவிர ஆலோசனை நடந்து வந்தது. நேற்று மாலை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது.
அதில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே நேற்று இரவு பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்.
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவுபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் இறந்து விட்டனர்.
அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த திரவுபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், கால்நடை வளர்ச்சித் துறை மந்திரியாகவும் இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி வரை ஜார்க்கண்ட் கவர்னராக பதவி வகித்தார்.
ஜார்கண்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையும் திரவுபதி முர்மு பெற்றார். ஒடிசாவை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று கூட்டி இருந்தார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் மூத்த தலைவர் மனோஜ் ஜா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தேசிய மாநாடு கட்சியின் ஹஸ்னயின் மசூதி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் என்.கே.பிரேமசந்திரன், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்காவை (84) நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை சரத்பவார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
யஷ்வந்த் சின்கா, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1984-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்தில் குதித்தார். ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக, ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளராக, பா.ஜ.க.வின செய்தி தொடர்பாளராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக பணியாற்றி உள்ளார்.
நேற்றுதான் அவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. அதுவே நடந்துள்ளது. யஷ்வந்த் சின்கா, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது மத்திய நிதி மந்திரியாக பணியாற்றி உள்ளார். வாஜ்பாய் பிரதமர் பதவி வகித்தபோது மத்திய நிதி மந்திரியாகவும், வெளியுறவு மந்திரியாகவும் இருந்துள்ளார்.
- ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி இருந்தார்.
- டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
பின்னர், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நியமன் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்